உலகில் பிறந்துநான் கண்டபயன்
ஒன்றில்லை
உற்றஇள வயது தூண்ட
ஒருத்தியை மணந்தவுடன் அவளோடு தொடர்ந்தவைகள்
ஒரு கோடியாம் விசாரம்
சிலகணம் இருந்தகளி மறுகணம் கண்ணிலே |
(
5 ) |
தின்னவரு
விவகாரமிச்
சென்மமேன் மனைவியேன் உறவுசொல் தீமையேன்
எனநைந்து வாடுநேரம்.....
மலர்அனைய நயனமும் வளர்கின்ற சிறுமார்பும்
மலைஅரசி தந்தபாலே |
(
10 ) |
வடிகின்ற குவிவாயும் எழிலாடு
தளர்நடையும்
வாய்ப்பஎன் அகமீதிலே
கலகலென மயிலினொடு விளையாடி வருகோலம் காண்பனேல் கவலையுண்டா
கன்னலென வயலெலாம் செந்நெல்வளர் மயில்வாழ்
கந்தா குழந்தைவேலா! |
( 15 ) |
வரிசைமா
மணிவீடு மண்டுசெந் நெற்குவியல்
வளம்வேண்டி வேண்டிஎன்கை
வைத்ததலை வைத்தபடி வசையிட்டு நின்னைநான்
வாய்சோர ஏசுநேரம்
பரிசுற்ற வறியர்போல் கார்த்திகைப் பெண்களென
பாலகுமாரஎன்று
பளிங்குகன் னஞ்சேர முத்திடுவர் அவண்நீங்கிப்
பாய்புனல் கங்கைஅன்னை
விரைவினில் அழைத்தனள் என்றோடி வருகையில்
வெண்கங்கை தாவநீபோய்
விமலையாம் அன்னையைக் கண்டிடப் போவதாய்
விடைபெற்ற னகமீதிலே
கருமலை பொடித்தவடிவேல்தூக்கி வருகோலம்
காணிலென் வறுமையுண்டோ
கற்புடைய மாதர்சூழ் வெற்பணியு மயிலம்வாழ்
கந்தா குழந்தைவோலா!
|
( 20 )
( 25 )
( 30 ) |
தன்னிலையில்
இன்றிநல் வாதமும் பித்தமும்
சிலேட்டுமமும் முறைபிறழ்ந்த
தன்மையால் கண்குழிந்து எழில்மேனி தசைதிரைந்து
எந்நேரமுங் கவன்று
தின்பன தவிர்ந்து தின்னாதன விழுங்கிமனை
சேர்ந்த அனை வருநோயினால்
செய்வதறியா அதுவருவார்போவர் தம்மிடம்
செப்பியுழல் கின்றநேரம்
அன்பிலுரை அருணகிரியின்தமிழின் நவநீதம்
அள்ளிஅறு வாய்மலர்மேல்
அப்பிநற்கரிமுகன் தம்பிவா, என்னவும்
அம்மான் அணைக்க வரவும்,
கன்னலென என்றன்அக மீதுவால் காணில்தலை
காட்டுமோ பிணிகளென்பால்
கரிவண்டெலாம் பண்கள் சொரிகின்ற மயிலம்வாழ்
கந்தா குழந்தைவேலா! |
( 35 )
( 40 )
( 45 ) |
ஐம்பெரும்
பூதங்கள் என்னைஅரசாளவும்
அவர் சொல்லில் நானாடவும்,
ஐங்குரவர் சொன்னெறிகள் திரணமாய் எண்ணி இங்கு
அல்லனபுரிந்து நெஞ்சம் வெம்புகடல் வாய்ப்படு துரும்பாய் அலைந்துபல
வெறுமனிதர் காணில்அச்சம்
மேலாக, நாலாவிதத்திலும்இவ் ஆபத்தில்
மீளநான் வாடுநேரம்,
சம்பிரம வாடகத் தம்பமிசை ஆரமாம்
சங்கிலி இசைத்ததொட்டில்
தாலாட்ட மலைவல்லி பாலூட்டெனாஅவளும்
தன்தோளை நீட்டஅன்றே
கம்பிமயில் மீதுநீட்டிஎனதகம் வரல்காணில்
கனமையல் எனைஅண்டுமோ?
கான்குரவா கவணேறி வான்மோது மயிலம்வாழ்
கந்தா குழந்தைவேலா!
|
( 50 )
( 55 )
( 60 ) |
மனிதர்மனிதர்க்கடிமை ஆகுமொரு தீக்கனவு
மண்ணிடை யிருப்பதில்லா
வகைக்கெனது நாட்டினர் அறப்போர் நடந்திடுவ
வாய்மையில் பண்டைநாளில்;
எனினுமென தன்பான "நாடின்று மற்றோர்
இனத்தவர்க்கு அடிமையாதல
என்னும்இக் கோலத்தை எண்ணியேன் தோள்பார்
நான்பார்த்து இருக்கும்நேரம்
கனியுதடு புன்னகை கொழிக்கமுக நிலவுதொறும்
கட்டவிழ் குழல்மொய்ப்பதைக்
கையால் விலக்கியே ஒய்யாரமாக நடை காட்டி என னகமீதிலே
கனல்மேனி இருள்கூடிய வருகோலம் அதுகாணக்
கடும்பகை இருப்பதுண்டோ?
கதியிதென உலகெலாம் வதியும்எழில் மயிலம்வாழ்
கந்தா குழந்தைவோலா!
|
( 65 )
( 70 )
( 75 )
( 80 ) |