பக்கம் எண் :

தமிழியக்கம்

13. அறத்தலைவர்


அறத்தலைவீர் செயத்தக்க
அறம்இந்நாள் தமிழ்காத்தல்
அன்றோ! தங்கள்

நிறத்தியலை நிலைநிறுத்தித்
தமிழ் அழிக்க நினைப்பாரின்
செயலை நீவீர்

மயத்தலினும் கேடுண்டோ?
மடத்திலுறு பெரும்பொருளைச்
செந்தமிழ் சீர்

பெறச்செலவு செய்தலினும்
பெறத்தக்க பெரும்பேறு
பிறிது முண்டோ !

கல்லாரின் நெஞ்சத்தே
கடவுள் நிலான் என்னுமொழி
கண்டு ளீரே

நில்லாத கடவுளை நீர்
நிலைத்திருக்கும் படி செய்யத்
தமிழர் நாட்டில்

எல்லாரும் தமிழ்கற்க
என்செய்தீர்? செயநினைத்தால்
இயலா தேயோ?

தொல்லையெலாம் போமாறு
தூய்மையொலாம் ஆமாறு
தொண்டு செய்வீர்!

செந்தமிழிற் புதுப்புது நூல்
விளைப்பதற்குச் செல்வத்தைச்
செலவு செய்தால்

நந்தமிழ்நா டுயராதோ!
நலிவெல்லாம் தீராவோ!
பொருளை அள்ளித்

தந்தாரே முன்னாளில்
தமிழ்நாட்டார் உம்மிடத்தில்,
தலைமை யேற்று

வந்தீரே அரசியல்சீர்
வாய்ந்தாரை வசப்படுத்தி
வாழ்வதற்கோ?

அறநிலையக் காப்புக்கே
அரசினர்கள் அயலாரை
அமைக்க! அன்னோர்

பிறமொழிக்குத் துணை நின்றும்
தமிழ்மொழியின் பீடழிக்கும்
செயல்புரிந்தும்,

சிறுமையுறு வடமொழிக்குக்
கழகங்கள் இங்கமைத்தும்
தீமை செய்வார்!

உறுதியுடன் தமிழரெலாம்
ஓன்றுபட்டால் எவ்வெதிர்ப்பும்
ஒழிந்து போகும்!

நாட்டிலுறும் அறநிலையம்
ஒவ்வொன்றும் நற்றமிழ்க்கல்
லூரி ஒன்றும்,

வீட்டிலுறு கழகங்கள்
நாலைந்தும், மேன்மையுறும்
புலவர் கூடித்

தீட்டுநூல் வெளியீடு
செய்நிலையம் ஒன்றுமாய்த்
தருமேல் நம்மை

வாட்டிவரும் வறுமை நிலை
மாய்க்கவரும் தாழ்மை நிலை
மாய்ந்து போமே!




( 5 )






( 10 )





( 15 )






( 20 )






( 25 )





( 30 )






( 35 )






( 40 )





( 45 )






( 50 )






( 55 )





( 60 )
14. விழா நடத்துவோர்

தேர்வரும், பின் பார்ப்பனர்கள்
வரிசையுறச் செங்கைகள்
கோத்த வண்ணம்

நீர்வருங்கால் கத்துகின்ற
நெடுந்தவளைக் கூட்டமெனக்
கூச்சலிட்டு

நேர்வருவார் அன்னவர்கள்
நிகழ்த்துவதன் பொருளென்ன?
இனிமை உண்டா?

ஊர் வருந்தும் படி இதை ஏன்,
விழாத்தலைவர் உடன்சேர்த்தார்?
ஒழிக்க வேண்டும்!

பல்லிசைகள் நேர்முழங்கப்
பகல் போலும் விளக் கெடுப்பக்
குதிரை, யானை

நல்ல சிறப் பளித்துவர
நடுவி லொரு தேவடியாள்
ஆட, மக்கள்

எல்லாரும் கயிறிழுக்க
இயங்குமொரு தேர்மீதில்
ஆரியத்தைச்

சொல்லிடுமோர் சொரிபிடித்த
பார்ப்பானைக் குந்தவைத்தல்
தூய்மை தானோ!

விவாக சுப முகூர்த்தமென
வெளிப் படுத்தும் மண அழைப்பில்
மேன்மை என்ன?

அவாள் இவாள் என்றுரைக்கும்
பார்ப்பனரின் அடிதொடர்தல்
மடமை அன்றோ?

உவகைபெறத் தமிழர்மணம்
உயிர்பெறுங்கால் உயிரற்ற
வடசொற் கூச்சல்

கவலையினை ஆக்காதோ!
மணவிழவு காண்பவரே
கழறுவீரே!

மானந்தான் மறைந்ததுவோ?
விழாத்தலைவீர், மணமெல்லாம்
வடசொல்லாலே

ஆனவையா சொல்லிடுவீர்!
அந்நாளில் தமிழர்மணம்
தமிழ்ச்சொல் லாலே

ஆனதென அறியீரோ?
பார்ப்பனன் போய் அடிவைத்த
வீட்டிலெல்லாம்

ஊனந்தான் அல்லாமல்
உயர்வென்ன கண்டுவிட்டார்
இந்நாள் மட்டும்?

