தமிழுக்கு அமுதென்று பேர்
ஆடு-பாடு
|
தமிழ்தமிழ் என்று நீ
ஆடு-பட்
டறிவின் உணர்வெல்லாம் பாடு!
குமிழ்த்த இவ்வுலகப் பேரேடு - குறித்த
ஐந்தொகைக் கீடிணை ஏது?
தமிழ்தமிழ்
என்று நீ ஆடு
நமதுதுயிர் வாழ்வினோடு - உலக
நாகரிகத்தை விளக்கும் செப்பேடு
தமிழன்றி வேறெது கூறு - மக்கள்
சமம் என்ற பொதுமைப் பண்பாடு!
தமிழ்தமிழ்
என்று நீ ஆடு!
தமிழுக்கு நீ செய்யும் கேடு-பெற்ற
தாய்க்குச் செய்யும் மானக்கேடு
சிமிழ்க்காதே சிந்தனைப் பீடு-நாளும்
செழிக்கட்டும் தமிழ்மறைக்காடு!
தமிழ்தமிழ்
என்று நீ ஆடு!
சிறுகதை புதினத்தினோடு-பல
சிற்பச் செந்நூல் பல போடு
அறுத்த அறிவடை மேடு - என
ஆக்குக அறிவியல் ஏடு!
தமிழ்தமிழ்
என்று நீ பாடு!
சட்ட நுணுக்கங்கள் தேடு - பொறி
சமைக்கும் இயல்களில் கூடு
முட்டிடும் வான் எல்லைக்கோடு-கோள்
முழுதாளும் புடவி நூலோடு
தமிழ்தமிழ்
என்று நீ பாடு!
உயிரியல் பயிரியல் பாடு - நம்
உடலியல் மருந்தியல் ஏடு
தயிரினில் வெண்ணெய்போல் தேடு-நின்
தன்னறிவால் உயரும் நாடு!
தமிழ்தமிழ்
என்று நீ ஆடு! |
( 5 )
( 10 )
( 15 )
( 20 )
( 25 )
( 30 )
|
விழியில்லாத வாழ்வும்
வெற்றி பெறுதல் கூடும்
வழியில்லாத ஊர்க்கும்
வரப்பைக் கடந்து சேர்வோம்
எழில் இல்லாத பெண்ணும்
எவற்கோ மனையாய்க் கூடும்
மொழியில்லாத வாழ்வை
நினைக்க முடியாதன்றோ?
மொழியே தானே மூச்சு
மொழியே தானே உணர்வு
மொழியே தானே வாழ்வு
மொழியே தானே இன்பம்
மொழியே தானே மனிதன்
மொழியே தானே வழிகள்
மொழியே தானே உலகம்
மொழியின்றேல் நாம் யாரோ? |
( 35 )
( 40 )
( 45 )
|
தமிழ்ப்புல வோர்களே,
தமிழ்ப் புலவோர்களே,
அமிழ்தைப் பாய்ச்சும் இரகசியத்தை
உங்கட் குரைப்பதில் உவகை கொள்கிறேன்
சங்கநூற் புலமை சான்றோர் தோன்றுமுன்
தோன்றிய தொல்காப் பியத்தின் - பின்னர்
தாய்மொழிப் பெயரைத் தமிழ்எனக் குறித்தல்
ஆய்வில் கிடைத்த அரும்பொருள் அறிவீர்
ஆனால், ஓர்உண்மை அறைவேன் உரத்தே
வடமொழிக் கொருபெயர் வடமொழி நூல்களில்
இல்லவே இல்லை; என்ன வியப்பா?
சமஸ்கிருதம் எனச் சாற்றுவ தெல்லாம்
செம்மையுடன் ஒழுங்கும் பெற்றதைச் செப்பும்
சமஸ்கிருதம் எனும்சொல் மொழியைக் குறிக்க
அமையவே இல்லையாம், அறிஞருள் அறிஞர்
நீ, கந்தசாமி 'நீயறிவாய்' என
சொன்னசொல் கன்னல் பாகாய்க் காதில்
இன்னும் ஒலித்தென்ன எந்தமிழ்ச் சிறப்பாம்
இறுமார்ப்புக் கடலில் எக்களித் தாடச்
செய்கிற தருமைப் புலவரே
வையம் அறிய வாய் முரசு அறைகவே! |
( 50 )
( 55 )
( 60 )
( 65 )
|
தாய்மொழியாம் நானிலத்தில்
நானுழைத்துப் பார்த்தேன்
தலைப்பட்ட செல்வத்தின்
பயன் எண்ணப்போமோ?
தாய்மொழியாம் ஆழ்கடலில்
புலமையொடும் ஆழ்ந்தேன்
தளைபட்ட களஞ்சியத்தின்
கணக்கு அறியப்போமோ?
