பக்கம் எண் :

புகழ் மலர்கள்

பொதுவுடைமைக்கு நான் பகைவன்?

பொதுவுடைமைக்குப் பகைவனா? நான்.
பொதுவுடைமைக்காரர் எனக்குப் பகைவரா?
இல்லவே இல்லை; இரண்டும் சரியில்லை

   பாரதி பாட்டில் பற்றிய பொதுவுடைமைத்தீ

   என்றன் பாட்டு நெய்யால் வளர்ந்து
   கொழுந்துவிட் டெரிந்து தொழிலாள ரிடத்தும்   உழைப்பாள ரிடத்தும் உணர்வில் உணர்ச்சியில்
   மலர்ந்து படர்ந்ததை மறுப்பவர் யாரே?

   சிங்கார வேலர்முதல் சீவா வரையில்
   அங்காந்திடுவர்என் பாட்டினுக்கே.

   சுப்பையாவின் தொடர்பும் தோழமையும்
   எஸ். ஆர். சுப்பிர மணியம் இணைப்பும் பிணைப்பும்
   எப்பொழுதும் எனை லெனினால் ஸ்டாலினால்
   புதுமை கொணர்ந்த பொதுமை நாட்டை
   மதுத்தமி ழாலே மடுக்கும்என் பாட்டு,

   இதுஅறி வெனத்தெரிந்த நாள்முதல் புதுவையில்
   "சுதந்தரம் சமத்துவம் சகோதரத் துவம்'
   மூன்றும் என்னுயிர் உணர்வில் ஊறியவை.
   என்பாட் டாலே வளர்ந்த இயக்கம்
   தன்பாட்டுக்குத் தப்புத் தாளம்
   பின்பாட்டுப் பாடும் பிழைப்புக் கெல்லாம்
   என்னை விற்காததால் ஏதும் அறியாத
   கொன்னைப் பயல்களைக் கொண்டேசு கின்றனர்.

   இவர்கள் யாரென எனக்குத் தெரியும்,
   புரட்சியன் பேரால் புரட்டுசெய் பவர்கள்,    தொழிற்சங் கத்தால் தோழர்கள் உழைப்பை
   வழிப்பறி செய்யும் வலஇட சாரிகள்.
   தாய்மொழிப் பற்றும் தன்இனப் பற்றும்
   தாய்நாட்டுப் பற்றும் சற்றும் இலாதவர்,
   முடிந்த வரைக்கும் முந்நூல் கொள்கையில்
   அடித்தொழு திருக்கும் அடிமைகள்; மார்ச்சு லெனின்
   நூல்களை எல்லாம் நுனிப்புல் மேய்ந்து
   கால்படித் தமிழால் மேற்படி யாரின்
   விளக்கெண்ணெய் மொழியால் விளங்காது செய்பவர்
   உருசியன் ஒதுக்கும் ஒருகோடிப் பணத்தையும்
   வரிசையாய்ப் பகுத்து வாழ்வு நடந்திடும்
   பொறிக்கி களாகப் போனதி னாலே
   குறிக்கோள் உயர்ந்த பொதுமைக் கொள்கை
   வெறிச்சென்று போனது; வெற்றியில் தாழ்ந்தது,
   பாட்ட ளிகளின் கூட்டம் குறைந்தது,
   மூட்டிய போர்க்குணம் முடம்கொண் டழிந்தது.
   கண்டிதனைக் கழறுவதாலே அறிவிலா
   முண்டங்கள்எனை முழுக்க முழுக்கப்
   பொதுவுடைமைக் கெதிரி என்று முழக்குவர் .

   உண்மையைப் பற்றி ஒருவன் உரத்துப்
   பேசும் போதும் எழுதும் போதும்
   பொறுப்பு ணர்ச்சி வெறுப்பு ணர்ச்சியைக்
   காட்டுவது தானே கடமை; இல்லையேல்
   நாட்டில் விளைவது நலிவும் கேடுமே!
   நக்கிப் பொறிக்கிகள் நன்றி மறப்பதில்
   அக்கறை கொள்ளாது அன்புடை உலகே!







