பக்கம் எண் :

மயிலம் சுப்பிரமணியர் துதியமுது

விநாயகர் காப்பு
வெண்பா


சீர்மணக்குந் தென்மயில வெற்பில் திருமுருகன்
பேர்மணக்கும் பாட்டில் பிழையகல-ஓர்மணக்கு
ளத்தன்அப்பன் நற்களிற்றுஇணைப்பதந்தனைத் துதிப்பன்
எத்த னப்ப டிக்கு வெற்றி யெற்கு



விநாயகர் துதி

வண்ணம்

(இராகம்-நாட்டை-தாளம்-ரூபகம்.)

உல குதி னமு னெழில் மல ரடி
உள மதி னினை குல தெனி லவர்
உறு வினை எவை களு மிலை யென   இனிதாமால்

உமை யவள் தரு முதன் மக னுனை
உள மொழி மெய்க ளினி லடி யவன்
உவ கையொ டுதொ ழுகு வதை யினி   மறவேனே

மலி யவல் பொரி யொடு பய றுகள்
மது நிகர் கனி வகை யனு தினம்
வரை யென நிறை யவு னது திரு      வடிவேலே

மன மகி ழஇ டுவ னருள் ககு
மர னழ ஒரு கனி யைய ரனை
வல மிடு வதி லுணு மரி மகிழ்        மருகோனே

மலை மத கரி இடர் புரி யுமொர்
மதி யிலி அசு ரனை ஒரு நொடி
மடி யவ மரர் துயர் களை யுமொர்     அடல்வீரா

வரு புதை யலி னிதி யென மலை
வழி யரு வியெ னவெ னது கவி
வள மொடு புதி யன வென விரி       புவிமேலே

பொலி தர அவை புகழ் பெற மிகு
புல வரெ வருமினி தென நனி
புவி யினர் உள மதி லொளி தர       அருள்வாயே

புரை தவிர் தெரு வரி சையொ டமர்
புனி தமொ ழிய ரிவை யர்க ளுறை
புது வையி லமர் கய முக முறு        பெருமாளே
( 5 )





( 10 )






( 15 )






( 20 )





( 25 )
சிவபெருமான் துதி

வண்ணம்

(இராகம்: தேசிகம், தாளம்: ஆதி)

நதியொடும் பிறைஅணிந்திடு பரம்பொருளெனுஞ்
சிவனை வந்தனை புரிந்தாலே-உயர்

நலமருவிடு நிறைகலைகுடிபுகருவம் அறிவுபெருகிவிடும் உலகுபுகழ்பரவும்

ஆருமெச்சுவார்பகைவர்
போர்நினைத்திடார்நிதிகு
பேரனுக்கு மேல்நிறையும்
வாழ்வளிக்குமே மனிதரே


உமக்கெலாமளிக்க வேவிருப்பு மாயிருக்கி றானிருக்கு
மாலையத்தி லேமிதித்த காலடிக்கு நேரிலுற்று வாழ்வளிக்க
வேணுமப்ப னேயெனச்சொ னால்நொடிக்கு ளேயளிப்பன்
   இப்புவிக்கும்எப்புவிகும் எப்பொருட்கும் அப்பன் வித்து
   தோலுடையான்ஆடரவே தானணிவான் மாமுடிமேல் [ந]

   உலகமுஞ் சடஉடம்பெவைகளும் கணமறைந்து
   அழிவுறுஞ் சிறிதுநம்பாதீர்-தொகை
நகையுடை பொருள்நிலம்-மனைமகள்உறவினர், பரி 
கரிமுதலியவை, களிலொரு பயனிலை

காலன்விட்ட பாசமதை
நேர்விலக்குமோ இவைகள்
போமுயிர்க்கு வீதிவரை
தான்வரச்சொனால் வருவ

தேதுசற்று நீரிழைத்த ஓர்அறத்தொடே பெருத்த பாவமொக்க
வேவழிக்கு நாடிநிற்பதால்அதற்குளேயெனப்ப ன்ஆணைசற்று
மேமறுத்திடாது நற்ற போதனர்க்கு நேசம்வைத்து

