பக்கம் எண் :

80மலரும் உள்ளம்

சிறு விளக்கு

எண்ணெய் ஊற்ற வில்லை - யாரும்
   ஏற்றி வைக்க வில்லை.
சின்னஞ் சிறிய விளக்கு - பெயர்
   தெரியு மோதான் உனக்கு?

இருந்த இடத்தில் இல்லை - அது
   இங்கு மங்கும் போகும்.
பறந்து செல்லும் விளக்கு - அதைப் 
   பார்த்த துண்டோ? சொல்வாய்.

கறுத்த வானம் தன்னில் - நன்கு
   கண்சி மிட்டும் மீன்போல் 
இருட்டில் ஒளியைக் காட்டும் - அதை 
   என்ன வென்று சொல்வாய்?

ஃ ஃ ஃ

கண்ணைக் கவரும் அதனை - நான்
   கண்டு பிடித்து விட்டேன்.
மின்மி னிதான் அதுவாம் - தம்பி 
   வேறு எதுவும் இல்லை!