( 5 )





( 10 )




( 15 )






( 20 )





( 25 )




( 30 )





( 35 )





( 40 )






( 45 )




( 50 )
சம்பத்து முயற்சி

   தெம்பிலாத் தில்லு முல்லுக் கழகம்
   சம்பத்தால் இனித்தலை தூக்கிடுமா?
   இந்தியை வடவர் செந்தமிழ் நாட்டில்
   குந்தி இருக்கக் கொடுஞ்செயல் தொடங்கினர்

   மொழிவழி மாநிலம் ஆக்கி, மொழிவளர்
   மாநிலம் அனைத்தையும் மகிழ வைப்பதால்
   நாவலந் தீவுக்கு நன்மை யாகும்.    ஏவலராக்கி மாநிலத்தாரைச்
   சுரண்ட நினைப்பவன் தூய்மை சுற்றதன்
   னினமொழி பரப்ப எண்ணி அழிவான்;

   செந்தமிழ்ப் பற்றும் செந்தமிழ் மக்களும்
   பிரிக்க முடியா ஒன்று! பிரிப்பவன்
   இருக்க முடியாக் கல்லறை இருப்பே.
   இந்தி இங்கு வருவதைத் தடுப்பது
   செந்தமிழ் மக்களின் சிறந்த கடமை!
   சம்பத் திதனை உணரந்தது சரியே
   ஆயினும் அதனை அன்பிலாரி டத்தில்
   இயம்பி அவரிடம் இந்தி எதிர்ப்பை    எதிர்பார்த்திடுவது சரியா? அன்று!

   காசறை கட்டு கின்றவர்
   பாசறை காண்பர் என்பது பசப்பே!




( 55 )






( 60 )





( 65 )




( 70 )
கற்பனை உலகில்

தெருபக்கக் கூண்டறையில் இருந்தேன் மேஜை
    சிறியதொரு நாற்காலி, தவிர மற்றும்
இருந்த இடம் நிறையமிகு பழந்தாள், பெட்டி
    எண்ணற்ற சிறுசாமான் கூட்டம்! காற்று
வருவதற்கு ஜன்னல் உண்டு சிறியதாக
    மாலை, மணி ஐந்திருக்கும் தனியாய்க் குந்தி
ஒருதடவை வெளியினிலே பார்த்தேன் அங்கே     ஒருபழைய நினைப்புவந்து சேர்ந்தது என்பால்!

நெஞ்சத்தில் அவள்வந்தாள்; கடைக்கண் ணால்என்
    நிலைமைதனை மாற்றிவிட்டாள்; சிரித்தாள் பின்னர்
கஞ்சமலர் முகத்தினையே திரும்பிக், கோபம்
    காட்டினாள்! பூமலர்ந்த கூந்தல் தன்னில்
மிஞ்சும்எழில் காட்டினாள்! அவள்தன் கோபம்
    மிக லாபம் விளைத்ததன்றே என்ற னுக்கே!
'அஞ்சுகமே வா' என்று கெஞ்சி னேன்நான்
    அசைந்தாடிக் கைப்புறத்தில் வந்து சாய்ந்தாள்

இவ்வுலகம் ஏகாந்தத்தின்விரோதி!
    இதோபார் ஏ! பிச்சை என்று ஒருத்தி வந்தாள்.
திவ்வியமாம் ஒருசேதி என்று சொல்லித்
    தெருநண்பர் வருவார்கள் உயிரை வாங்க!
'வவ்வவ்'வென் றொருகிழவி வருவாள், உன்றன்
    மணநாளில் என்னைஅழை என்று சொல்வாள்!
ஒவ்வொன்றா? -- என்செயலாம்! நீயும் நானும்
    உயர்வானில் ஏறிடுவோம் 'பறப்பாய்' என்றேன்.

மல்லிகையின் அரும்புபோல் அலகும், நல்ல     மாணிக்கக் காலும், மணிவிழியும் பால்போல்
துல்லியவெண் சிறகும்உற்ற வெண்பு றாவாய்த்
    துலங்கினாள் நானும் ஆண் புறாவாய்ப் போனேன்
அல்லலற்ற வான்வெளியில் இருவர் நாங்கள்,
    அநாயாச முத்தங்கள்; கணக்கே இல்லை;
இல்லையென்று சொல்லாமல் இதழ்கள் மாற்றி
    இறுத்தெடுத்த அமுதமுன்போம்; இன்னும் போவோம்.