   நித்த நித்த மெய்த்த வத்தொ டுற்றபத்தி பெற்றிருப்பிர்
   ஈதலவோ மானிடரே பூதலமே லாதரவே         [ந]

   அமரர்தம் பகைகெடும் திரிபுரம் பொரிபடும்
   பரமனம் பகம்விரிந் தாலே-நிறை
  அருளினி லுலகமு நிலைபெறு வனமறை முடிவினில் நடமிடு 
பொருளென அறைகுவர்


ஆசைவிட்டு நாடுமன
தோரிடத்தி லேவிடுத
போதனர்க்கு மாமுனிவர்
ஆனவர்க்கு மாமலரி


லேயிருக்கும் வேதனுக்கும் மாயனுக்கு மேகிடக்கி லாதவஸ்து
மாமலைக்கு ளேமுளைத்த ஓர்கொடிக்கு நேயவஸ்து மாபுவிக்கு
தாரவஸ்து யாவினுக்கு மூலவஸ்து தேனையொத்த
   சுப்பு ரத்தினத்தி னற்ப தத்தி னுக்கி னித்த வஸ்து
   வரதலினீ ரேபுவிமேவீ துணர்வீர் வாழ்குவிரே [ந]


( 30 )






( 35 )






( 40 )






( 45 )





( 50 )






( 55 )








( 60 )
உமை துதி

வண்ணம்

(இராகம்: தேசிகம், தாளம்: ஏகம்)

வாய் திறந்தழுமோர் குழந்தையின்
மேலிரங்கிடு வாய் தினம் படு
வாதை கொஞ்சமதோ முனஞ் சிறு
பாலனங்கழவேகறந்தமு
தேதருங்கருணாலையந் தனி
லேவணங்கிடு பேதையுங்கடு
காகிலும்பெற வேநினைந்தனன் யாதையுங்கரு
                  தாமலின்றெனை


ஆளலுனது பாதமலது வேறுகதியு லோக மதனில்
ஏதுபுவன நாயகியுமை பார்வதியுப காரிய மலி
அட்டதிக்குவிண் யாவுமீன்ற அன்னை காமாக்ஷியே


பேயெனும்படி தாரணிந்தெழி
லாய் நடந்திடு தோளொடுங் கனி
வாயொடுந் தளிர் மேனியெங்குமொ
ரேமணந்தர வாரிடுங் குழல்
காரெனும்படி மார்பில் வெண்துகில்
ஊரறிந்திட வேதிறந்தெனை
மாதெனும்பெறு மேதி வந்தினி
மேலும் வஞ்சனை யால் நெருங்குமுன்

வாசிவபெரு மானிடையினி லே படர்கொடி யேஇமமலை
மாதவமணி சோதனை புரி யாதுன திரு மாமலரடி
மற்றுவப்புடன் ஈதல் வேண்டும் வல்லி காமாக்ஷியே,


சாதியுஞ்சம யாதியுந்தணி
யாதசண்டையி லேமுயன்றன
நிதியுங்கிடையா தறங்கிடை
யாதினம்பரி காசமும்பட
வே பணத்தனை யே நினைந்ததி
கார மும்பெற நீசதந்திர
மே புரிந்திடு மானிடந்தனி
லேகிடந்தலை யாது வந்தெனை

யாவருமொரு சோதரரென மாசமாச ஞானமுதய
மாகிடும்வணமே மிகுதிறனாயறுதினமே இனிமையின்
மெய்க்குழைத்திடும் வீரமாண்பு செய்ய மீனாக்ஷியே.


நோய்களும்பல கோடியுண்டுஅதி
னால் வருந்திடு போதுவந்தவு
ஷாதிதந்துமொர் சோதிடன் குண
மாகுமென்று அதி லே பணங்குறை
யாது தந்தொரு நாள் கடந்தபின்
ஓலை வந்தது மேலிருந் தென
ஓடி வந்துஎம தூதரும் தம
தூர் வரும்படி கூவும் முன்புஎனை


ஆதரிமுனமோர் நொடியினிலே அசுரரின் வேறுஅழிவுற
வேஎழில்மயில் வாகனனிடம் வேலுதவிய தாய்நிருமலி
சுப்புரத்தினம் நாளும் வேண்டும் அம்மை மீனாக்ஷியே.

