பக்கம் எண் :

தமிழியக்கம்

8. அரசியல்சீர் வாய்ந்தார் ( 3 )


தமிழாய்ந்த தமிழன்தான்
தமிழ்நாட்டில் முதலமைச்சாய்
வருதல் வேண்டும்

தமிழ்ப்பகைவன் முதலமைச்சாய்த்
தமிழ்நாட்டில் வாராது
தடுத்தல் வேண்டும்.

நமை வளர்ப்பான் நந்தமிழை
வளர்ப்பவனாம்! தமிழ் அல்லால்
நம்முன்னேற்றம்

அமையாது. சிறிதும் இதில்
ஐயமில்லை, ஐயமில்லை
அறிந்து கொண்டோம்.

தமிழ் ஏங்கே! தமிழன் நிலை
ஏன்ன ஏனத் தாமறியாத்
தமிழர் ஏன்பார்

தமிழர் நரம் காப்பவராய்
அரசியலின் சார்பாக
வர முயன்றால்

இமைப்போதும் தாழ்க்காமல்
எவ்வகையும் கிளர்ந்தெழுதல்
வேண்டும்! நம்மில்

அமைவாக ஆயிரம்பேர்
அறிஞர் உள்ளார் எனமுரசம்
ஆர்த்துச் சொல்வோம்.

நகராட்டி சிற்றூரின்
நல்லாட்டி மாவட்ட
ஆட்சி என்று

புகல்கின்ற பல ஆட்சிக்
கழகங்கள் எவற்றினுமே
புகநினைப்பார்

தகுபுலமை குறிக்கின்ற
சான்றுதர வேண்டுமெனச்
சட்டம் செய்தால்

அகலுமன்றோ தமிழ்நாட்டின்
அல்லலெல்லாம்? அல்லாக்கால்
அமைதி யுண்டோ?

தமிழறியான் தமிழர் நிலை
தமிழர்நெறி தமிழர்களின்
தேவை, வாழ்வு

தமையறிதல் உண்டோ எந்
நாளிமில்லை! தமிழறியான்
சுவையே காணான்!

சுமைசுமையாய் அரசியல்சீர்
சுமந்தவர்கள் இதுவரைக்கும்
சொன்னதுண்டோ

தமிழ்க்கல்வி தமிழ் நாட்டில்
கட்டாயம் என்பதொரு
சட்டம் செய்ய!

ஆங்கில நூல் அறிவக்குச்
சான்றிருந்தால் அதுபோதும்
அலுவல் பார்க்க!

ஈங்குள்ள தமிழர் நெறி
அவர்க்கென்ன தெர்ந்திருக்கும்?
இதுவுமன்றி.

மாங்காட்டுச் செவிடனெதிர்
வடிகட்டி ஊமையரை
வைத்ததைப்போல்

தீங்கற்ற தமிழறியான்
செப்தமிழ் நாட்டலுவலின்மேற்
செல்லலாமோ.




( 5 )






( 10 )





( 15 )






( 20 )






( 25 )





( 30 )






( 35 )






( 40 )





( 45 )






( 50 )






( 55 )





( 60 )
9. புலவர் ( 1 )

தமிழ்ப்புலவர் ஒன்றுபடும்
நன்னாளே தமிழர்க்குப்
பொன்னாளாகும்!

தமிழ்ப் பெருநூல் ஒன்றேனும்
ஒற்றுமையைத் தடைசெய்யக்
கண்டதுண்டோ?

தமிழ்ப் புலவர் தமக்குள்ளே
மாறுபட்ட தன்மையினால்
இந்நாள் மட்டும்

தமிழ்ப் பெருநா டடைந்துள்ள
தீமையினைந் தமிழறிஞர்
அறிகிலாரோ?

ஒல்காத பெரும் புகழ்த் தொன்
காப்பியமும், நன்னூலும்
தமிழர்க் கெல்லாம்

நல்கரிய நன்மை யெலாம்
நல்கின என் றால்நாமும்
நன்றி சொல்வோம்

செல்பலநூற் றாண்டுசெல
அவ்விருநூல் திருவடியில்
புதிய நூற்கள்

பல்காவேல் இருநூற்கும்
பழியே! நம் புலவர்க்கும்
பழியே யன்றோ?

நனித்தியங்கத் தக்கதெனத்
தமிழ்பற்றித் தமிழ்ப்புலவர்
சாற்று கின்றார்

இனித்திடும் அவ் விருநூலுள்
வடமொழி ஏன்? வட எழுத்துக்கு
ஒழுங்கு தான் ஏன்?

தனித் தமிழில் இந்நாட்டுத்
தக்கபுதுக் காப்பியம், நன்
னூல், இயற்ற

நினைப்பாரேல் நம்புலவர்
நில வாவோ ஆயிர நூல்
தமிழகத்தே.