பொன்னனைத்துக் கதிர்பாயும் முகிலிற் பட்டுப்
    புறஞ்சிதறும் கோடிவண்ண மணிக்குலமால் மின்னும் மணிக்குவியலெல்லாம் மேகம் மாய்த்து
    விரிக்கும் இருள்! இருள்வானம் ஒளிவான் ஆங்கே
சென்னியை என் சென்னியுடன் சேர்த்தாள் ஆங்கே
    சிறகினோடு சிறகுதனைப் பின்னிக் கொண்டே
என்னைஅறி யேன்! தன்னை அறியாள்! பின்னர்
    இமைதிறந்தோம் ஆகாய வாணி வீட்டில்!

பாரதி நாட்டாரடி நாம்வா என்றேன்,
    பழஞ்சாமான் சிறுமேஜைக் கூண்டறைக்குள்
ஓரண்டை நாற்காலி தன்னில் முன்போல்    உட்கார்ந்த படியிருந்தேன் பின்னும் உள்ளம்
நேர்ஓடிப் பறக்காமல் பெண்டு, பிள்ளை
    நெடியபல தொந்தரைகள், நியதி இன்றிப்
பாராளும் தலைவர்களின் செய்கை எல்லாம்
    பதட்டமுடன் என்மனத்திற் பாய்ந்த தன்றே.



( 75 )




( 80 )





( 85 )





( 90 )




( 95 )





( 100 )





( 105 )




( 110 )





( 115 )
வேங்கைக் குகையில்

எடுப்பு

நீள் வையம் எதிர்த்திடினும் -- அஞ்சுதல் இல்லாத்
தோள்வாய்ந்த மூவேந்தர் -- சீர்ஆட்சி


                           தொடுப்பு

நாள் என்ற கடல் வெள்ளம் தான் கொண்டுபோனதே
தோள் வாய்ந்த பெருந்தீயர் வரலால் இருளானதே

                           முடிப்பு

யாவரும் ஒன்றே எனவாழ்ந்தோமே நாங்கள்
இனம் சாதி மதவெறி அலங்கோலம்
மேவி வீழ்ச்சி நிலை அடையவும் ஆனதே
வேங்கைக் குகைக்குள் நரிவாழ்ந்திடவும் ஆனதே.

( 120 )










( 125 )
எது இசை


தமிழ்ப்பாடல் முறையா நாட்டிலே கண்          
        
          வாயை மூட்டல் முறையா?
          எதுமுறை சொல்க மனமே!

தமிழ்பே சுவார்க்குத் தீந்தமிழினிதோ?
தாங்களறியாத பிறமொழி பாடுதல் இனிதோ?
மொழிபொருள் மிகநன்றாய்க் காட்டுதல் கவியா -- தம்
விழியல் உதடு காணக் காட்டல் கவியா?
பிழைபட நிந்தனை பட நடப்பது நலமா?
பெருமை ஓங்குமாறு தமிழைப் போற்றுதல் நலமா?

( 130 )





( 135 )
வாய்மை முரசு!

மனிதன் உண்போன்; மற்றவும் உண்பன!
மற்றவை உறங்கும்! மனிதனும் உறங்குவான்!
இன்புறும் பிறஉயிர்! இவனும் ஆங்ஙனே!
துன்புறுவான் இவன்! துன்புறும் பிறவும்!
மனிதன் அறிபவன்! மற்றவும் அறிவன
மனிதனுக்கு, மற்ற உயிர்கட்குக்
குறிகள் உண்டு! நெறிகள் உண்டு,

மனிதன் ஏன் நிலத்தில் வாய்த்த உயிர்களில்
''இனியோன்'' ''சிறந்தோன்'' எனப்படு கின்றான்?
முளைத்த விலங்கு முதற்,சுள் ளான்வரை --
உள்ள உயிர்கட்குஇல்லாத தென்ன?
மனித னிடத்தில் வாய்த்த சிறப்பெது?