( 65 )




( 70 )









( 75 )




( 80 )





( 85 )






( 90 )





( 95 )






( 100)





( 105)
திருமால் துதி

வண்ணம்

(இராகம்: சகானா, தாளம்: ஆதி)


  பாலாழிமேல் இனிது கண்துயிலும் மாதவனே
  மாலேஉன் மார்பிலணி வண்துளப மாலையிலே
வந்து மொய்த்திடுஞ் சிறைப்பொன் வண்டினுக்கிருந்த 
மெய்த்த

வந்தனிற்று ரும்பிடைக்கிகைந்தெனக்கி டும்படிக்கு
  மட்டினிக்கு மெய்ப்பதத் திளைத்துதித் திளைத்து நிற்கும்
                               
மகன்மேலே

  மூலாவிலாசவிழியின் கடையினாலெனையே
  ஏலாதெனாதருள்க மங்களகுணாலையனே
எண்டிசைக் குளங்கணுற்ற உம்பருக்குள்எங்கெனக்குன்
அம்புயப் பதந்தனக்கு இணைந்த நற்சுகங்கிடைக்கும்
  இச்சகத்தினைக் களிப்பினிற்படைத்து அளித்தழிக்கும்
                                எழிலோனே!

  மேனாளிலே முதலை தின்றிடுமுனே அரியே
  கோனேயுன்ஆதரவு தந்தருளுவாய் எனுமோர்
குன்றையொத்த வெட்சினப்பெருங் கரிக்கிரங்கிஅக்கண்
அந்தரத்து இருந்து உவப்பொ டும்புவிக்குவந்து அடுத்த
  ரைக்கணத்தில்அக்கரிக்கு மெய்ப்பதத்தினைக்கொடுத்த
                                அருளாளா!

  தேனாறு பாய்குவது கண்டுருகினேன் அதையே
  நானாரவே யுணுதலென்றுனது கோயிலிலே
மன்றில்விட்டிகழ்ந்து துட்டனன்று இழுக்க மங்கை விக்கி
னந்தவிர்ந்து வஞ்சமற்ற பஞ்சவர்க்கு உரங்கொடுத்து
வித்தை கற்கும்இச்சை சுப்புரத்தினத்தினுக்குஅளித்த பெருமாளே!



( 110)







( 115)






( 120)






( 125)
சரஸ்வதி துதி

              (பக்ஷமிருக்கவேணும் என்ற மெட்டு)

              (இந்துஸ்தான் காப்பி, ஆதி)

ஞானந் தரும் இறைவி கவிராணி-என்றன்
நாவில்வந்தருள்புரி கலை வாணி

கானுறை மயிலே கவிதையின் உருவே [ஞான]
வனமிருந்திழியும் மழைபோலே-கொட்டும்
வாக்குத் தருக மலர்க் குழலாளே
நான்முகன் மனையே நாடினேன் உனையே [ஞான]

வெள்ளைக் கமலமிசை நடிப்பவளே-இசை
வீணைதனில்அமுதம் வடிப்பவளே
அள்ளித் தருவதால் ஆர்ந்திடுந்தேனே [ஞான]

தெள்ளுதமிழ்ச் சுப்புரத்தினம்பாடும்-கலைத்
தெய்விகமே வருக அருளோடும் [ஞான]

                          அவையடக்கம்

                                 வெண்பா

திருமயிலம் வாழ் கந்தவேள்மேல் சிலசொல்
பெரியார் மணிவாக்கின் பீடு-தெரிவதற்குச்
செப்புகின்றேன் ஆதல் சிறுமை புதல்வரின்பால்
ஒப்புதல் போல் ஒப்ப உவந்து








( 130 )





( 135 )








( 140 )
நாட்டுச் சிறப்பு

(இராகம்: தேசிகதோடி, தாளம்: அடசாப்பு)