மணமக்கள் தமைத் தமிழர்
வாழ்க என வாழ்த்து மொரு
வண் தமிழ்க்கே

இணையாகப் பார்ப்பான்சொல்
வடமொழியா, தமிழர் செவிக்
கின்பம் ஊட்டும்!

பணமிக்க தலைவர்களே,
பழியேற்க வேண்டாம் நீர்!
திருமணத்தில்

மணமக்கள் இல்லறத்தை
மாத்தமிழால் தொடங்கிடுக;
மல்கும் இன்பம்!




( 65 )






( 70 )





( 75 )






( 80 )






( 85 )





( 90 )






( 95 )






( 100 )





( 105 )






( 110 )






( 115 )





( 120 )
15. கணக்காயர்

கழகத்தின் கணக்காயர்,
தனிமுறையிற் கல்வி தரும்
கணக்காயர்கள்,

எழுதவல்ல பேசவல்ல
கல்லூரிக் கணக்காயர்
எவரும், நாட்டின்

முழு நலத்தில் பொறுப்புடனும்
முன்னேற்றக் கருத்துடனும்
உழைப்பாராயின்

அழுதிருக்கும் தமிழன்னை
சிரித்தெழுவாள்; அவள்மக்கள்
அடிமை தீர்வார்!

நற்றமிழில், தமிழகத்தில்
நல்லெண்ணம் இல்லாத
நரிக்கூட்டத்தைக்

கற்றுவைக்க அமைப்பதினும்
கடிநாயை அமைத்திடலாம்!
அருமையாகப்

பெற்றெடுத்த மக்கள் தமைப்
பெரும்பகைவர் பார்ப்பனர்பால்
அனுப்போம் என்று

கொற்றவர்க்குக் கூறிடவும்
அவர் ஒப்புக் கொண்டிடவும்
செய்தல் வேண்டும்.

இகழ்ச்சியுறும் பார்ப்பனனாம்
கணக்காயர், நந்தமிழர்
இனத்துச் சேயை

இகழ்கின்றான்! நம்மவர் முன்
னேறுவரோ! தமிழ்மொழியை
வடசொல்லுக்கு

மிகத்தாழ்ந்த தென்கின்றான்!
வடசொற்கு மகிழ்கின்றான்!
கொடியவன், தன்

வகுப்பானை வியக்கின்றான்!
விட்டுவைத்தல் மாக்கொடிதே!
எழுச்சி வேண்டும்!

வடசொல் இது தமிழ்ச்சொல் இது
எனப்பிரித்துக் காட்டிடவும்
மாட்டான்! நம் சேய்

கெடஎதுசெய் திடவேண்டும்
அதைச் செய்வான்கீழ்க்கண்ணான்!
கொடிய பார்ப்பான்!

நொடிதோறும் வளர்ந்திடும் இந்
நோய்தன்னை நீக்காது
தமிழர் வாளா

விடுவதுதான் மிகக்கொடிது!
கிளர்ந் தெழுதல் வேண்டுமின்றே
மேன்மை நாட்டார்!

தமிழ்ப்புது நூல் ஆதரிப்பீர்!
தமிழ்ப் பாட்டை ஆதரிப்பீர்,
தமிழர்க் கென்றே

அமைந்துள்ள கருத்தினையே
ஆதரிப்பீர்! ''தமிழ்தான் எம்
ஆவி'' என்று

நமைப் பகைப்பார் நடுங்கும் வகை
நன்றுரைப்பீர் வென்றி முரசு
எங்கும் நீவிர்

உமக்குரியார் பிறர்க்கடிமை
இல்லையென உரைத்திடுவீர்
மாணவர்க்கே.





( 125 )






( 130 )





( 135 )






( 140 )






( 145 )





( 150 )






( 155 )






( 160 )





( 165 )






( 170 )






( 175 )





( 180 )
16. மாணவர்

கற்கின்ற இருபாலீர்
தமிழ்நாட்டின் கண்ணொப்பீர்
கனியிருக்க

நிற்கின்ற நெடுமரத்தில்
காய்கவர நினையாதீர்
மூதுணர்வால்

முற்கண்ட எவற்றினுக்கும்
முதலான நந்தமிழை
இகழ்தலின்றிக்

கற்கண்டாய் நினைத்தின்பம்
கைக்கொண்டு வாழ்ந்திடுவீர்
நன்றே என்றும்

ஆங்கிலத்தைக் கற்கையிலும்
அயல்மொழியைக் கற்கையிலும்
எந்த நாளும்

தீங்கனியைச் செந்தமிழைத்
தொன்னாட்டின் பொன்னேட்டை
உயிராய்க் கொள்வீர்

ஏங்கவைக்கும் வடமொழியை,
இந்தியினை எதிர்த்திடுவீர்
அஞ்ச வேண்டாம்.

