பக்கம் எண் :

குடும்ப விளக்கு

நான்காம் பகுதி

ஓராண்டு

வான்பார்த்துக் கிடந்த மேனி
மண்பார்த்துக் கவிழ்ந்தும், பின்னர்
தேன்பார்த்த மலர்க்கை யூன்றிச்
செம்மையாத் தவழ்ந்தும் நின்றும்
தான்பார்க்க அங்கும் இங்கும்
தள்ளாடி நடந்தும், கெண்டை
மீன்பார்த்த கண்ணால் பெண்ணாள்
ஓராண்டு மேவல் உற்றாள்,

பட்டுப்பா வாடை கட்டி
பச்சைப்பூச் சட்டை இட்டுக்
கட்டிய முல்லைக் கண்ணி
கரும்பாம்பின் பின்னல் தன்னில்
நெட்டுறச் சூட்டி, நெற்றி
நேர்உறச் சுட்டி வைத்து,
விட்டனள் அமிழ்தை ஆடத்
தாழ்வார மீதில் அன்னை!





( 5 )





( 10 )




( 15 )

ஓடி வா

சிந்து கண்ணி

அமிழ்தே
அன்பின்
தமிழின்
தங்கப்

கமழும்
கண்ணின்
குமியும்
குத்து

பச்சைக்
பாடும்
அச்சுப்
ஆடும்

மெச்சும்
விரியும்
தச்சுத்
தங்கப்

வள்ளத்
வானம்
வெள்ளப்
வீட்டு

துள்ளும்
தோகை
அள்ளும்
அன்பின்

முத்து
மும்மைத்
கத்தும்
கட்டிக்

தொத்தும்
தூண்டா
கொத்துப்
குழந்தை

செல்வப்
செந்தா
கல்விப்
காவிரி

முல்லைக்
மூசைத்
அல்லிப்
அன்பின்

தென்றற்
செவ்விள
குன்றாச்
கொள்ளா

ஒன்றா
ஓவியக்
மன்றின்
மல்லிகை

பாடும்
பருகும்
நாடும்
நடைஓ

சூடும்
சோலை
வாடா
வஞ்சிக்

தண்டைக்
சங்கத்
கெண்டை
கிள்ளை

பெண்டிர்க்
பேறே
ஒண்டொ
ஓடைப்

அமிழ்தே
விளைவே
சுவையே
பாப்பா

பூவே

மணியே
புகழே
விளக்கே

கிளியே

தும்பி
பெண்ணே
கொடியே

குயிலே

சுடரே
திறமை
புதையே

தேனே

பாடி
பாலே
விளக்கே

கன்றே

மயிலே
சுளையே
கனியே

நிலாவே

தமிழே
கடலே
கரும்பே

கிளியே

விளக்கே
பூவே
அமிழ்தே

பொருளே

மரையே
பொருளே
ஆறே

கொடியே

தங்கம்
பூவே
அமிழ்தே

காற்றே

நீரே
சுவையே
அழகே

உணர்வே

கனவே
மணியே
மலரே

சிட்டே

சாறே
திருவே
வியமே

தாரே

நிழலே
மலரே
கொடியே

குலுங்க

தமிழே
விழியே
மொழியே

கரசி

உயிரே
டியாளே
புனலே

ஓடிவா-என்
ஓடிவா
ஓடிவா-என்
ஓடிவா

ஓடிவா-என்

ஓடிவா
ஓடிவா-என்
ஓடிவா

ஓடிவா-என்

ஓடிவா
ஓடிவா-என்
ஓடிவா

ஓடிவா-என்

ஓடிவா
ஓடிவா-என்
ஓடிவா

ஓடிவா-என்

ஓடிவா
ஓடிவா-என்
ஓடிவா

ஓடிவா-என்

ஓடிவா
ஓடிவா-என்
ஓடிவா

ஓடிவா-என்

ஓடிவா
ஓடிவா-என்
ஓடிவா

ஓடிவா-என்

ஓடிவா
ஓடிவா-என்
ஓடிவா

ஓடிவா-என்

ஓடிவா
ஓடிவா-என்
ஓடிவா

ஓடிவா-என்

ஓடிவா
ஓடிவா-என்
ஓடிவா

ஓடிவா-என்

ஓடிவா
ஓடிவா-என்
ஓடிவா

ஓடிவா-என்

ஓடிவா
ஓடிவா-என்
ஓடிவா

ஓடிவா-என்

ஓடிவா
ஓடிவா-என்
ஓடிவா

ஓடிவா-என்

ஓடிவா
ஓடிவா-என்
ஓடிவா

ஓடிவா-என்

ஓடிவா
ஓடிவா-என்
ஓடிவா

ஓடிவா-என்

ஓடிவா
ஓடிவா-என்
ஓடிவா




( 20 )