கேளீர், அதனைக் கேளீர், கேளீரே:
''உள்ளம் கண்டதை உள்ளவர்க் குரைத்தல்''
என்பது, மனித னிடத்தில் தானுண்டு!
பிற உயிர்களிடம் பிரசாரம் செய்யும்
தனி ஒரு மேன்மை சற்றும் இல்லை;
இம்மிகூட இல்லை என்றறிக!

உள்ளங் கண்டதை உலகுக் குரைத்தல்
மற்றவற் றினின்று மனிதனைப் பிரிப்பது;
மனித னுக்கு மாண்பு தருவது!
அஞ்சியோ பிறர்பால் ஆவது கருதியோ
வயிறு தன்னை வளர்க்க எண்ணியோ,
பெற்றதன் கொள்கையைப் பிறர்க்கென மாற்றுவோன்
உற்ற துரைக்கும் ஒழுக்கம் தீர்ந்தவன்
தாழ்ந்த சுள்ளானில் தாழ்ந்தவ னாவான்.


மனித ருள்ளும் மனிதத் தன்மை
''கொள்கை'' என்று கூறுவர் அறிஞர்
கொள்கையை விலைக்குக் கொடுக்கும் மனிதன்
மனித ருள்வாய்த்த மனித விலங்கு!
நெஞ்சை ஒளித்துப் பேசுதல்
வஞ்ச மன்றோ மாநிலத் திரே!

( 140 )






( 145 )





( 150 )






( 155 )





( 160 )





( 165 )

தமிழர் அறிக்கை

கட்டாயத் தமிழ்க்கல்விக் கழகம் யாண்டும்
கவினுறவே தமிழ்நாட்டில் நிறுவ வேண்டும்
தட்டாமே அரசியலின் துறைகள் யாவும்
தமிழ்ப்பேச்சால் தமிழ்எழுத்தால் நடத்தல் வேண்டும்.

பட்டோம் இந்நாள் வரைக்கும்! தமிழர் ஒன்று
பட்டவுள்ளம் விடுத்திட்ட அறிக்கை இஃது
கொட்டினோம் தமிழ்முரசு! நாட்டை ஆள்வோர்
குறை முடிக்க! இல்லையெனில் புரட்சி தோன்றும்,

தமிழ்நாட்டில் துறைதோறும் தமிழருக்கே
தலைமைஇருந் திடவேண்டும் தமிழ் நாட்டில்
தமிழர்களாற் குழு அமைத்துச் சட்ட திட்டம்
தமக்கான முறையினிலே அமைக்கச் சொல்லி

சடசடெனச் சரிந்துபடும் ஆட்சிக் கோட்டை!

திராவிடரின் பகைவர்க்கே அடிமை யானோர்,
திராவிடர்க்கு நலம்புரிதல் குதிரைக் கொம்பே!
அரிய தமிழ் நாட்டுரிமை வேண்டும்; அன்றே
அன்புள்ள தெலுங்கர்க்கும் கேரளர்க்கும்

உரிமையினை நாட்டுவதும் தமிழர் வேலை!
ஒன்று பட்டோம், சாதியில்லை, சமய மில்லை;
குரல்கேட்க ஆள்வோரின் காதே! ஒப்பம்
கூறுக வாயே இன்றேல் புரட்சி தோன்றும்.

( 170 )





( 175 )





( 180 )





( 185 )





( 190 )



தமிழர் நாடு

என்னருமைத் தமிழ்நாட்டை எழிற்றமிழால்
நுகரேனோ செவியில் யாண்டும்
கன்னல்நிகர் தமிழிசையே கேளேனோ! கண்ணெதிரில்
காண்பவெல்லாம் நான்

தன்னேரில்லாத தமிழ்தனி மொழியாய்க்
காணேனோ? இவ்வையத்தில்
முன்னேறும் மொழிகளிலே தமிழ்மொழியும்
ஒன்றெனவே மொழியேனோ!


( 195 )






( 200 )
விடியா விடுதலை விடிவ தெந்நாள்?

