திராவிட நாட்டினிர், உங்கள் செயற்கெலாம்
அறமே அடிப்படை ஆதல் வேண்டும்.
அறம் எனல் வள்ளுவர் அருளிய திருக்குறள்!
செல்லும் வழிக்குத் திருக்குறள் விளக்கு!
மனமா சறுக்கும் இனிய மருந்து!
கசடறக் கற்க; கற்றிலார் அறிஞர்பால்
கேட்க! கேட்க! திராவிடம் மீட்க!
ஒளவையார் அருளிய ஆத்திச் சூடியின்
ஒருதொடர் தன்னை -- ஒன்றுக் கான
உரையை -- எப்படி ஒருவர் இலேசாய்
நினைவில் நிறுத்தி இனிதுரைப் பாரோ,
அப்படித் திருக்குறள் முனிசாமி அறிஞர்
முப்பால் ஆயிரத்து முந்நூற்று முப்பது
குறளையும் அவற்றிங்குக் கொடுத்துப்பொருளையும்
நினைவில் நிறுத்தி இனிது விளக்கும் ஓர்
ஆற்றல் உடையவர் அவர் திருக்குறள் மலர்
வழங்கும் நகைச்சுவை, மறச்சுவை! பிறசுவை
ஆர்ந்தசொல் அனைத்தும் பெரும்பயன் அளிப்பவை!
அரிசிமா இட்டலி அளிப்பதாய்ச் சொல்லிப்
பாசிப் பயிற்றுமி படைப்பார் அல்லர்;
அறிஞரின் பேச்சும் எழுத்தும் அருங்குறள்
தேனாற்றினின்று செம்பில் மொண்டளிப்பவை!
குறட்பயன்கொள்ள நம்திருக்
குறள்முனிசாமிசொல் கொள்வது போதுமே.
|
( 5 )
( 10 )
( 15 )
( 20 )
|
பகுத்தறிவிதுவா? பகுத்தறிவீரே?
|
எண்ணெயும் உண்மையும்
இறுதியில் மேம்படும்
கண்ணீர்த் துளிகளின் கழகப் பிரிவினை
நாட்டுக்கொருநாள் கேட்டினைப் பயக்கும்.
ஊட்டம் இலாதார் உட்கோள் இலாதார்
தன்னலம் எண்ணத் தமிழ்நலம் மறந்து
புன்னலத் திற்காய்ப் பொறுக்கித் தின்னச்
செல்வ தென்பது சீர்கே டானது,
திராவிடர்க்குத் தெரிந்து செய்யும் தீங்கிது.
ஒரேஇனம் ஒரேநாடு ஒருநாள் அடைவதே
சரேல்என வீழ்த்தும் தமிழரே
பகுத்தறிவிதுவா: பகுத்தறிவீரே?
|
( 25 )
( 30 )
( 35 )
|
''இன்றுள முதல்வர் இனியும்
முதல்வராய்
இருத்தல் வேண்டுமென்றுரைத்தார் பெரியார்''
இவ்வவாறுரைத்ததில் தவனொன்றும் இல்லை.
''காமராசர் கருத்து முழுதும்
தமிழர் நலத்தையே தழுவியதாகும்
ஆதலால் அவரை ஆதரிப்பது
நம்மொனோர் கடனெனப்'' பெரியார் இந்நாள்
சாற்பும் மொழியில் என்ன தவறு?
''தமிழுக்குப் பகைவர் பச்சைத் தமிழராம்
காமராசர்க்குக் கடும் பகைவர்''
என்னும் இந்தச் சூழ்நிலை தன்னில்
காமராசரின் காலை மிதிக்க
எண்ணுவோர் தலைவர் ''பழியையே ஏற்கும்''
இவ்வாறு பெரியார் இயம்புதல் தவறா?
தாழ்நிலை அகற்றித் தமிழர்க்கு
வாழ்நிலை வகுக்கும் பெரியார் வாழ்கவே!
|
( 40 )
( 45 )
( 50 )
|
அரசுபெறு தமிழகம் அதற்கென்று
பெற்ற
சரசுவதி நாவரசு -- என்னுமிவர் தந்த
அறிவுடை நம்பி. அமுதவல்லி
பாண்டியன் என்னும் பசுங்கிளி கட்குக்
காதணி விழாஓன்று காணும் இந்நாள்
எனக்குப் பெரியதோர் இன்பநாளாகும்!
