தமிழுக்கு அமுதென்று பேர்
தமிழர்க்கே சலுகை வேண்டும்
|
தமிழர்க்கே சலுகை காட்ட
வேண்டும்
தமிழகத்திரைப் படங்களில் நடிப்ப தற்குத்
தமிழர்க்கே சலுகை காட்டவேண்டும்
தமிழ்த் திரைப்படம் உடையவர் யாரும்
தமிழ்த் திரைப்படம் இயக்குநர் யாரும்
தமிழர்க்கே சலுகை காட்ட மறுத்தால்
தவிர்க்க முடியாதவை மறியலும் போரும்!
தமிழர்க்கே சலுகை காட்டவேண்டும்
கன்னட நடிகரைக் கன்னட நாடு
கட்டிக் காக்கட்டும் இதுதமிழ் நாடு
பொன்னான தமிழ் நடிகரை இகழ்ந்தால்
போர்! போர்! இதே எங்கள் ஏற்பாடு!
தமிழர்க்கே சலுகை காட்டவேண்டும்
தமிழ் நடிகையர் குச்சுக் காரித்தனம்
காட்டுவதில்லை அதுமட்டும் மெய்தான்,
உமிஇல்லை என்பதால் அரிசியை இகழ்வதா?
உறங்கினோம் நேற்றுவரை என்பது மெய்தான்.
தமிழர்க்கே சலுகை காட்டவேண்டும்
விழிப்புற்றது தமிழகம் தமிழர்க்குச் சலுகை
வேண்டும் இதனை மறவாமை வேண்டும்.
பழிப்புற நடக்க வேண்டாம் நடந்தால்
பார்க்கத்தான் நேரும் அயலாரை ஒருகை!
தமிழர்க்கே சலுகை காட்டவேண்டும் |
( 5 )
( 10 )
( 15 )
( 20 )
|
சிவத்தொண்டு நிலை
திரு நீற்றை விட்டு
இவன்தானா நாகரி்கக்
இவனை ஆதரிப்பவனா
சவலைபோகும்
தமிழ்காணா
தவிலக்கற்கும்
நலமறியா
அவர்களெல்லாம் தமிழர்ளின்
இந்த நாட்டில் ஆட்சிக்காக
சைவத் தாயின்
தமிழைக் கெடுக்கும்
செவ்வித் தாழங்
தீங்கு செய்யும்
தெய்வ மென்று பதவி பெற்ற
செந்தமிழ்மேற் கண்ணில்லாத
காட்டிக் கொடுப்
கனவுக்கும் அஞ்
கூட்டிக் கொடுப்
கொடுமைக் கெல்லாம்
நாட்டை நடத்தும் தலைவர்களாம்
நடுத்தெருவில் இருக்கும் குட்டிச்
அணங்கு பிடிக்கும்
அறிவு கெட்ட
குணப் கேளா
கூட்டக் குடி
பணம் பறிக்கும் இவரிடமாம்
பைந்தமிழ் பற்றில்லா
காசு தேடக்
கான்றுமிழப்
கூசுதலே
கொள்கை ஏதும்
மீசையுள்ள தமிழ்ப்புலவர்
மேன்மைத் தமிழந் ஈரலையும் |
அறிந்தான்
எறிந்தான்
காரன்?
வீரன ?
பிள்ளை
நொள்ளை
பிள்ளை
வெள்ளை
தலைவர்
அலைவர்
சேய்கள்
நாய்கள்
காய்கள்
நோய்கள்
திருடர்
குருடர்
பார்கள்
சார்கள்
பார்கள்
வேர்கள்
இவர்கள்
சுவர்கள்
வேடர்
மூடர்
ஏடர்
கேடர்
கலைகள்
எச்சில்
கற்றார்
பெற்றார்
அற்றார்
பற்றார்
என்பார்
தின்பார்
|
( 25 )
( 30 )
( 35 )
( 40 )
( 45 )
( 50 )
( 55 )
|
தமிழர்க்கு வாழ்க்கைச் சுவை ஏது ?
|
உணவு விடுதி ஒன்றில்
ஓர் அறையில்
இருவர் தங்கினர், ஒருவன் தமிழன்
மற்றவன் பிரான்சு நாட்டு வாணிகன்!