( 25 )





( 30 )






( 35 )






( 40 )







( 45 )






( 50 )






( 55 )






( 60 )







( 65 )






( 70 )






( 75 )






( 80 )

அறுசீர் விருத்தம்

வேடப்பன் வந்தான் அங்கே
விளையாடும் குழந்தை கண்டான்
ஓடச்செய் கின்றாய் காலும்
ஓயாதோ குழந்தைக் கென்றான்
கோடைக்குக் குளிரே 'நான் ஓர்
குதிரை, நீஅரசி என்றான்
கூடத்தில் மண்டி போட்டான்
குழந்தையை முதுகில் கொண்டான்





( 85 )


அப்பாக் குதிரை

சிந்து கண்ணி

அப்பாக் குதிரை ஆட்டக் குதிரை
அஞ்சாக் குதிரை ஏய் ஏய் ஏய்
தப்பாக் குதிரை தாவும் குதிரை
தளராக் குதிரை ஏய் ஏய் ஏய்
சப்பைக் குதிரை இல்லை இல்லை
தமிழ்க் குதிரை ஏய் ஏய் ஏய்
ஒப்பும் குதிரை ஓயாக் குதிரை
ஒற்றைக் குதிரை ஏய் ஏய் ஏய்!

பேசும் குதிரை பெருத்த குதிரை
பிழையாக் குதிரை ஏய் ஏய் ஏய்
தோசைக் குதிரை சோற்றுக் குதிரை
சோராக் குதிரை ஏய் ஏய் ஏய்
மீசைக் குதிரை வெற்றிக் குதிரை
வேட்டைக் குதிரை ஏய் ஏய் ஏய்
தேசுக் குதிரை தெற்குக் குதிரை
சேரன் குதிரை ஏய் ஏய் ஏய்!


( 90 )




( 95 )





( 100 )




சோறூட்டல்

அகவல்

உருக்கிய நெய்யும் பருப்பும் இட்ட
சோற்றுடன் மிளகுநீர் துளியள வூற்றிச்
சிறிய வள்ளத்தில் சேர்த்தெடுத்துக்
குழந்தைக்குக் காக்கை காட்டி
விழுங்க வைப்பாள் மென்னகை முத்தே.

( 105 )




சிந்து கண்ணி

காக்கா
கைப்பிள்    
பாக்கியை
பறந்து
ஆக்கிய
அதுவா
தூக்கிக்
சுருக்காய்
உன்வாய்
ஒண்டொடி
தன்னால்
தண்ணீர்
சொன்னால்
சோற்றை
இன்னும்
இதையும்
காக்கா
ளைக்குச்
நீஅள்
போஎன்
சோறென்
வேண்டும்
கொண்டா
வாங்கும்
பெரிய
வாய்தான்
உண்ணும்
குடிக்க வா
கேட்கும்
உண்ணும்
காக்கா
உண்டு

கண்ணாட்டி
சோறூட்டி
ளிக்கொண்டே
கற்கண்டே
சிட்டுக்கே
எட்டிப்போ
போய்விடுவாய்?
இன்னொருவாய்.
ஒளிவாயாம்
கிளிவாயாம்
என் தங்கம்
அஞ்சும்?
என் பட்டும்
இம் மட்டும்
நெருங்கிவா
பறந்துபோ

( 110 )




( 115 )




( 120 )




( 125 )

நிலாக்காட்டல்

அறுசீர் விருத்தம்

மேற்றிசை ஒளிவெள் ளத்தில்
வீழ்ந்தது செங்க திர்போய்த்
தூற்றிய முத்துக் கொல்லை
முழுநிலாத் தோற்றம் கண்டார்
காற்றிலோர் குளிரும் கண்டார்.
மாடியில், நிலாமுற் றத்தில்
ஏற்றினார் அமிழ்தைப் பெற்றார்
எழில்நிலாக் காட்டுகின்றார்.