ஏனெனில். பெற்றோர் இருவரும் பெற்ற
மூவரும் என்றன் பேரர் ஆவார்!
இன்று வரைக்கும் யான் இந்நாட் டுக்குப்
பதினாங்கு பேரரைப் படைத்துளேன் தொண்டராய்த்
தமிழகம் மீண்டபின் தமிழர் காணும்
படையில் பதினாங்கு வீரர்என் அருமைப்
பச்சைத் தமிழர் பட்டாளத்தார்!
இதனை எணுண்ம்என் முதுமை இந்நாள்
இளமையா கின்றது; மகிழ்வெய்து கின்றேன்!
காதணி பெறுக! கல்வி நிறைக!
இல்லறம் காண்க! செல்வம் பெறுக!
குமரித் தமிழர் வாழ்வில் குறுக்கிடும்
பார்ப்பை விடாமல் பதற டித்துப்
பெறும்புகழ் பெறுக! அறிவுடை நம்பி
அமுத வல்லி பாண்டியன்
தமரொடு தமிழொடு வாழ்க தழைத்தே!
|
( 55 )
( 60 )
( 65 )
( 70 )
|
சிவாசி கணேசனார் வீட்டுத் திருமண வாழ்த்து
|
மாணவ நிலையில் வாழ்ந்தனர் அந்த
ஆண ழகனும் அழகிய மயிலும்
இந்நாள் அன்பினால் இணைந்தா ராகி
இல்லறம் எனுல்நிலை எய்து கின்றனர்.
மாணவ நிலையோ அறிவை வளர்க்கும்
இல்லற நிலையோ இன்பம் பயக்கும்.
பண்புறு சண்முகன் தானும் பணிமொழிச்
சகுந்தலைக் கிளியும் அறிவு சான்றவர்
இன்பத்துறையில் இறங்குமுன், பெரியோர்
அன்பு வாழ்த்தை அடைய எண்ணி
அணிபெறு மணவறை அதனில் இருவரும்
அருகருகு குந்தி அழகு செய்வார்;
எழுந்திடும் வாழ்த்தொளி! -- இதுதான் திருமணம்.
பந்தலுக்குள் பார்ப்பனன் இடும் வாய்ப்
பந்தலில் நடப்பதே மணம் எனப் பகர்வது
சரிக்கருத்தன்று நரிக்கருத் தாகும்.
தின்பண் டங்கள் செறிந்த அறைக்குள்
புகும்சிறார் போலத் திருமண மக்கள்
இன்பங் காணுமிவ் வின்பச் செய்தியே
எனக்கின் பத்தை ஈந்ததேன் என்றால்
வெள்ளம் ஆகத் தமிழர்க்கு வெள்ளியை
அள்ளிக் கொடுக்கும் வள்ளல் சிவாசி
கணேசனார் கண்ணான தம்பிதான் மணமகன்.
அன்னார் அருமை கொழுந்தினாள் மணமகள்.
தமிழர் உள்ளத்துள் எல்லாம் வாழும்.
பெரிய வீட்டுத் திருமணம் அல்லவா?
எட்டி போலவா கசக்கும் எனக்கது?
சண்முகன் சகுந்தலை வாழ்க;
எண்மிகு பேறெலாம் எய்தி இனிதே?
|
( 75 )
( 80 )
( 85 )
( 90 )
( 95 )
( 100 )
|
நான் பிறந்த உலகம் சிறந்தது! மார் தட்டிய வள்ளுவன்
|
அவ்வுலகம் நல்லதென்றான்
ஆரியன்! நான் பிறந்த
இவ்வுலகம் நல்லதென்றான்
வள்ளுவன் -- அவ்வுலகம்
மேலே இருப்பதென்றான்
ஆரியன் மேலுக்கு
மேலே இருப்பதென்றான் வேள்.