  இனிஇந் நாட்டில் இங்கிலாந்தின்
  கொடி பறக்காது கோலோச்சாது.
  எண்ணிலா வீரர்கள் எண்ணிலாத் தீரர்கள்
  கண்ணீர் செந்நீர் களங்கண்டதன்பின்
  வந்தது விடுதலை, உரிமை பெற்றது.

  உடல் பொருள் ஆவி உவந்தீந்தவரின்
  ஈகத்தினால்தான் எய்தினோம் விடுதலை.

  ஈவதும் பெறுவதும் இல்லை விடுதலை.
  சாவு ஆயிரத்தைத் தந்து பெற்றது.

  வ.உ.சி, வாஞ்சி, வ.வே.சு, பாரதி   போன்ற கிளர்ச்சியின் புரட்சி யாளர்கள்,

  மானம் மிகுந்த வாழ்வினர், திலகர்
  காந்தி. பகத்சிங் சரோஜினி குடும்பம்

  ஈ வே ரா. சிங்கார வேலனார் ஜீவா
  இன்னும் உயிரை எண்ணாக் கடமையர்
  ஆயிரம் ஆயிரம் பேரை அளித்துப்
  பெற்ற விடுதலை பித்தர்தம் கையில்
  சிக்கிக் கொண்டது! திராவிடம் அழியும்!
  சாதிமதத்தின் சழக்குகள் மிகுந்திடும்!
  இனவெறி யாட்டம் பிணம்தின்னி யாகும்!
  மொழிப்போர் மூளலாம், சமதருமத்தின்
  விழிதிறவாது, வேற்றுமைச் சிக்கல்
  மாநிலம்தோறும் வெறுப்பும் பகையும்?   கால்கொளும்: ஏழை எளியவர் கடுந்துயர்
  உள்நாட்டவரால் கொள்ளை நோய் ஆகும்.
  இவற்றை எப்படி இப்பொழுதேநீர்
  செப்பலாம் என்று சினப்பின், ஆட்சி

  ஒப்பின வரையும் உட்கார்ந்தவரையும்
  நாற்பதாண்டாய் நான் நன்கறிவேன்.
  அறியாமையும் செருக்கும் கைகோத்து
  அரியணை அமர்கையில் அண்ணலே ஒதுங்கினார்.
  உழுதவன் இல்லை விதைத்தவன் இல்லை
  மக்களுக்குள்ள சிக்கலறுக்காமல்
  எல்லார்க்கும் எல்லாம் என்னும் உரிமை
  சொல்லால் செயலால் தொடவும் எண்ணினார்
  இரவில் வாங்கும் இந்திய விடுதலை
  என்று விடியுமோ யார் அறிகுவரே.



( 205 )






( 210 )







( 215 )





( 220 )



( 225 )




( 230 )




( 235 )
ஆளவந்தார்!

ஆட்பட் டிருந்தவர் ஆளவந்தார் -- நல்ல
ஆட்சி நடத்துவர் என்றிருந்தோம் -- ''எம்மைக்
கேட்பவர் இல்லை இனத்தின் எழுச்சியைக்
கிள்ளிடுவோம்'' என்று துள்ளுகின்றார்.

வறுமை உணர்ந்தவர் ஆளவந்தார் -- இனி
வயிற்றுக்குக் கஞ்சியுண் டென்றிருந்தோம் -- ''உங்கள்
ிறுமையை நீக்க முறையிட்டுக் கொண்டாலும்
சிறையிடுவோம்'' என்று செப்பிவிட்டார்.

ஏழையர் தோழர்கள் ஆளவந்தார் -- கொண்ட
ஏக்கத்தை நீக்குவார் என்றிருந்தோம் -- இனி வாழவிடோம் தொழிலாளரை, ஒற்றுமை
மாய்க என்றார் தலைசாய்க என்றார்.

நல்லறம் கேட்டவர் ஆளவந்தார் -- இனம்
நாலும் ஒன்றாய்விடும் என்றிருந்தோம் -- எம்மைக்
கொல்லும் அவர்கள் கை, இல்லை என்னும் நாக்குக்
கூசாது பொய்சொல்லும் தேசீயத்தாள்!

