காலில் ஏதும் சலங்கையின்றி ஆடும் மயில் இது - இரு கண்ணில் மையும் தீட்டிடாமல் ஆடும் மயில் இது. மாலை நேரம் சோலையிலே ஆடும் மயில் இது - "நல்ல மழையே, வருக, வருக," என்றே ஆடும் மயில் இது.