மிக்குள தேவருல
கஃதென்றான் ஆரியன்
மக்களுல கிஃதென்றான்
வள்ளுவன் -- மக்கள்
பெற்றதக்க தவ்வுலகென்
றான்ஆரி யன்! சேய்
பெறந்தக்க திவ்வுல கென்றான்!
அவ்வுலகால் இவ்வுலகம்
ஆனதென்றான் ஆரியன்!
இவ்வுலகின் ஏட்டுச்
சுரைக்காய்தான் -- அவ்வுலகம்
என்றான் எல்லாம்
அறிந்த வள்ளுவன்! ஆரியன்
நின்றான் நெடுமூச்சு விட்டு
ஒப்பிடும் ஆரிய
நான்மறை ஓதியஅப்படிஎன் சொல் என்றான்
ஆரியன் செப்பியதன்
அப்பன் தமிழ்நான்
மறையே அறைந்ததைத்தான்
செப்பினேன் என்றுரைத்தான் சேய்
மருந்தென வேண்டாமே
அவ்வுலகில் என்று
திருந்தாத ஆரியன்
செப்ப -- உரைத்தான் சேய்
உண்மை அதுவானால்
உபேந்திரன் என்னுமோர்
என்னும் மருத்துவன் ஏன் அங்கு?
இரப்ப ரிலா உலகம்
அவுலகவகம் என்றே
உரைத்திட்டான் ஆரியன்!
தேவன் -- உரைத்தான்
இரப்பாரை இல்லாத
ஈர்ங்கண் மாஞாலம்
மரப்பாவை சென்றுவந்தற்று.
|
( 105 )
( 110 )
( 115 )
( 120 )
( 125 )
( 130 )
( 135 )
( 140 )
|
தமிழாட்சியை விரி பிறர் ஆட்சியை எரி
|
தமிழ் எல்லை நீக்கிய
பிற எல்லைப் படத்தைக்கொளுத்து!
வடவன் ஆட்சியை உலகம் சிரிக்கும் -- அவன்
வரைந்த ஆட்சி எல்லைப் படத்தைத்
தமிழகம் தீயில் இட்டெரிக்கும்! (வடவன்)
ஒடிந்தது வடவன் கொடுங்கோல்! கொடுங்கோல்!
உயர்ந்தது தமிழனின் செங்கோல்! செங்கோல்!
உடைந்தான் வடவன் தான் செய்த தீங்கால்!
ஒட்ட அறுந்தது பார்இந்தி யின்வால். (வடவன்)
தமிழாட்சி வாழ்த்திப் பிற ஆட்சி கொளுத்து!
தமிழ்ஒன்றே வைய மொழிஎன்று கிளத்து!
தமிழர்க்கும் வடவர்க்கும் போரை வளர்த்து
தாய்நாட்டு விடுதலை நிற்குமே நிலைத்து. (வடவன்)
தீப்பந்தம் கொளுத்திக் கையிலே தூக்கித்
திருநாட்டின் எல்லையை மட்டிலும் நீக்கிப்
பார்ப்பன ஆட்சிப் படத்தினைத் தீய்க்குப்
படைப்பாய், தாய்நாட்டை விடுதலை ஆக்கி! (வடவன்)
|
( 145 )
( 150 )
( 155 )
( 160 )
|
இனிமைப் பசுப்பாலில்
யாம்பொங்கும் பொங்கல்
தனிமைப் புதுப்பரிதி தங்கத்து நாவுண்ண
யாமும் எம் இன்ப மகளிரொடும் மக்களொடும்
தீமை புறங்காட்டச் செந்தமிழில் அன்பிட்டுப்
பாடி மகிழ்ந்து பழம்பிசைந்த ருந்துகின்றோம்
ஆடி மகிழந்ததெம் அன்பின் தமிழகம்தான்!
இந்நாள் என் உள்ளத் தெழுமோர் புதுப்பரிதி!
பொன்னாங் கருத்துக்கள் தென்னாட்டு வான்தழுவும்
எம்மைப் புதுவாழ்வில் ஏற்றும் தமிழ் வாழ்க!
