சுதந்திரத் திருநாள்
சொந்த மான நமது கொடியை
ஏற்றிடு வோமே - அதைச்
சுற்றி நின்று கூட்ட மாகப்
போற்றிடு வோமே.
இந்த நாளே அடிமை வாழ்வு
தொலைந்த தென்றுநாம் - ஒன்றாய்
எங்கும் முரசு முழங்கக் கொடியை
ஏற்றிடு வோமே.
வெள்ளை ஆட்சி முடிந்து போன
வெற்றி நாளிதே - நாம்
மேன்மை மிக்க சுதந்தி ரத்தைப்
பெற்ற நாளிதே!
வெள்ளை யோடு சிவப்பு, பச்சை
சக்க ரத்துடன் - நம்
வீட்டின் மீது கொடி பறந்து
நிற்கும் நாளிதே!
|