  சீர்கொண்ட தென்மயி லாசல நாடென்ற
  பேர் கண்டு நாடிப் பெருங்கடல் நீர்மொண்டு
  வார் கொண்டல் விண்ணடுத்துப்-புவி

  யோரஞ்ச மின்னல் விடுத்-ததி
  ராகஇடி இடித்து-மிக்க
மழை முத்து மாலை விழவைத்ததாலே வழியற்றுஞானம் 
                                    குழவுற்றுமேலே

  வருநதியின் காட்சிசொலும் வகையறியேனே
  மலைவிட்டு நீங்கிப்பொன் னலைகொட்டிமூங்கிலின்
  குலமுற்றும் வாங்கிப்பன் மலரிட்டு வேங்கையின்
  தலைமுட்டு நதி வெள்ளமே-ஏரி
  குளங்குட்டை யவையுள்ளுமே-இரு
  நில முற்றும் குதி கொள்ளுமே-எங்கும்

உழவர்கள் ஒடி விழவு கொண்டாடித் தொழுதெய்வம் நாடிக்
                                    கழனிகள் தேடிக்

கன எருதின் ஏர்பூட்டி நிலமுழுவாரே
  பதனிட்ட நிலமுற்றும் விதை நட்ட தயல் நட்டுக்
களைவெட்ட வருமாதர் மதியொத்த முகம்நாண
  மறை மொட்டு விரிவெய்தலும்-அவர்
விழியொத்த கருநெய்தலும்-நத்தை
  தருமுத்து நகை செய்தலும்-கண்டு
காலால் மிதித்ததன் மேலே பகைத்தவர் போலே எடுத்தரி
                         [வாளால் அறுத்தெறி

  கரைசேர்த்த களைக்குலத்தில் வண்டு பண்பாட
  எருவைத்து வரநித்தம் பிறையொத்து வளரப்பின்
  கதிர்விட்டு முதிரத்தன் தலைநட்டு வளையக்கண்
  டகமுற்ற மிகுமாசையால்-நிலம்
  விளைவுற்ற தொகை பேசுவார் அறு
  வடைசெய்ய விடைசெய்குவார்-பின்னர்க்
குப்பல்செய் ததுமோதி நெற்பதர் கெடத்தூவிச் சுப்பு ரத்தினம்                     ஒதும் நற்கவிப் பொருள் போலும்
    மலைபோல் நெல் வீடுவர இனிது நுகர் நாடே
( 145 )





( 150 )






( 155 )







( 160 )






( 165 )




( 170 )
நகரச் சிறப்பு

[இராகம
: தேசிகதோடி, தாளம்: ஆதி]

கொட்டுமது சீதளக்க டப்பமலர் தோளுறத்தரித்த முரு
                   கோனமர்ப்ர
சித்த மயிலாசலந கர்புகழை யோதிடற்கு
நற்றிற மில்லை சேடனி னைக்கினுந் தொல்லை

அட்டதிசை யோடிவிண்மு கட்டினையு மோதிரவி
வட்டமுமி டாதுயுக முற்றினும்விழாதபடி இட்ட நகர்
                   மாலையெனக்
கட்டு மதிலும் அதனைச் சுற்றியகழும்

மின்னுமணிக் கோபுரங்களின்சிகர மீதணிந்த
பொன்னுடைநி கேதனங்கள் விண்ணகரின் மாதர்தமை
இந்நகரில் வாருமென ஆடியழைக்கும் அவரை ஒடி யிழுக்கும்

வெள்ளிமலை போலுயர முள்ளபல மாளிகையிற்
புள்ளுலவு நேரமதில் அள்ளிமணி யாலெறியும்
பிள்ளைகள் உலாவுமந்த வீதிப்பெருமை அதனை ஓதலருமை

சித்திரங்கொள் ஆலயத்தில் உற்றமுருகேசனுக்கு
நற்றிருவி ழாவைபவ மெத்தவுறு நா லுவரு
ணத்தவரின் வீதிதனில் கீதமுழக்கம் அதிக வேதஒழுக்கம்

