பக்கம் எண் :

இசையமுது

(இரண்டாம் பகுதி)

தமிழ்
நாடாண்டாயே

நாடாண் டாயேத மிழேநீ
ஞாலம் ஆண்டாய் வாழ்வும் ஈந்தாய்!

ஏடுயாவும் நீயே, மக்கள் எண்ணம
எவைகளும் நீயே பகை தீர்ந்தே                  (நா)

நாடு மீளவே கேடு தீரவே
நாமினி இலங்கி நனி வாழவே                     (நா)

இனிதாகிய தமிழே எனதுயிரே
இளைஞர்க்கிடை மூளுகின்ற உணர்வே!

கனியினும் மிகுசுவையே உனைநான்
காணாப்போது கவலை மிகுந்திடுதே

கனல்நிகர் ஆரியர் நலிவேசெயினும்
கலையாவும் வெந்துபோகச் செயினும

புனலிடைத் தமிழ்நூற்களெலாம் போயினும
புதுமை இளமை எனும்படி                       (நா)






( 5 )






( 10 )
எது இசை?

தமிழ் பாடல் முறையா, நாட்டிலே
கண்,

  வாயைக் காட்டல் முறையா?
     எது முறை சொல்க மனமே!

தமிழ் பேசுவார்க்குத் தீந்தமிழினிதோ
தாங்களறியாத பிறமொழி பாடுதல் இனிதோ

மொழி பொருள் மிகநன்றாய்க் காட்டுதல் கவியா?-தம்
விழிபல் உதடுகாண அதட்டல் கவியா?

பிழைபட நிந்தனைபட நடப்பது நலமா?
பெருமை ஓங்குமாறு தமிழைப் போற்றுதல் நலமா? (த)

( 15 )






( 20 )
தமிழ்த் தொண்டு

தமிழ்என்னும் மணிவிளக் கேற்றடா நாட்டில்
தமிழரின் நெஞ்சமாம் அழகான வீட்டில்!
அமுதென்று கொள்ளடா செந்தமிழ்ப் பணியை
அறமென்று கொள்ளடா செந்தமிழ்ப் பணியை            (த)

தமிழ்என்ற உணவினைக் குவியடா யார்க்கும்
தமிழருக் கிங்குள்ள குறையெலாம் தீர்க்கும்
சமமாக ஆற்றடா தமிழூழியத்தைச்
சகலர்க்கும் ஆற்றடா தமிழூழியத்தை.                   (த)

தமிழென்ற வன்மையைக் கூட்டடா தோளில்
தமிழர்க்கு நலமெலாம்வரும் ஒரே நாளில்
அமைவினால் புரியடா செந்தமிழ்த் தொண்டே
அன்பினால் புரியடா செந்தமிழ்த் தொண்டு.               (த)


தமிழ்என்னும் உணர்வினனச் சேரா எங்கும்
தமிழரின் ஆட்சியே உலகெலாம் தங்கும்
இனமயேனும் ஒயாது தமிழுக் குனழப்பாய்
இன்பமே அதுவென்று தமிழுக் குனழப்பாய்               (த)             

( 25 )





( 30 )





( 35 )
முழங்கும் குறள்

முழங்கிடுகின்றதே அறம்                     (மு)

முட்டுப்படும்உலகே இனவேற்றுமை
பட்டுக்கெடும் உலகே நம்திருக்குறள்             (மு)

  'உள்ளத்தால் பொய்யா தொழுகின் உலகத்தார்
  உள்ளத்துளெல்லாம் உளன்' எனல் கேட்டீரோ

வாய்மை அடிப்படை மக்களைச் சேர்க்கும்
மாண்பிலா ஆட்சி யாளரை நீக்கும்
தாய்மொழி தன்மையும் மீட்டுக் காக்கும்
தள்ளத் தகாத்திரு வள்ளுவர் வாய்மொழி          (மு)

  'எண்ணிய எண்ணியாங் கெய்துப எண்ணியார்
  திண்ணிய ராகப்பெறின்' எனல்கேட்டீரோ?

ஒற்றுமை ஒன்றினால் அச்சம் பறக்கும்
ஊருக் குழைப்பதோர் வீரம் பிறக்கும்
சற்றும் பிசகாமல் எண்ணிய நலங்கள்
சாரும்என்று திரு வள்ளுவரின் குறள்             (மு)

  'துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பால
  ஊட்டா கழியும் எனின்' எனல்கேட்டீரோ!

நாட்பட்டுப் போனஓர் சட்டத்திலே ஒரு
நல்லது செய்யாத சட்டத்திலே
ஆட்பட்டுப் போகாமல் ஒற்றுமையாயதை
ஆற்றலில் மாற்றுக என்று திருக்குறள்             (மு)

  "அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவ
  தஞ்சல் அறிவார் தொழில எனல் கேட்டீரோ?

அஞ்சத் தகுந்ததற் கஞ்சுதல் வேண்டும்
அஞ்சத் தகாததற் கஞ்சிட லாமா?
கெஞ்சினால் மிஞ்சுவர் கேடாள வந்தார்
கிளர்ச்சி தேவைஎன் றுணர்த்திய திருக்குறள்.         (மு)





( 40 )





( 45 )








( 50 )





( 55 )







( 60 )

நிலவே
நிலவே நீ முன் நடந்ததை கூறுவாய்! மெய்யாய்க் கூறுவாய்
இலகு செந்தமிழையும் உன்னையும் கூட்டி
இயற்கை அன்னைவளர்த்த திலையோ பாலூட்டி

   சங்கமேறித்தமி ழுலகிருள் போக்கித்
   தாவியெழில் வானமிசை நீயுலவத்
   தமிழ்வாழ்த்தி உனைவாழ்த்தி மக்கள் வாழ்வு
தொடங்கியதை மறந்தனையோ குளிர்ந்த வெண்ணிலவே நீ!

வடமொழிக்குதவி தமிழ்மொழி அன்றோ?
மறுமொழி கூறாதிருப்பது நன்றோ?
கடல்சூழ் வையம் ஆண்டதும் தமிழோ?
கையேந்தி வந்தவர் பேசிய மொழியோ?             (நில)

ஆரியர் ஆட்சி வாய்த்த பின்னை
அழகிய தமிழ்நூ லாகிய பொன்னை
வேரொடு மாற்றிட வஞ்சம் என் னென்ன
விளைத்தார் அதைத்தான் கேட்டேன் உன்னை.         (நில)

( 65 )






( 70 )





( 75 )