செம்மை நெறி வாழி செழித்து!
|
( 165 )
( 170 )
|
பொற்றா மரைஒன்று பூத்தது
கீழ்க்கடல் மேல்! புதுநாள்
பெற்றோம் தைத்திங்கள் முதல்நாள் பெற்
றோம்நல்ல பேறு பெற்றோம்
உற்றார் தமிழர் ஓரே நிகர்
என்ப துணரப் பெற்றோம்,
முற்றா இளங்கதிர் கண்டிந்த
வண்ணம் மொழிந்தனரே!
நத்தை இருட்டை நறுக்கி
எடுத்திட நாட்டிலெங்கும்
முத்தொளி வந்து தமிழர்
இனத்தின் முகம்விளக்க
ஒத்தவர் யாரும் உயர்வு தாழ்
வில்லை என அறிந்தே
தத்தம் வினையிலும் ஒத்தனர்
பொங்கற் சமைப்ப தென்றே!
ஆப்பால் அரிசி அரைப்பால்
கழைதரும் வெல்லக் கட்டிச்
சேர்ப்பால் தளதள என்று
நெருப்பில் சிறந்து பொங்க,
ஊர்ப்பால் எழுந்த பொங்கலோ
பொங்கல் ஓசையது
வாய்ப்பாட்டா? வான்பாட்டா?
வார்கடற் பாட்டா? மகிழ்ச்சி என்னே!
நன்றே தமிழர்கள் பொக்கிற்றுப்
பால என நாவினிக்க
ஒன்றா மகிழ்ச்சியில்
ஒன்றினமே இதை ஒப்என்றும்
குன்றா மகிழ்ச்சியால்
வாழியர் வாழியர் வாழியரே! வென்றார் தமிழர் தமிழ்வென்ற
தென்றசொல் மேவுகவே.
|
( 175 )
( 180 )
( 185 )
( 190 )
( 195 )
( 200 )
|
வயதிருபத் தைந்தினில்நான்
காரைக்கால் நகரில்
வண்தமிழால் ஏடெழுதி
வெளிப்படுத்தும் நாளில்
வெயில்நிகர்த்த முகமுடையான்
இனங்காளை ஒருவன்
மெல்லஎனை வந்தடுத்தான்
சின்னாளின் பின்னர்த்
துயில் களைந்தேன்; உணர்வுற்றேன்
தமிழர்க்குத் தானும்
தொண்டுசெய எண்ணுகிறேன்
என்றுரைத்தான்; தம்பி
முயல்கின்றார் நல்லறிஞர்
நம் நாட்டை மீட்க
முடிந்தவரை தொண்டாற்றப்
போஎன்றேன் சென்றான்.
ஒருமுப்ப தாண்டுக்குப்
பின்னொருநாள் அவனை)
ஒளியிழந்த முகம்சிறிது
வெளுத்தலை ஓயா
திருமுகனைவு பேச்சோடு
கண்டுமனம் நொந்தேன்
ஏதேனும் பணம்? என்றான்,
பிள்ளைகள் எத்தனைபேர்
இருக்கின்றார் எனக் கேட்டேன்.
பணமில்லை என்றான்
எங்குளார் பெற்றவர்கள்
எனக்கேட்டேன் என்னை
இரக்கமெனும் பெருங்கடலில்
தள்ளினான், உற்றார்
எவருமே நினைவில்லை
என்பதையும் சொன்னான்;
வீடுதமிழ் நாடுதான்!
தமிழரெலாம் கிளைஞர்
விண்தட்டி மேலெழுந்த
மண்படுக்கை யாகும்!
வாடுபசி நேரத்தில்
எவரேனும் ஓருவர்
வா, என்றாற் சாப்பாடு!
காதலெலாம் என்றன்
நாடுநலம் பெறும்வண்ணம்
நான் சிறிது பேசல்!
நாலுபேர் என்பேச்சுக்
கிணங்குவேத இன்பம்!
ஈடுபட்ட நாள்முழுதும்
இப்படியே ஐயா
இன்றுநான் செயத்தக்க
தென்னவென்று கேட்டான்;
தமிழ்நாட்டின் அதிகாரம்
தமிழனிடம் இல்லை.