பூரண கும்பங்கள் வைத்துத் தோரண மலங்கரித்து
நாரின் விளக்கங் கொளுத்து வாரிலக்கிழத்தியர்க்கு
நாரணன் கொளுந்திருவை ஒப்புரைத்தனன் கனகசுப்புரத்தினம்



( 175 )







( 180 )






( 185 )





( 190 )
மயில மலைச் சிறப்பு

[ இராகம்: ஆனந்த பைரவி, தாளம்: அடசாப்பு]


                                      [கஜல்]
அறு பொரியின் வடிவாகி அங்கையிலே பரைதந்த சக்திவாங்கி
அமரர் படுந் துயர் நீங்கச் சயமோங்க அசுரர்குலமூலந்தன்னை

               (துரிதம்)
அடிகொண்டு களைகின்ற இளமைந்த னமர்கின்ற
அசலங்கொள் புகழ்தன்னை அறைகின்ற முறைகொண்பின்

  அங்கண் ஞாலத் திருப்பவர் வானவர் அங்ஙனே நின்று
                     கண்டுதுதித்திடத்
  திங்கள் சூடும் சிகரமும் நாற்றிசைச் சேருஞ்சாரலும்
                     சீதனத்தூற்றலும்

                (துரிதம்)
திரிகின்ற புயல் வேழம் அரி கண்ணஉடனோடச்
சரிகின்ற மலையென்று நரிகண்டங் ககம்வாட (1)

                (கஜல்)
மலர்க்குலங்கள் பொழிதேனும் மஞ்சுபொழி பனியும்
                     சந்திரதாரையும்
மஞ்சன நீராய்த் தவத்தர் செஞ்சடையில் சோர மங்களப்
                     பண்பாடிவண்டு

                (துரிதம்)
மகரந்தப் பொடிவாரித் துகள்மிஞ்சப் புவிவீச
வதிகின்ற குறமாதர் இருகெண்டை விழிகூச

மல்லிகைப்புதர் வெண்ணகை யாடவும் மாதுளகனி
                     ஆலிலைபோர்த்தவும்
நல்லதென் றலணைந்திடக் கன்னிமாநாணிமேனிச் சிலிர்த்துக்
                     குலைந்திடும்

                 (துரிதம்)
நளிருற்ற குரவஞ்சத் தனமற்றத் தருவுந் தம்
நறைகொட்ட நிறையுஞ்செங் கமலப்பொற்றடமுற்றும்

                  (கஜல்)
அரவு தரு மாணிக்கம் மரைமுத்தம் வரையீன்ற வச்சிரம்
                     பொற்சன்னராசி
அற்புதங் கொள் ஜோதி வல்லி யிற்கலந்த போது வல்ல

                  (துரிதம்)
இருள் முற்றும் எளியாகும் மிகுரத்ந மணிமாலை
எழிலுற்ற மலைமாது மிலைவுற்ற தென வோத

எங்கு நோக்கினும் புள்ளினத் தின்னொலி இடையில்
                     வேடர்செய் ஆட்டங்கள் பாட்டுகள்
தொங்குமாலையின் வெள்ளருவிக்குலம் தூரநின்றிழி
                     போதொரு சந்தப்பண்

                   (துரிதம்)
தொழுபத்தர் முருகா என் றழுகைக்கண் ணெழு மோசை
சுர மொத்த சுரதாளம் நிரை யொத்த திடிமேளம் (3)

                   (கஜல்)
குஞ்சரியோர்பாகம் குறவள்ளி யோர்பாதம் கொஞ்சக்கைவேல்
                     [கொட்டொளியும்
தழைத்தொளிவரும் கருணைநோக்கும் குளிர்வதனமீராறும்
                     [நளிர்பதமும் கொண்டகோயில்]

                   (துரிதம்)
குறைதீர விரைவாக வருவார்கள் ஒருகோடி குகனே
                    ஷண்முகனேஎன்று அடிசோர நடமாடிக்
குப்பலாகப் பொற்காலடி தோள் தூக்கிக் கொள்கையாவுங்
                    [குமாரன்தன் மேலோக்கிச்
  சுப்புரத்தினம் கொற்றமிழ்ப்பா வாக்கில் சூழத்தென்
                    [மயிலாசனமே நோக்கிச்
                            
                (முடிவு)
  சுராதிபனை வாழ்த்தி நலம் துயப்பரதி சோபிதமே.