தாய்மொழியாம் விண்வெளியில்
பறந்துவந்து மீண்டேன்
தட்டுண்ட ஒளிமீன்கள்
எண்ணில்பல கோடி
தாய்மொழியாம் மண்ணகழ்ந்தேன்
நம் முன்னோர் வாழ்ந்த
தன்னிகரில் பண்பாடு
நாகரிகம் கண்டேன்.
தாய்மொழியின் இலக்கியஇ
லக்கணங்கள் கற்றேன்
தனித்தமிழின் மாட்சியினில்
ஆட்சியினில் வியந்தேன்
தாய்மொழியாம் தமிழ்மொழியால்
வையத்தைக் காக்கும்
தகுதி அறிந்து இன்புற்றேன்
நடக்கும் நாள் எந்நாள்? |
( 70 )
( 75 )
( 80 )
( 85 )
( 90 )
|
இல்லாத சிவனும் இருக்கும் தமிழும்
|
இல்லாத சிவன்முடியை
அடியை மேனாள்
இரண்டுபேர் தேடினராம் இதுபுராணம்;
கல்லாத போக்கிதிலே ஐயமில்லை
கடவுளுக்கு வேரில்லை கிளையும் இல்லை
எல்லோரும் உணருங்கள் எனும் கருத்து
புதைந்துளதை எண்ணுகிறேன் வியக்கின்றேன் நான்,
சொல்லார்ந்த தமிழ்மொழிக்கும் அதனின் தோற்றம்
தொல்பழமை அடிமுடியைக் கண்டாரில்லை,
கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தின்முன்
கையுழைப் பினாலுயர்ந்த மனிதருக்குள்
தொல்காப்பிய மனிதன் தமிழன் என்று
தொன்னிலத்தின் ஆய்வுகளால் குமரிநாட்டின்
பல்காப் பியம்போல பார்அனைத்தும்
பரந்தவனும் பரந்தமொழி தமிழே என்னும்
சொல்காப் பியத்தின் அடிமுடியைக் காணா
தொல்லியலார் அறிவியலார் திகைக்கின்றாரே
எந்நாட்டுப் பழங்குடிக்கும் மொழிக்கும் அன்னார்
இனத்திற்கும் அடிமுடியைக் காண்பார், வெல்வார்
முன்னாட்டின் குடிமக்கள் யார்யார் என்று
முன்னேற்றம் கண்டார்கள் என்பதெல்லாம்
பன்னாட்டின் ஆராய்ச்சி யாளர்க் கெல்லாம்
பலாவன்று பழம்வாழை உரித்தல் போலாம்
தென்னாட்டின் வரலாறும் மொழியும் வாழ்வும்
திகைக்கவைக்கும் இனத்தினன் நான் திகட்டல் உண்டோ?
உழைப்பாளர் மிகும் ஊர்ப்புறங் களிலோ
அழைக்கும் அழகுசூழ் வயல்வெளி களிலோ
ஓங்கிய சிறப்பின் உயர்மலர்க் காட்டிலோ
மாங்குயில் கூவிடும் மரம் அடர் காட்டிலோ
மனித உழைப்பால் மாண்புறும் நகரிலோ
தனிமை துகுந்த வெட்ட வெளியிலோ
தொழிற்சாலை மிகு தொழிற்பேட்டையிலோ
ஒழிவு நேரத்து உவந்திடும் அரங்கிலோ
வீட்டிலோ, வெளியிலோ, கூட்டங்களிலோ
நாட்டில் எங்கெங்கு மக்கள் நடமாட்டம்
உள்ள இடமெல்லாம் உரையாடும் மொழி
தெள்ளத் தெளிந்த செந்தமிழ் மொழியின்
இனிமையில் தோய்ந்த எக்களிப் புணரலாம்
அழகுக் கவிதையின் செழுமையைப் பருகலாம்
உண்மையின் உரத்த குரல்களைக் கேட்கலாம்
மல்லிகை மணம்போல் சொல்லின்பம் தரும்
மழலையை, காதலர் குதலையை அருந்தலாம்
மன ஓவியம் தரும் கனவுகள் நிறைந்த
இளைஞரின் பேச்சுக்கள் ஏந்தி உண்ணலாம்
தேன் சிட்டைப்போல் தீங்குயில் போல
வானம்பாடியின் வண்மைக் குரல்போல்
திசைதோறும் திசைதோறும் இசைபெறும் இன்தமிழ்
மொழியினை மனத்தில் வழியச் செய்குவீர்!
அந்தமிழ் மொழியினால் அகில உலகையும்
சொந்த மாக்கிடும் சுரப்புச் சுனை அது!