தமிழ் உயர்ந்தால் தமிழ்நாட்டின்
நிலைஉயரும் அப்பா;
தமிழ்நாட்டில் தமிழன்நிலை
எத்துறைநோக் கிடினும்
தலைக்குனியத் தக்கவாம்
எவர் அறியார் இதனை!
நமக்கெல்லாம் நாட்டுரிமை
வந்ததென்கின் றார்கள்
நகைவீழ்த்த நமக்குரிமை
என்பததன் பொருளாம்!
தமிழ்த் தொண்டுத் தொடங்கென்றேன்!
பணம் எடுத்தேன் வாங்கத் தான்மறந்தான்; தமிழ்தாழ்ந்த
தேன்எனப் பறந்தான்!
|
( 205 )
( 210 )
( 215 )
( 220 )
( 225 )
( 230 )
( 235 )
( 240 )
( 245 )
( 250 )
( 255 )
( 260 )
( 265 )
|
எட்டுப் பதினொன்று
நாற்பத்தாறிட்ட எழிலுறு நாள்
விட்டுப் பிரிந்ததென்
ஆசிரியப் பணிமேலும் எனைக்
கட்டுப் படுத்து
வதொன்றில்லை திங்கள் கடைசிதொறும்
தட்டாவது வந்திடும்
ஐம்பான் வெண்பொற்காசு சம்பளமே.
|
( 270 )
|
திருப்பத்தூர்க்
கடுத்த சிற்றூர் ஒன்றில்
விருப்புற்று மணந்த கணவன், வெறிநாய்
தெருத்தொறும் சுற்றிச் சீரழிதல்போல்
பொருளை விரும்பும் ஒருசில குச்சுக்
காரிகள் பின்னால் கழித்தான் பலஇரா-
ஓரிரா வீட்டுக்கு வந்தான், மனைவியை
வேண்டினான்; விரும்பி மணந்தவன் தன்மனை
தாண்டினான் கட்சிவிட் டோடும் தலைவன்போல்,
தப்பினை ஓப்பா தமிழச்சிஅவள்
கண்டதைக் கேட்டதைச் சொல்லிக் காட்டித்
தான் அப்படித் தவறுசெய்து மீண்டால்
ஊனில் உயிர் ஒட்டி யிருக்குமா என்றாள்.
உரிய மனைவியின் உரிமைக் குரலோ
விரியும் மின்னல் வெட்டெனக் கேட்டது.
கேட்டதும் கீழிருந்த விறகுக் கட்டையை
ஓட்டினான் மங்கைமேல், ஓதுங்கினாள் மனைவி.
வீசிய கட்டை வாசலில் தூங்கிய
ஓராண்டுக் குழந்தையின் உயிரைக் குடித்தது.
பேராற்றைப்போல் பேசிடவில்லை.
எறிந்த கட்டையை எடுத்துக் கணவனைக்
குறிபார்த் தடித்தாள், தப்பவில்லைகுறி!
வழக்கு மன்றில் வந்து நிறுத்தினர்;
"ஓழுக்கம் தவறினான்; ஓரேஒரு மகனையும்
சாகடித்தான் சாகடித்தானைச்
சாகடித்தேன் நான், சாகடிக்கும் சட்டம்
உங்கட் கிருப்பதை ஒப்பு கின்றேன்;
எங்கோ எவனோ எப்பொழுதோதன்
கங்குல் மனத்துக் கருஞ்சட்டம்அது
எங்கள் வழக்கு தீர்ந்து முடிந்தது;
உங்கட் கென்ன உரிமைஇருக்கின்றது?
கொலைக்கும் உமக்கும் தொடர்பிலை, ஆனால்
கொலைபுரிந்திடநீர் கொடுக்கும் தண்டனை
கூலிக்குரியது; இருகொலை முடிந்தது;
மற்றொரு கொலையைச் சட்டம்
குற்றமாய்ச் செய்தல்ஏன் என்றாள், மறத்தியே!
|
( 275 )
( 280 )
( 285 )
( 290 )
( 295 )
( 300 )
( 305 )
|
|
|
|