முதுமைபெறு சமயமெனும்
களர் நீலத்தில் நட்டதமிழ்ப்
பெருநூல் எல்லாம்

இதுவரைக்கும் என்னபயன்
தந்ததென எண்டுகையில்
நான்கு கோடிப்

பொதுவான தமிழரிலே
பொன்னான தமிழ் வெறுத்தார்
பெரும்பாலோராம்!

புதுநூற்கள் புதுக் கருத்தால்
பொது வகையால் தரவேண்டும்
புலவரெல்லாம்

சோற்றுக் கென் றொருபுலவர்
தமிழ் எதிர்ப்பார் அடி வீழ்வார்
தொகையாம் செல்வப்

பேற்றுக் கென்றொருபுலவர்
சாஸ்திரமும் தமிழ் என்றே
பேசி நிற்பார்!

நேற்றுச்சென்றார்நெறியே
நாம் செல்வோம் என ஒருவர்
நிகழ்த்தா நிற்பார்!

காற்றிற்போம் பதராகக்
காட்சியளிக் கின்றார்கள்
புலவர் சில்லோர்!






( 65 )






( 70 )





( 75 )






( 80 )






( 85 )





( 90 )






( 95 )






( 100 )





( 105 )






( 110 )






( 115 )





( 120 )

10. புலவர் ( 2 )

சீவல்லபத் திருவள்
ளுவரானார் என்றொருவர்
செப்பலுற்றார்!

நாவன்மை என்றதுவும்
செந்தமிழை நலிப்பதற்கோ?
நாணிலாரோ?

பாவளிக்கும் சுவை முழுதும்
பருகி விட்ட தாயுரைக்கும்
ஒருவர் சொல்வார்

கோவையிட்ட கம்பன்து
செயியுளிலே முக்காலும்
கோணல் என்றே.

கம்மனார் பதினோரா
யிரம் பாட்டில் முக்காலும்
கழித்துப் போட்டு

நம்பினால் நம்புங்கள்
இவைதாம் கம்பன் செய்யுள்
எனஅச்சிட்டு

வெம்புமா றளிக்கையிலும்
மேவாத செயல் இதனைச்
செய்ய இந்தக்

கொம்பன் யார் எனக் கேட்க
ஆளில்லையா புலவர்
கூட்டந் தன்னில்?

''வாட்டடங்கண்'' ''கற்றரை''யை
வாள்த்தடங்கண் கல்த்தரை என்று
எழுதி முன்னைப்

பாட்டினிலே பெரும் பிழையைப்
பல்குவிப்பா னுக்குமணிப்
பண்டி தர்கள்

சாட்டைகொடுத் தறிக்கை விடத்
தாள்ஒன்றும் அற்றதுவோ!
தமக்குக் சோறு

போட்டிடுவார் ஒப்புகிலார்
எனுங் கருத்தோ மானமற்ற
போக்குத் தானோ!

வடமொழியும் தெரியும் எனப்
பொய் கூறி வடமொழிக்கு
வாய்ப்பும் நல்க

வடமொழி யானைக் கொண்டு
மொழி பெயர்த்து வருவார்க்கு
வண்டமிழ்ச் சீர்

கெடுவதிலே கவலையில்லை.
ஆரியரை ஆதரித்துக்
கிடப்ப தொன்றே

நடைமுறையில் நலன் விளைக்கும்
என்னு மொரு மடமையினை
நசுக்க வேண்டும்.

அரசினரின் மொழியாக,
அரசியலார் மொழியாக,
அரசியல் சார்

வரிசையுறு சட்டமன்றின்
மொழியாக, வையம் அறி
மொழிய தாகத்

திருமலிந்த தமிழ் மொழிதான்
ஆகும்வகை நம்புலவர்
சேர்ந்து தொண்டு

புரிக என வேண்டுகின்றோம்
பொழிக என வேண்டுகின்றோம்
பொன்மழைதான்!




( 125 )






( 130 )





( 135 )






( 140 )






( 145 )





( 150 )






( 155 )






( 160 )





( 165 )






( 170 )






( 175 )





( 180 )
11. குடும்பத்தார்

அன்னை தந்த பால்ஒழுகும்
குழந்தைவாய் தேன்ஒழுக
அம்மா என்று

சொன்னதுவும் தமிழன்றோ!
அக்குழந்தை செவியினிலே
தோய்ந்த தான

பொன்மொழியும் தமிழன்றோ!
புதிதுபுதிதாய்க்கண்ட
பொருளினோடு

மின்னியதும் தமிழன்றோ!
விளையாட்டுக்கிளிப் பேச்சும்
தமிழே யன்றோ!