மனத்துள் ஊறும் மட்டிலாக் கருத்தினை
கணத்திற் குள்ளே கழறிட முடியும்
அறிவின் விழிப்பில் அகப்படும் எதனையும்
வெளிப்படுத் திடத்தகும் எளியது தமிழ்மொழி!
வைய இசையெலாம் கைக்கொண் டிசைக்கும்
பைந்தமிழ்க் குள்ளே பாரின் மொழியெலாம்
மொழிந்திட முடியும்; மொழியின் கருத்தையும்
பிழிந்த பழச்சாறாய்ப் பெற்றிட முடியும்,
வண்ணத் தொளியினை வானத் தெளிவினை
எண்ணத் தொளியாய் இயம்பும் எம்மொழி!
மலர்வனத் தழகெலாம் மலர்த்திட முடியும்
இலையின் சலனம், இடியின் குமுறல்,
அலைகளின் ஆர்ப்பொலி, ஆழியின் அமைதி,
குழந்தையின் மழலை, குமறும் கோளரி
தடைபடா அருவி தணல்மலை வெடிப்பு
தென்றலின் இன்பம் வாடையின் திணிப்பு
ஒன்பது சுவையின் ஓயாக் கூத்து
செயலின் ஊக்கம் அமைதியின் ஆக்கம்
செற்கையின் செம்மையாய் இயற்கையின் இணையாய்
அளவிலா உணர்ச்சியின் ஆற்றலுடைமை
வளமை மாட்சி வண்ட "யாதும் ஊரே யாவரும் கேளிர
ஓதும் இவ்வுரை உவந்த ஒருமொழி.
யாவையும் இணைக்கும் எவரையும் பிணைக்கும்
தேவைக் கெல்லாம் சிந்தனை யளிக்கும்
மக்கள் நெஞ்ச மடுவிலிருந்தும்
அக்கறை மிகுந்த அன்பிலிருந்தும்
எவரும் அழியா தோற்றுவாயிருந்தும்
வாழ்வன வனங்களின் புதுமையி லிருந்தும்
இயற்கையின் உண்மைத் திண்மையி லிருந்தும்
பெருமைக் குரிய அருங்களஞ்சியமாய்
உருவெடுத் துள்ளது உயிர்நிகர் ஒண்டமிழ்!
பயில்தொறும் பயில்தொறும் பண்பாட்டின்குரல்
மனித குலத்தின் மாண்பினைக் காட்டுதே!
எண்ணிக்கை யில்லாக் கால வளர்ச்சியின்
பண்ணொளி யன்றோ பாங்குற்றெழுந்து
உலகமாம் நாடகந் தோய்விலா தியங்கும்
கலைமகளாகக் காண்கிறாள் தமிழ்த்தாய்!
உயிரே உயிரை உணரும்; உண்மை
உணர்ச்சி வாயில் உணர்வோன் வலித்தே
என்பதெற் கெடுத்துக் காட்டே எம்மொழி
எம்மொழிச் சிறப்பை எதற்கொப் பிடலாம்?
எம்மொழி நுகர்வை எதற்கு வமிக்கலாம்?
எம்மொழி அருமைப் பெருமை பெறுதற்கு
அரிய அன்னையா? அப்பனா? உடன்பிறந்
துரிமையில் இணையும் ஒப்பில் உறவினரா?
வாழ வைத்திடும் தோழனா? காதலால்
சூழ் உலகத்துத் தோன்றாத் துணையா?
மயக்குறு மக்களா? மண்ணுலகத்தில்
எதைச் சொன்னாலும் அதனை ஏற்றிடேன்
ஏனெனில் எந்தமிழ் இன்பம்: என்னுடை
ஊனில் உயிரில் உவப்புறும் எதற்கும்
மேலே மேலே தாவிச் செல்வது!
எவைக்கும் மேலாய் அவைக்கும் உள்ளாய்
சுவைபட்டுயிரில் உயிர்புறு வாழ்க்கையில
ஓங்கியும் உயர்ந்தும் பாங்குற விரிந்தும்
மேன்மைக்கெல்லாம் மேன்படும் எம்மொழி!
ஒகுவனாய் உலகிற்கு ஒப்பற்றுயர்ந்த
திருவள்ளுவன் சொல் புதையலை எடுத்தேன்
ஒருசமு தாய ஒழுங்கொற்றுமையைப்
பெருமனத்தாலே பேரன்பத்தனால்
நெருங்கிப் பிணைத்தான்; வேற்றுமை நிழலை
அருகில் விடாமல் அன்னையாய்க் காத்தான்.
சங்கநூற் புலவர்கள் சாற்றிய பாட்டின்
அங்கெயும் இயற்கையின் அருமை,
எவரையும் தழுவும் இன்பத் தோழமை,
உவகையில் ஒன்றிய உறவின் இணைப்பு.