( 130 )



சிந்துகண்ணி

நிலா
நிறைவி
உலா
ஒளியு
குலா
கொஞ்ச
பலா
பழமெ
   நிலா
   நிறைவி
அழகெ
அன்பெ
முழுநிலா
முத்த
பழக
பைந்த
விழியி
மெய்யி
   நிலா
   நிறைவி
வானம்
மங்கா
கூனி
குட்டை
சீனத்
சிரிப்பு
கானல்
காண
   நிலா
   நிறைவி
விண்ணக்
விரித்த
உண்ணக்
உரித்த
பண்ணும்
பச்ச
வெண்பட்
விழுங்கி
   நிலா
   நிறைவி
நிலா
ளக்கே
வினாய்
ரிந்தாய்
வலாம்
லாம்கற்
மரம்
லாம்கற்
   நிலா
   ளக்கே
லாம்எ
லாம்உ
என்
மொன்று
லாம்இ
மிழுண்
லேஒ
லேகு
   நிலா
   ளக்கே
நீலத்
தமத்
மீன்கள்
நீஎன்
துப்பால் 
முகத்தையும்
வெளியும்
மனமும்
   நிலா
   ளக்கே
கடலில்
இலையில்
குவித்த
கிழங்கின்
வெள்ளித்
ரிசியின்
டான
டும்பா
   நிலா
   ளக்கே

வாவா-ஒளி
வா வா
விண்ணில்-நீ
கண்ணில்
நாட்டில்-இனிக்
கண்டு
உண்டு-நற்
கண்டு
   வாவா- ஒளி
   வாவா!
னக்கே-என்
னக்கே
பூவே-உன்
தேவை
றங்கு-நற்
டிங்கு
ளிர்ந்தாய்-என்
ளிர்ந்தாய்
   வா-ஒளி
   வாவா!
தோப்பு-நீ
தாப்பு
மின்னும்-ஒளிக்
றெண்ணும்
கோப்பை-நீ
சாய்ப்பை
குளிரும்
ஒளிரும்
   வாவா-ஒளி
   வாவா!
தெப்பம்-நீ
அப்பம்
தளியல்-நீ
அளியல்
தட்டு-நீ
பிட்டு
குடையே-நீ
லடையே
   வாவா-ஒளி
   வாவா!


( 135 )




( 140 )




( 145 )




( 150 )




( 155 )




( 160 )




( 165 )




( 170 )

பேச்சு

(அகவல்)

மரப்பா வைகள் வைத்துவிளை யாடும்
அமிழ்தொடு நகைமுத் தமர்ந்திருந்தாள்
மாவரசும் வந்தான்; மகள்வர வேற்றாள்
அமிழ்தை நோக்கி "நான் யாரம்மா?" என்றான்
அமிழ்தம் "ஐயா" என்றாள். அதனால்
குன்றியது முகம் கொதித்தது நெஞ்சம்
மாவர சுக்கு! மகளை நோக்கி
யான் அயலானா? ஏன்என்னைத் தாத்தா
என்று சொல்ல வில்லை" என்றான்
அதுகேட்டுத் "தாத்தா" என்றாள் அமிழ்து.
முகமும் மலர்ந்தது! மாவரசுக்(கு)
அகமும் மலர்ந்தது! நகைமுத்தும் அங்ஙனே!


( 175 )




( 180 )




( 185 )

தேவை

(அகவல்)

காலை உணவுண்டு கடைக்குப் புறப்படும்
வேடன் "என்ன வேண்டும என்றான்
அமிழ்துதன் தேவையை அறிவிக் கின்றாள்;
"கோழி" 'நாயி குட்டி' 'அம்மா.'
இதுகேட்டு நகைமுத் தியம்பு கின்றாள்;
'அத்தான் குழந்தை' அம்மா என்றாள்
என்போல் இன்னுமோர் அம்மா
அன்றுகேட்டது! பொம்மை அம்மாவே,"





( 190 )