( 195 )











( 200 )












( 205 )











( 210 )











( 215 )











( 220 )
நூல்

(பாலசந்த்ர சேகரா என்ற மெட்டு)
(இராகம்: சங்கராபரணம், தாளம்: ரூபகம்)


                     பல்லவி

    பாலசுப்ர மண்யனே!
             நீலமாமயில் மேலுலாவிடும் [பால]

                     அனுபல்லவி

      ஞாலமீதினில் அமுதச் செந்தமிழ்
நலமுதவிய பொதிகையிலமர் குறுமுனிவனுக்கு இனி தருள்செயும் [பால]

                     சரணம்

   வேலு மயிலும் கோழிக் கொடியும்
   விரவிய அன்பர் உளமார் வாழ்த்தும்
   கோல வாயிதழ்க் கொடி யிடையினர்
   குலவு பாங்கும் கண் டின் பங் கொளக்
கோரிடுமிப் பாலன்மனத் தாவல் கெடச் சேவை தர
நேரிடுமோ நாளுமிமை யோர்பணியுங் காவலனே!
   நித்தா! சுத்தா! அத்தா! முத்தா!
   நினதொருபுகழ் தனைமொழிந்த
   அருணகிரிக் கருள் புரிந்த [பால]

   கீரன் துயரம் நீக்கத் தண்ணிய
   கேடில்பூம்பதம் தந்த புண்ணியம்!
   பூரணாபுவ னாதியண்டம்
   புரந்திடுங்கந்தா சிந்தாகுலம்
போக்கிடுதல் உனக்கரிதோ தாய்க்குமகன் முழுப்பகையோ!
யார்க்கிதில் நீ பயப்படுவாய் ஆக்கியழித்தருள் முதலே?
அக்கணி முக்கண னுக்கினி திறப்ரண வப்பொருள் ஒதும்
   நாதி ஆதி சோதி யாதிங்
   கடிமலரினைவிட ஒருகதி
   படி மிசையுளதோ உரை நதி [பால]

   தேவரைச் சிறை மீட்க ஆங்குச்
   சென்றுமை யிடம் சக்தி வாங்கித்
   தாவிச் சூரனூர் வீர வாகுவைத்
   தூது போக்கிப் போர்க்குண் டாகிய
சயமுர சடி பட அமரர்கள் சய சய வெனுமொலி திசையுறப்
புயவலியசுரரை எதிர்கொடு புகையொடு கனலெழ இருபுடை
புக்கம ரிற்புய மொக்கஎ திர்த்துடல் வெட்டினரிடையே
சூரன் மார்பின் மேலுன் வேலைத்
   தொடுத்தவன் குலத் தொடு மடித்திடு
   சுரர்க்கதி பதி யுனக்கடைக்கலம் [பால]

   நாழிகை அரை யேனும் சகியேன்
   நச்சுப் பொய்கையன்றோ இப்பூமி
   தாழ்குழல் தன மாதர் கண் எனும்
   தடுக்கொணாக் கூர் வாள் என் மீதினில்
தாக்க நலிந்தேன் பிணிகள் மாய்க்க நினைந்தன பொருள்கள்
போர்க்கு வளைந்தன மனிதர் போக்கி விழிந்தார் எதுரே
புறப்பட் டிருட்டில் திருட்டில் கயிற்றைக் கழுத்திற் கருநமன்
தாழ்குழல் தன மாதர் கண் எனும்
   விரைந்து வந்திடு சுப்புரத்தினம் சொல்
   நறுங்கவிக் கு இறங்கி அருள்புரியும் [பால]




( 225)












( 230)




( 235)





( 240)




( 245)





( 250)




( 255)




( 260)




( 265)