கமழ்புனல் ஆடி அமிழ்துணவுண்டு
தூயுடை உடுத்துச் சாய்வு நாற்காலியிற்
சாய்ந்த தமிழன், தன்னெதிர் நடப்பதை
பாடிக் கொண்டே பார்த்திருந்தான்!
அறை வெள்ளிக்குக் கால் கோப்பையுணவு
கேட்டு, வாங்கி உண்டு, கிழிந்த
உடையுடன் பிரான்சினன் எதிரில் உள்ள
சாய்வு நாற்காலியிற் சாயத் தொடங்கினான்.
தமிழன் அவனை நோக்கிச் சாற்றினான்;
''சுவையிலா உணவையும் துய்ப்பது, பிரான்சில்
உள்ளவரிடத்திலும் உண்டோ?''
பின்னும் பிரான்சினன் பேசுகின்றனன்;
எரிச்சல் உறுவதேன் இன்தமிழ் நண்பரே
பிறந்த உம் நாட்டைப் பிறன் ஆள்கின்றான்,
வாழ்க்கையில் சுவையும் வாய்ப்பதுண்டோ?
வாழ்க்கைச் சுவையிலான் வாய்ச்சுவை யுடையனோ?
இன்று நீர் உண்டதில் என்சுவை கண்டீர்?
கமழ்புனல் ஆடினீர், அமிழ்துணவுண்டீர்,
நீர்ஓர் அடிமை என்பதை நினைந்திரோ?
என்று தமிழனை எண்ணத்தில் ஆழ்த்தினான்
கமழ்புனல் கழிபுனல், ஆனது தமிழற்கே.
அமிழ்துண வோக்காளம் அடைந்தான்
உமிழ்ந்தது தமிழனை அறிவுலகு கான்றே!
|
( 60 )
( 65 )
( 70 )
( 75 )
( 80 )
|
குல்லாய் போட்டான் தில்லிக்காரன்
|
கல்வி
கற்றவரே-மிகுந்த
செல்வம் பெற்றவரே-உமக்
கெல்லா மிருந் தென்னபயன்?
குல்லாய் போட்டான் தில்லிக்காரன்.
சமையத் தலைவரே-நல்ல
தமிழ்ப் புலவரே-ஊர்க்
குமுக்குச் சொல்லித் தமுக்கடிப்பீர்,
அமுக்கிப் போட்டான் தில்லிக்காரன்
குமுக்கு-ஆதரவு
ஆலைக்காரரே-பெரிய
வேலைக்காரரே-நீங்கள்
மேலிருக்கும் சோலி பெற்றீர்
வாலறுத்தான் தில்லிக்காரன்.
அலுவல்காரரே-பண
வலிவுக்காரரோ-நீங்கள்
மலிய உண்டு சலுகை என்றீர்
தலைக விழ்ந்தான் தில்லிக்காரன்.
ஆள வந்தவரே-கை
நீள வந்தவரே-நீங்கள்
தூளாக்குவோம் பகையை என்றீர்
ஆளாக்கினான் தில்லிக்காரன்.
நிலம் படைத்தோரே-உடல்
நலம் படைத்தோரே-நல்ல
குலம்பு டைக்க வாழுமுங்கள்
எலும்பு டைத்தான் தில்லிக்காரன்.
குலம் புடைக்க-இனம்
மேன்மைபெற
ஊர்ப்படி யாரே-நல்ல
தீர்ப்புடை யாரே-உங்கள்
மேற்படிக்கும் வீம்படிக்கும்
ஆப்படித்தான் தில்லிக்காரன்.