குறளில் கோயில் இல்லை

அகவல்

நாடிமுத்து வேடப் பனிடம்
"இன்றி யமையா ஒன்றுக் காகக்
கடன்பத்து ரூபாய் கொடு" வென்று கேட்டான்
வேடன் கொடுப்பதாய் விளம்பினான். அதற்குள்
அமிழ்து, திருக்குறள் ஒன்றை அங்கையில்
தூக்கி வந்து தொப்பென்று போட்டுக்
"கோவிலு காட்டுப்பா" என்று கூறினாள்.
"குறளில் கோயிலே இல்லை யம்மா"
என்றான் வேடன். இதனைக் கேட்ட
நாடிமுத்து நவிலுகின்றான்;
'தில்லைக் கோவிலுக்குச் செல்ல எண்ணியே
பத்துரூபாய் பணம் உன்னைக் கேட்டேன்.
கோயில் இல்லையா குறளில்?
ஆயில்என் பணத்துக் கில்லை அழிவே!"


( 195 )




( 200 )




( 205 )

சேறும் சோறும் தேன்

அகவல்

அறையில் தூங்கி யிருந்த அமிழ்து
சிறகுவிரித் துதறிச் செங்கா லன்னம்
நடைதொ ங்கியதென நடந்து, தாழ்வாரத்(து)
இடையி லிருந்து மைக்கூட்டை எடுத்து
கொல்லையின் முல்லைக் கொடியின் அடியில்
சாய்த்து நீலம் சார்ந்த சேற்றால்
சிற்றில் ஒன்று செய்து முடித்தபின்
தந்தை உண்ணும் தயிரின் சோற்றை
அங்கையால் அள்ளி ஆ ஆஎன்றாள்!
அப்பனும் வாய்திறந் ததைவாங்கி உண்டான்
தொடர்ந்து நடந்த திந்தத் தொண்டு,
சின்னவள் அன்னை யான திறத்தை
நகைமுத்துக் கண்டு மிகமகிழ்ந் திருந்தாள்,
சேறும் சோறும் தந்தைக்குத் தேனே!
நீலத் தயிரும் நிலாநிறத் தயிரே!
'அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்' எனச் செப்பிய
வள்ளுவர் வாய்ச்சொல் பொய்என
விள்ளுவர் உளரோ விரிநீர் உலகிலே!



( 210 )




( 215 )




( 220 )




( 225 )

அன்பு பெருகுக

அகவல்

அன்னை தங்கம் அமிழ்தொடு பேசித்
தலைக்கடை அறையில் நிலைக்கண் ணாடியின்
முன்னின்று தன்எழில் முகம்பார்த் திருந்தாள்.
தனித்துவே டப்பன் தாழ்வாரத் திருந்தான்.
இனிக்க அமிழ்தும் எதிர்வந்து நின்றாள்!
சுவரி லேதன் உருப்படம் தொங்கியது
கண்ட அமிழ்து கனிவாய் திறந்து
'இதில் நான்சின்னவள்-இப்போது பெரியவள்'
என்றாள் 'ஆம் ஆம்' என்றான் தந்தை!
'எப்படிப் பெரியவள் ஆனேன்' என்றாள்.
'உருப்படம் எடுக்கையில் ஓராண்டுனக்கே.
இப்போது மூன்றாண்டாயின்' என்றான்.
'ஆண்டுகள் எப்படித் தாண்டும்' என்றாள்.
'நேரம் போகப் போக நேரே
ஆண்டும் போகும் அல்லவா' என்றான்
'நேரம் போவதை நேரில் பார்க்கக்
கூடுமோ' என்று கூறினாள் அமிழ்து
'பார்இதோ மணிப் பொறி நேரம்ஓடுவதை
இருமுள் ஓடிக் காட்டும் என்றான்.
'முள்ஓடவில்லையே' என்று மொழிந்தாள்
ஓடுவது தெரியாது ஓடுகின்றது நாள்,
வளர்வது தெரியாது வளர்கின் றாய்நீ'
என்றுவே டப்பன் இயம்புகின்றான்.