தீங்குடைய பார்ப்பனரின்
ஆயுதங்கள் ''இந்தி'' ''வட
சொல்'' இரண்டும்.

பார்ப்பான் பால் படியாதீர்;
சொற்குக்கீழ்ப் படியாதீர்
உய்மை ஏய்க்கப்

பார்ப்பான்; தீ துறப்பார்ப்பான்
கெடுத்துவிடப் பார்ப்பான் எப்
போதும் பார்ப்பான்

ஆர்ப்பான் நம் நன்மையிலே
ஆர்வமிக உள்ளவன் போல்!
நம்பவேண்டாம்.

பார்ப்பானின் கையை எதிர்
பார்ப்பானை யேபார்ப்பான்
தின்னப் பார்ப்பான்.

தமிழின்பேர் சொல்லி மிகு
தமிழரிடைத் தமிழ் நாட்டில்
வாழ்ந்திட்டாலும்

தமிழழித்துத் தமிழர் தம்மை
தலை தூக்கா தழித்துவிட
நினைப்பான் பார்ப்பான்

அமுதாப் பேசிடுவான்
அத்தனையும் நஞ்சென்க
நம்ப வேண்டாம்

தமிழர்கடன் பார்ப்பானைத்
தரைமட்டம் ஆக்குவதே
என்றுணர்வீர்.

தமிழரின்சீர் தனைக்குறைத்துத்
தனியொருசொல் சொன்னாலும்
பார்ப்பான் தன்னை

உமிழ்ந்திடுக மானத்தை
ஒரு சிறிதும் இழக்காதீர்
தமிழைக் காக்க

இமையளவும் சோம்பின்றி
எவனுக்கும் அஞ்சாது
தொண்டு செய்வீர்

சுமை உங்கள் தலைமீதில்
துயர்போக்கல் உங்கள் கடன்!
தூய்தின் வாழ்க!





( 185 )






( 190 )





( 195 )






( 200 )






( 205 )





( 210 )






( 215 )






( 220 )





( 225 )






( 230 )






( 235 )





( 240 )
17. பாடகர்

நாயும் வயிற்றை வளர்க்கும்
வாய்ச்சோற்றைப் பெரிதென்று
நாடலாமோ?

போய்உங்கள் செந்தமிழின்
பெருமையினைப் புதைப்பீரோ
பாடகர்காள்!

தோயுந்தேன் நிகர் தமிழாற்
பாடாமே தெலுங்கிசையைச்
சொல்லிப் பிச்சை

ஈயுங்கள் என்பீரோ!
மனிதரைப்போல் இருக்கின்றீர்
மானமின்றி!

செந்தமிழில் இசைப்பாடல்
இல்லையெனச் செப்புகின்றீர்
மானமின்றி!

பைந்தமிழில் இசையின்றேல்
பாழ்ங்கிணற்றில் வீழ்ந்துயிரை
மாய்த்தலன்றி

எந்தமிழில் இசையில்லை.
எந்தாய்க்கே உடையில்லை
என்பதுண்டோ?

உந்தமிழை அறிவீரோ
தமிழறிவும் உள்ளதுவோ
உங்கட்கெல்லாம்?

வெளியினிலே சொல்வதெனில்
உம்நிலைமை வெட்கக்கே -
டன்றோ? நீவிர்

கிளிபோலச் சொல்வதன்றித்
தமிழ்நூற்கள் ஆராய்ந்து
கிழித்திட்டீரோ

புளிஎன்றால் புலியென்றே
உச்சரிக்கும் புலியீரே
புளுக வேண்டாம்

துளியறிவும் தமிழ்மொழியில்
உள்ளதுவோ பாடகர்க்குச்
சொல்வீர். மெய்யாய்!

தமிழ்மகளாய் பிறந்தவளும்
தமிழ்ப்பகைவன் தனைப்புணர்ந்து
தமிழ்பாடாமல்

சுமக்கரிய தூற்றுதலைச்
சுமப்பதுவும் நன்றேயோ?
பார்ப்பனத்தி,

நமக்குரிய தமிழ்காக்க
ஒப்பாமை நன்றறியும்
இந்த நாடு!

தமிழ்நாட்டுப் பாடகரே!
தமிழ்பாடித் தமிழ்மானம்
காப்பீர் நன்றே.

தமிழ்மொழியில் தமிழ்ப்பாடல்
மிகவுண்டு தமிழ்க்கவிஞர்
பல்லோர் உள்ளார்

உமைத்தாழ்வு படுத்தாதீர்
பார்ப்பான் சொல் கேட்டபடி
உயிர்வாழாதீர்!

உமைவிலக்கிப் பணக்காரன்
உடன்சேர்ந்து நலம்கொள்ளும்
உளவன் பார்ப்பான்!

சிமிழ்க்காமல் விழித்திடுங்கள்
பார்ப்பானை நம்பாதீர்
திறமை கொள்வீர்!





( 245 )






( 250 )





( 255 )






( 260 )






( 265 )





( 270 )






( 275 )






( 280 )






( 285 )







( 290 )





( 295 )