ஊர்ப்பாடியார்-ஊராரின்
பிரதிநிதி,
உடைமைக்காரரே-மக்கள்
கடமைக்காரரே
படைமலிந்த குடிகள் என்பீர்
அடிமை என்றான் தில்லிக்காரன். |
( 85 )
( 90 )
( 95 )
( 100 )
( 105 )
( 110 )
( 115 )
|
எல்லாம் ஆரியர் கரடிகள் பொன்னப்பன் சின்னப்பன் வினா விடை
|
இந்திரனார் இயற்றியதோர்
ஐந்திரத்திலேயிருந்து
செந்தமிழ் பிறந்ததென்றார் பொன்னப்பா--''அது
வந்தவரின் வாய்ப்பந்தலே சின்னப்பா.''
செந்தமிழும் வடமொழியால் வந்ததென்று சொல்லுகின்றார்
அந்தப் பேச்சில் மெய்யுண்டோ பொன்னப்பா? ''அது
பொந்தில் நுழைந்த கரடியா சின்னப்பா?''
ஆரியர்களின் நான்மறையே ஆதியிலே கடவுள்சொன்ன
சீரியநூல் என்று சொன்னார் பொன்னப்பா--''அது
வாரிக் குவித்த குப்பைமேடு சின்னப்பா.''
ஆரியரும் தமிழரைப்போல் ஆதிமுதல் இங்கிருந்து
காரியங்கள் பார்த்தாராம் பொன்னப்பா?-''அவர்
ஊர்திருட வந்தவரே சின்னப்பா''
பச்சென்று வாழ்ந்தவராம் பழநாட்டில் நாகரிகம்
வைச்சவநாம் ஆரியர்கள் பொன்னப்பா--? ''அவர்
பிச்சைக்காரப் பசங்களடா சின்னப்பா.''
கச்சைகட்டி ஆண்டவராம் கண்டநான்கு சாதியிலே
உச்சிக்காரர் ஆரியராம் பொன்னப்பா?-''அவர்
குச்சிக்காரி மக்களடா சின்னப்பா.''
குவித்ததெல்லாம் அவர்பொருளாம் கொண்டதெல்லாம்
அவர்
புகழாம்
குவித்ததெல்லாம் அவர் முடியாம் பொன்னப்பா?--''அவர்
அவிழ்த்த முடிச்சு நிலைத்தவரைக்கும் சின்னப்பா.''
அவிழ்த்துப்போட்டுத் தமிழ்விளக்கை, ஆண்டிடுவார்
தமிழகத்தை.
ஏவர்க்கென்ன செய்யமுடியும் பொன்னப்பா? ''நம்மால்
கவிழ்த்துப்போட்டு மிதிக்க முடியும் சின்னப்பா.''
தமிழரெலாம் சூத்திரராம் எவர்க்கும் உயர்ந்தவராம்
எமை எதிர்க்க முடியாதாம் பொன்னப்பா--''கல்
அமிபறக்கையில் உமிபறக்கும் சின்னப்பா.''
தமக்குள்ளே ஒற்றுமையாம் தமிழரிடம் அஃதிலையாம்
எமை அசைப்பார் யார்என்றார் பொன்னப்பா?- ''செந்
தமிழில் தமிழர் ஒன்றுபட்டார் சின்னப்பா''
மதத்தனலவர், உச்சிக்குடுமி, தமிழமைச்சன்,
தில்லிகாரன்
மதிப்பதில்லை தமிழரையே பொன்னப்பா?- ''அவர்
குதிப்படங்கும் நேரம்வரும் சின்னப்பா''
அதுவடசொல் ஆதலினால் அஃதிருக்க வேண்டுமென்றார்
மதியில்லாத மடையர்சிலர் பொன்னப்பா?- அவர்
முதுகின் தோலில் ஊறல் உண்டு சின்னப்பா.''
சிவம்காக்கும் தம்பிரான்கள் செந்தமிழை எதிர்க்கின்றார்
அவர் எல்லாம் திருந்துவரோ பொன்னப்பா?-குட்டிச்
சுவர் திருத்தப்போவதில்லை சின்னப்பா.''