வானத்து வெண்ணிலவும்
வையத்தின் ஓவியமும்
தரும் வியப்பைத்

தேனொக்கப் பொழிந்ததுவும்
தமிழன்றோ! தெருவிலுறு
மக்கள் தந்த

ஊனுக்குள் உணர்வேயும்
தமிழன்றோ! வெளியேயும்
உள்ளத் துள்ளும்

தான் நத்தும் அனைத்துமே
காட்சி தரும் வாயிலெல்லாம்
தமிழேயன்றோ

திருமிக்க தமிழகத்தின்
குடும்பத்தீர்! இல்லறத்தீர்!
செந்தமிழ்க்கே

வருமிக்க தீமையினை
எதிர்த்திடுவீர் நெஞ்சாலும்
வாய்மெய்யாலும்!

பொருள் மிக்க தமிழ்மொழிக்குப்
புரித்திடுவீர் நற்றொண்டு;
புரியாராயின்.

இருள்மிக்க தாகிவிடும்
தமிழ் நாடும் தமிழர்களின்
இனிய வாழ்வும்!

காக்கை ''கா'' என்றுதனைக்
காப்பாற்றச் சொல்லும்! ஒரு
கருமுகில்தான்,

நோக்கியே ''கடமடா''
என்றேதன் கடனிரைக்கும்
நுண்கண் கிள்ளை

வாய்க்கும் வகை 'அக்கா' என்
றழைத்ததனால் வஞ்சத்துப்
பூனை ''ஞாம் ஞாம'' (நாம்)

காக்கின்றோம் எனச் சொல்லக்
கழுதை அதை ''ஏ'' என்று
கடிந்து கூறும்.

''கூ'' எனவே வையத்தின்
பேர் உரைத்துக் குயில் கூவும்
''வாழ் வாழ்'' என்று

நாவினிக்க நாய் வாழ்த்தும்
நற்சேவல் ''கோ'' என்று
வேந்தன் பேரைப்

பாவிசைத்தாற் போலிசைக்க.
வருங்காற்றே ''ஆம்'' என்று
பழிச்சும்! இங்கு

யாவினுமே தமிழல்லால்
இயற்கை தரும் மொழிவேறொன்று
இல்லை யன்றோ.




( 185 )






( 190 )





( 195 )






( 200 )






( 205 )





( 210 )






( 215 )






( 220 )





( 225 )






( 230 )






( 235 )





( 240 )
12. கோயிலார்

உயிர்போன்ற உங்கள் தமிழ்
கடவுளுக்கே உவப்பாதல்
இல்லை போதும்!

உயிர் போன்ற உங்கள் தமிழ்
உரைத்தக்கால் கடவுளதை
ஒப்பார் போலும்!

பயிரழிக்கும் விட்டிலெனத்
தமிழ்மொழியை படுத்தவந்த
வடமறைதான்

செயிர்தீர வாழ்த்துதற்கும்
தேவையினைச் சொல்லுதற்கும்
உதவும் போலும்!

மடிகட்டிக் கோயிலிலே
மேலுடையை இடுப்பினிலே
வரிந்து கட்டிப்

பொடிகட்டி இல்லாது
பூசியிரு கைகட்டிப்
பார்பானிக்குப்

படிகட்டித் தமிழரெனப்
படிக்கட்டின் கீழ்நின்று
தமிழ்மானத்தை

வடிகட்டி அவன் வடசொல்
மண்ணாங்கட் டிக்குவப்பீர்
''மந்திரம்'' என்றே.

காற்செருப்பைப் பிறனொருவன்
கழிவிடத்தில் தள்ளிடினும்
பொறாத உள்ளம்.

மேற்படுத்தும் எவற்றினுக்கும்
மேற்பட்ட தன்மொழியைத்
தமிழைத் தீயோர்

போற்றுவதற் குரியதொரு
பொதுவினின்று நீக்கிவைத்தால்
பொறுப்பதுண்டோ?

வேற்றிவரின் வடமொழியை
வேரறுப்பீர் கோயிலிலே
மேவீடாமே.

சொற்கோவின் நம்போற்றித்
திரு அகவல் செந்தமிழில்
இருக்கும் போது

கற்கோயில் உட்புறத்தில்
கால்வைத்த தெவ்வாறு
சகத்ர நாமம்?

தெற்கோதும் தேவாரம்
திருவாய்நன் மொழியான
தேனிருக்கச்

செக்காடும் இரைச்சலென
வேதபாராயணமேன்
திருக்கோயில்பால்?

திருப்படியில் நின்றபடி
செந்தமிழில் பேரும்படியார்
அருளிச் செய்த

உருப்படியை அப்படியே
ஊரறியும் படியுரைத்தால்
படியும் நெஞ்சில்!

தெருப்படியிற் கழுதையெனச்
செல்லுபடி யாகாத
வடசொற் கூச்சல்

நெருப்படியை எப்படியோ
பொறுத்திடினும் நேர்ந்தபடி
பொருள் கண்டீரோ!




( 245 )






( 250 )





( 255 )






( 260 )






( 265 )





( 270 )






( 275 )






( 280 )





( 285 )






( 290 )






( 295 )





( 300 )