சாதி சமய மதத்தின் சழக்கு
வேதனை தராது வியப்புறு காட்சி
எல்லார்க்கும் எல்லாம் என்று மகிழ்ந்திடும்
பொல்லாங்கில்லாப் புதுச்சமுதாயம்
பூந்று மணந்து பொன்னொளி தந்தது
காப்பியங்களின் சொல் காட்டிய நன்மொழி
மாப்பெரு மக்களின் வாழ்வெனும் மலர்வளம்
ஈடிலா வியப்பை நாடி நலம்பினில்
ஓடிடச் செய்து பாடிடும் உணர்வே!
பாரதிப் பாட்டின் சொற்களில் படிவேன்
சூரியன் ஒளிமுன் தோன்றும் சொற்களாய்
எத்தடையாயினும் அத்தனை தகர்க்கும்
முத்தமிழ் போர்வையை உள்ளத் துணர்ச்சியை
எவரையும் காக்கும் ஏற்றத்துடனே
கவர்ந்தது பொன்னொளி; கண்கள் ஒருகணம்
நானிலத்தினையே நட்பால் பிணைத்தன.
ஒளியைத் தெளிக்கும் உண்மைச் சொற்கள் -
இன்பமாய்ச் சிரித்து மன்பதையோடு எனை
விழாப் புகழினில் வாழவைத்ததுவே
|
( 95 )
( 100 )
( 105 )
( 110 )
( 115 )
( 120 )
( 125 )
( 130 )
( 135 )
( 140 )
( 145 )
( 150 )
( 155 )
( 160 )
( 165 )
( 170 )
( 175 )
( 180 )
( 185 )
( 190 )
( 195 )
( 200 )
( 205 )
( 210 )
( 215 )
( 220 )
( 225 )
( 230 )
( 235 )
|
எழுத்துத் திருத்தத்திலும் எண்ணத்திருத்தம் வேண்டும்
|
எழுத்துக்களைச்
சீர்திருத்தும் ஆர்வலர்க்கோர்
விண்ணப்பம்; எதற்காக இந்த வேகம்?
பழுத்துக் கன்ந்திட்ட மொழிக்கனிக்குப்
பழம் அழுகச் செய்வதுவா உங்கள் திட்டம்?
ஒழுக்கத்தில் ஓர் அழகு வேண்டுமாயின்
உயர்பெரியார் திருத்தத்தை ஏற்க; மேலும்
கழுத்தறுப்பு வேலைகளைச் செய்வதெல்லாம்
காளைகளைக் காயடிக்கும் செயலை ஓக்கும்
மொழிக்குரிய உயர்கருத்தும் உலகளாவும்
முன்னேற்றும் அறிவியலை வளர்க்கும் எண்ணம்
விழிக்கடையின் ஓரத்தும் வாராத பேர்கள்
வேதும்புவதேன் எழுத்தினிலே சீர்திருத்தம்?
கொழித்தமொழி பிரஞ்சினிலே, ஆங்கிலத்தில்
குறியீட்டைக் காட்டுகிற மொழி சீனத்தில்
தொழில்படுமா யங்களுடை சீர்திருத்தம்
தோல்விடுங்கிச் சுளைகளை ஏன் எறிகின்றீர் நீர்,
மக்களெலாம்தாய் மொழியைக் கற்பதற்கு
மடத்தனமாய்க் கற்பிக்கும் முறையை மாற்றிச்
சிக்கலின்றித் தெளிவாக உணர்வதற்குச்
செம்மை நிலை காணாத ஆங்கிலத்தால்
தக்க ஒரு தகுதியினைப் பெற்றாய் போன்று
தமக்குள்தாம் பெரியரென எண்ணிக்கொண்டு
தக்கைகளாய்த் தலைநிமிர்ந்தே ஆடல் வேண்டாம்
தமிழ் வளர்ச்சி, இயக்குநர்கள் கையில் இல்லை.
உயிர்மெய்யைப் பிரித்தெழுதல் எளிதே என்றும்
உரைத்ததுநான் உண்மைதான்; நூறுபக்கம்
பயிர்களிடைக் களைபோல வளர்ந்திரண்டு
பங்காக வளருவதை ஆறிந்தேன்; அன்பீர்
பயில்கின்ற வர்க்கும் அச்சுக் கோப்பவர்க்கும்
பாங்காக வளர்கின்ற பொறியியற்கும்
செயல்பட நீர் வியைகின்றீர், எழுத்தமைப்பால்
சிந்தனைக்கு வந்ததடை செப்புவீரே?
|
( 240 )
( 245 )
( 250 )
( 255 )
( 260 )
( 265 )
|
|
|
|