உள்ளம் உயர்ந்தவர் ஆளவந்தார் -- இனி
உண்மை சிறந்திடும் என்றிருந்தோம் -- எங்கும்
கள்ள வணிகர்க்குக் காப்பளிக்கக் கச்சை
கட்டி விட்டார் மானம் விட்டு விட்டார்!

நிறத்திமிர் அற்றவர் ஆளவந்தார் -- துயர்
நீங்கிடும் நாட்டினில் என்றிருந்தோம் -- ஏதும்
அறச்செயல்காணாத ஆங்கிலேயர்க்கு யாம் அப்பன்கள் என்றிங்குச் செப்பிவிட்டார்!

கல்வி நிறைந்தவர் ஆளவந்தார் -- தமிழ்
கட்டாயம் ஆக்குவர் என்றிருந்தோம் -- அதைக்
கொல்வதற் கென்றிந்திச் சாணியைக் கட்டாயம்
கொள்என்று நாட்டினிற் கொள்ளி வைத்தார்.


( 240 )






( 245 )





( 250 )






( 255 )





( 260 )




( 265 )
திராவிடர் புரட்சி

இன்று தமிழன் முன்னேற் றத்திற்கு
குன்றளவு முள்ளாய் குறுக்கே நிற்பதும்
முட்டுக் கட்டையாய் முரண்டு பட்டிருத்தலும்
பத்தாம் பசலிகள் பழமைப் போற்றிகள்.

பெரும்பாலும் அவர் கருவுறு சாதி மதத்திலும்
உருவாகி வந்த உதவாக் கரைகள்
முந்திய மூத்த தலைமுறை யினரே.

எந்த ஓர் உண்மையும் எண்ணா மனத்தினர்
இளந்தமிழ்த் தலைமுறை இன்றோ நாளையோ
கிளர்ந்தெழப் போவதில் எரிமலையாயினர்
விரைந்தொரு புரட்சி பெரியார்
அறைகூவும்நா அசைவினால் உள்ளதே!



( 270 )






( 275 )


யாம் கொண்ட மகிழ்ச்சிக்கோர்
உண்மை உண்டோ?

எங்கள் இயக்கங்கண்டார் தமிழ்நாட்டிற் குத்தலைவர்
இந்த லோகம்
துங்கமுறும் வழிதேடித் துயரென்றும் மகிழ்ச்சியென்றும்
    எண்ணா மல்தம்
அங்கத்தை ஆவியினை ஆம்பொருளைத் தாம்பாரா
    தளிக்கும் நல்ல
கங்கைநிகர் உள்ளத்தார் இராமசாமிப் பெரியார்
    வரவு கண்டோம்.

பயிர் போன்றார் உழவருக்குப் பால்போன்றார்
    குழந்தைகட்குப் பசும் பாற் கட்டித்தயிர்போன்றார் பசித்தவர்க்குத் தாய் போன்றார்
    ஏழையர்க்குத்! தகுந்த வர்க்குச்
செயிர் தீர்ந்த தவம் போன்றார், செந்தமிழ்நாட்டிற்
    பிறந்த மக்கட் கெல்லாம்
உயிர்போன்றார் இங்குவந்தார், யாம் கொண்ட
    மகிழ்ச்சிக்கோர் உவமை உண்டோ?

கள்ளப்போக் குடையவரின் ஆட்சியினைக் கனமக்கள்    மனவெறுப்பாம்
வெள்ளப்போக் கிற்கறைக்கும் வித்தாரப் பேச்சான்
    முத்தா ரத்தைக்
கொள்ளப்போ முன் இங்குக் கூடியுள்ள எம்தலைவர்
    தோளை எங்கள்
உள்ளப்பூங் காடாக்கி உச்சியிலே கைகூப்பு
    உவகை கொள்வோம்.

சமயவெறி தணிக என்றார் சாதிவெறி தணிக என்றார்     சகோதரர் போல்
அமைக என அறிவித்தார் பெண்களெலாம் நல்லுரிமை
    அடைக என்றார்
எமை அகத்தும் புறத்தினிலும் திருத்துதற்கே
    எம்பெருமான் சொன்னதெல்லாம்
இமயமலை இல்லை என்று சொன்னதுபோல்
    எண்ணினோம்
பின் தெளிந்தோம்.

