பக்கம் எண் :

மலரும் உள்ளம்89

ஆடும் மயில்

நட்டு வனார் இல்லாமலே
   ஆடும் மயில் இது - என்றும்
நடன மேடை ஏறிடாமல் 
   ஆடும் மயில் இது.
கொட்டு முழக்கம் இல்லாமலே
   ஆடும் மயில் இது - நன்கு
குலுக்கி மினுக்கித் தளுக்கியுமே
   ஆடும் மயில் இது.

பயிற்சி ஏதும் இல்லாமலே 
   ஆடும் மயில் இது - பின்
பாட்டு யாரும் பாடிடாமல்
   ஆடும் மயில் இது.
மயக்கும் வண்ண உடையுடனே
   ஆடும் மயில் இது - அதில் 
வட்ட வட்டக் கண்தெரிய 
   ஆடும் மயில் இது.