அறுபொறியின் வடிவாகி
அங்கையிலே பரைதந்த
|
|
|
சத்திவாங்கி |
|
அமரர்படுந் துயர்நீங்கச்
சயமோங்க அசுரர்குல |
|
|
மூலந்தன்னை |
|
அடிகொண்டு களைகின்ற
இளமைந்தன்அமர்கின்ற
அசலங்கொள்புகழ்தன்னை அறைகின்ற இதுவண்ணம்
|
( 65 ) |
|
அங்கண் ஞாலத்திருப்பவர் வானவர்
அங்ஙனேநின்று கண்டு துதித்திடத்
திங்கள்சூடுஞ்சிகரமு நாற்றிசைச்
சேருஞ் சாரலுஞ் சீதளத் தூற்றலும் |
( 70 ) |
திரிகின்ற புயல்வேழமரிகண்ட உடனோடச்
சரிகின்ற மலையென்று நரிகண்டு அங் ககம்வாட-
மலர்க்குலங்கள் பொழிதேனும் மஞ்சுமொழி பனியும்
சந்திரதாரையும் மஞ்சனநீராய்த் தவத்தர்
செஞ்சடையில் சோர மங்களப் பண்பாடிவண்டு
|
( 75 ) |
|
மகரந்தப் பொடிவாரித் துகள்மிஞ்சப் புவிவீச
வதிகின்ற குறமாதர் இருகெண்டை விழிகூச
மல்லிகைப்புதர் வெண்நகையாடவும்
மாதுதனமிசை ஆலிலை போர்த்திடும்
|
|
|
நல்லதென்றல் அணைந்திடக்
கன்னிமர்
நாணிமேனிச் சிலிர்த்துக் குலைந்திடும். |
( 80 ) |
நளிருற்ற குரவம் சந்தனம் மற்ற தருவுந்தம்
நறைகொட்ட நிறையுஞ் செங்கமலப் பொற்றடமுற்றும்
அரவுதரு மாணிக்கம் மரைமுத்தம் வரையீன்ற
வச்சிரம் பொற்சன்னராசி அற்புதங்கொள்
ஜோதிவல்லியிற்ற கலந்த போயவல்லன்
|
( 85 ) |
|
இருள்முற்றும் ஒளியாகு
மிகுரந்த மணிமாலை
எழிலுற்ற மலைமாது மிலைவுற்றள் எனவோத
|
|
எங்கு நோக்கினும் புள்ளினத் தின்னொலி
இடையில் வேடர்செய் ஆட்டங்கள் பாட்டுகள்
தொங்குமாலையின் வெள்ளருவிக்குலம்
தூரநின்றிழி போதொரு சந்தப்பண்
|
( 90 ) |
|
தொழுபக்தர்
முருகா நுன்
அழுகைக்கண் எழுமோசை
சுரமொத்த கரதாளம்
|
( 95 ) |
|
நிரையொத்தது இடிமேளம். |
|
குஞ்சரியோர்பாகம்
குறவள்ளி ஓர்பாகம் கொஞ்
சக்கைவேல் கொட்டொலியும் தழைத்தொளிரும்
கருணைநோக்கும் குளிர்வதனம் ஈராறும் நளிர்பதமும்
கொண்ட கோயில்
|
( 100 ) |
|
குறைதீர விரைவாக வருவார்கள் ஒருகோடி
குகனே ஷண்முகனே என்று அடிசோர நடமாடிக்
|
|
குப்பலாகப்
பொற்காவடித் தோள்தூக்கிக்
கொள்கையாவுங் குமாரன் தன்மேலாக்கி
சுப்புரத்தினம் சொற்றமிழ்ப் பாவாக்கில்
சூழத்தென் மயிலாசலமே நோக்கிச்
சுராதிபனை வாழ்த்திநலம் துய்ப்பர்அதி சோபிதமே
|
( 105 ) |