தங்கமும் தனது தலைமுடி நோக்குவாள்,
'நரைப்பது தெரியாது - நரைக்கின் றதுமுடி'
என்று தனக்குள் இயம்புகின்றாள்

'பழுப்பது தெரியாது பழுக்கின் றதுபழம்'
என்று கொல்லையில் இருந்த நகைமுத்தும்
பத்துத் திங்கள் நிறைந்த பலாப்பழம்
தாங்கி நடந்து, தன்இடை நோவதாய்
ஏங்கி மாமியிடம் இசைக்க லானாள்.
'பெருகுவது தெரியாது பெருகின் றதுயிர்'
என்பதும உண்மை போலும்!
அன்பு பெருகுக வையம் அமைதிக்கே!




( 230 )




( 235 )




( 240 )




( 245 )





( 250 )





( 255 )




( 260 )

நடந்து வந்த கரும்பு

அகவல்

நல்வே டப்பனின் இல்லம் நிறைந்தது.
மாவரசு மலர்க்குழல் வந்திருந் தார்கள்
மற்றும் இவர்களின் மக்களும் இருந்தனர்
வேடப் பன்ஓர்பால் வீற்றிருக் கின்றான்.
எழில்நகை முத்தும் ஈன்றதன் நீலப்
பூவிழிச் செவ்விதழ்ப் புதுயிள மைந்தனை
'இளஞ்சேரன்' வாஎன இருக்கையில் ஒருபுறம் மயிலென உலவு கின்றாள்
புகைப்படம் எடுக்கும் புலவரும் வந்தார்
முற்றத்தில் இருக்கை வரிசையில் முடித்தார்
யாவரும் வரிசையில் இருக்க லுற்றார்!
அமிழ்தம் எங்கே! அனைவரும் எழுந்தார்
அறையெல்லாம் பார்த்தார் அங்கெல்லாம் இல்லை
கொல்லையில் நிலவுசெய் முல்லைக் கொடியும்
சின்னஞ்சிறிய செங்கதிர் போல
மன்னிய சாமந்தி மலர்ந்த செடியும்
குலுங்கு நீலாம்பரக் குள்ளச் செடியும்
முததுச் சிரிப்பு முழுப்பொன் னாடை,
கருவிழி இவைபூத்த கட்டிக் கரும்பும்
அங்கே கூடி அழகுசெய் திருப்பதைக்
கண்டனர்; கண்ணே என்றுகை யேந்தினர்
நீலாம்பரம் அங்ஙனே நின்றி ருந்தது!
முல்லைக் கொடியும் நல்ல சாமந்தியும்
அங்ஙனே நின்றி ருந்தன ஆயினும்,
கைதூக்கி, 'அப்பா' என்று கனிதமிழ்க்
கட்டிக் கரும்பு மட்டும் கலகலத்
தண்டை பாடத் தாவி வந்தாள்.
புகைப்படப் புலவர், வகைப்பட எவரையும்
முற்றத்தில் உட்கார வேண்டினார்
உற்று நோக்கினார் உருக்கவர் பெட்டியே!




( 265 )




( 270 )




( 275 )




( 280 )




( 285 )




( 290 )

புகைப்படம்

(அகவல்)

நடுநாற் காலியில் நகைமுத்துக் கைப்புறம்
அன்பிளஞ் சேரன் அண்டையில் அமிழ்து
வேடன் முதலியோர் பீடும் அமைந்தார்
பொருந்திய வண்ணம் புறத்தின் அழகைப்
புகைப்படம் எடுத்தே; அகத்தின்
மகிழ்ச்சியை வான்படம் எடுக்க விட்டே.





( 295 )

திராவிட மக்கள் வாழிய

(அகவல்)

அமிழ்து சரியாய் ஆறாண் டடைந்தாள்
தமிழ்தரும் தனித்தமிழ்ப் பள்ளி சென்றே
அதோவரு கின்றாள் அங்கைச் சுவடியோடு,
வேடன் நகைமுத்து வீட்டில் அப்போதில்
இளஞ்சே ரனை நீயார் என்று கேட்டுப்
பதிலை எதிர்பார்த் திருத்தார். அவனோ
தன் மார்பு காட்டி 'நான் தம்பி' என்றான்,
"தமிழன் என்றுநீ சாற்றடா தம்பி"
என்றே இயம்பி அமிழ்து வந்தாள்.
வாழிய தமிழ் மக்கள்!
வாழிய நற்றமிழ் வையம் இனிதே!




( 300 )




( 305 )