சிந்திக்க இராமசாமிப் பெரியார்! சொன்ன வண்ணம்
    செய்க, நாங்கள் பந்தியிட்ட படைவீரர் தமிழ் நாட்டார்! அவர் தலைவர்
    பயமே இல்லை!
இந்தியினை எதிர்க்க என்றார் விட்டோமா வரிச்சுமையை
    விட்டோமா எம்
செந்திருவை இராமசாமிப் பெரியாரை வாழ்த்தும்
    சிந்தை வாழ்க.

( 280 )




( 285 )





( 290 )



( 295 )




( 300 )




( 305 )



( 310 )




( 315 )



( 320 )
பிரதிநிதித்துவம் -- படிவம்

ஆதியில் வந்த வடமொழி அதனில்
அழகிய ''பிரதிநிதி'' எனும் சொற்கே
ஓதுக தமிழ்ப்பெயர் என்றார் பார்ப்பான்.
ஓதாப் பார்ப்பான் பேதமை தீரப்,
பாதியில் வந்த வடமொழியாளர்
படிவம் என்பதை அவ்வாறு பகர்ந்தனர்.

நீதெளி என்றே நிகழ்த்திய அளவில்
நின்றான் சென்றான் மறுநாள் வந்தான்.
வேதம் சொன்ன வடமொழி முதலா?

வெறுந்தமிழ் முதலா? என்றான் பார்ப்பான். ஓது மறைக்குமுன் உயர்தமிழ் நான் மறை
ஓதிய மொழியே முதலெனச் சொன்னேன்.
கீதை தந்த வடமொழி பெரிதென்றான்,

கிடைக்கரும் திருக்குறள் அதற்பெரி தென்றேன்
ஏதிது நம்திரை கிழிந்த தென்றே
ஏகினான் பின்னர்த் திரும்வே யில்லையே!





( 325 )






( 330 )






( 335 )
தெற்கெல்லை திராவிடர்க்கே

முதல்இடை கடைச்சங் கத்தின்பின்
மதத்துறை யாளரின் மடுத்துறையாக
ஆனது திராவிடம், போனது மானம்!

ஈனப் பார்ப்பனர் எடுப்பார்க் கைப்பிள்ளையாய்
எல்லா அரசரும் இடுப்பொடிந்தனர்.
பொல்லாச் சமயப் போக்கிலி கட்கெலாம்
கோயில் கட்டினர், குளத்தை வெட்டினர்.
நோயில் நொடிந்தது தமிழகம்: அயலவர்
ஆட்சி ஓங்க ஆரிய நரிகளின்
சூழ்ச்சி பலித்தது, சுரண்டினர் வந்தேறிகள்,

சமக்கிருதத்தின் சாரைப் பாம்பின்வாய்
தமிழின் தூய்மையைத் தமிழர் மேன்மையை
நச்சுப் படுத்திற்று தொடர்கதையாக முற்றுப் பெறாமல், ஒற்றுமை யிலாத
சாதிச் சாய்க்கடையில் திராவிடர் சாய்ந்தனர்.

ஒரே நாளில் இந்திய விடுதலை உரிமை
திராவிட நாட்டிலும் சேர்ந்திடும் என்ற
நம்பிக்கைதனில் நச்சுப் புகையினை
அல்லாடிமுதல் ஆச்சாரி வரையிலும்
எல்லாரும்யாம் ஓர் இனம், இந்தியர்
கல்லாதவர் அவர் கருத்துகேட் காதீர்
எமக்களிக்கும் உரிமை அவர்க்கும் ஆம்
என்று வடக்கினர் ஆட்சி ஏறினர்.
கொன்றழிவதுவா கோளரிக் கூட்டமே
தெற்கெல்லை திராவிடர்க்கே எனஅற்பருக்குரைத்து திராவிடம் அடைகவே.





( 340 )






( 345 )





( 350 )





( 355 )




( 360 )