அவர்களின் ஒருதம்பிரான் அவரைத்தமிழன் போலிருந்தான்
அவன் செயலை நம்புவதோ பொன்னப்பா?- ''அட
அவனின் நடை விலங்குநடை சின்னப்பா.'' |
( 120 )
( 125 )
( 130 )
( 135 )
( 140 )
( 145 )
( 150 )
( 155 )
( 160 )
|
தூங்கும் என்னை விழிக்க
வைத்தன;
நாரணன் பாட்டும் நாய்க்குரைப்பும்!
நல்லதோர் மார்கழி நாள் அன்றே அது?
மின்விளக் கேற்றினேன் வெள்ளைத் தாளும்
இறகும் அண்டையில் இருத்தல் கண்டேன்.
என் மனக்கோயில் திறந்தேன் இனிய
பொன்முகம்புதிய தமிழகம் கண்டேன்.
அன்னை கூறினாள்; முன்னை நாளைவிட
இந்தப் பொங்கல் நான் ஏற்றம் உடையது.
கெடுதலை நீக்கி விடுதலை ஆக்கத்
தேரோட்டும் ஈரோட்டுப் பெரியவன் திறத்தை
உணரா மக்களும் உணர்ந்துபின் பற்றினர்.
போரிலோர் புதுமுறுக்குக் காணுகின்றேன்,
என்று சொன்னான்; இலக்கியம் மாற்றினர்,
இந்தி கொணர்ந்தனர், இன வரலாற்றின்
வேரை அழிக்க வேண்டுவ செய்தனர்
இனத்தைக் காட்டிக் கொடுப்பவர், இனிய
தமிழைக் காட்டிக்கொடுப்பவர் தழைத்தனர்;
எழுச்சி தடைப்பட்டதோ என்றேன்.
தடைபட வில்லை. கவலை தழைத்ததால்
புலவர்பால் உணர்வு பூத்தது: ஒற்றுமை
காய்ந்தது; எழுச்சி கனிந்தது அன்றோ!
செந்தமிழ்ப் புலவன் வெள்ளை வாரணன்
அருளிய தொல்காப்பிய ஆராய்ச்சி
அஞ்சுதல் சிறிதும் இல்லா அருள்மிகு
நெஞ்சப் படைப்பு! நாட்டுக் கன்பளிப்பு
''நூலே கரகம் முக்கோல் மனையே
ஆயுங்காலை அந்தணர்க்குரிய''
என்பது முதலிய பதினைந்து செய்யுள்
ஒல்காப் பெரும் புகழ் தொல்காப்பியத்தில்
இடைச்செருகல் என்றெடுத்துக் காட்டிய
யானைக்குக் கைமாறு வானும் போதாது.
தே போ. மீக்கள் செய்யும் தீமையில்
விளைந்த உணர்ச்சி வெள்ளப் பயன் இதே!
இதோகாண் புலவர் எழுதுகின்றார்கள்.
மற்றொன்று கேட்பாய்! கற்றும் கேட்டும்
தினத்தந்தியினால் செல்வம் சேர்த்தும்
வரும் ஒரு தமிழன் ஆதித்தன் என்பான்
பார்ப்பான் நட்புப் பட்ட காரணத்தால்
தம்மினின்றும் நீக்கினர் தமிழர்.
அதனால் அந்த ஆதித்தன் என்பான்
தமிழர் தலைவனைத் தமிழக வேந்தனை
அடைந்தானாகி அழுதானாகி
என் கூட்டத்திற்கு நின் அருள் வேண்டும்
என்றனன். சரிதான் என்றான் தந்தை.
தமிழர் உள்ளப்பாங்கு தனைனையும்
அன்னார் எழுச்சியும் அளவையும் காண்க
என்றாள் அன்னை . மகிழ்ச்சி எய்தினேன்.
ஆயினும் என்றன் ஐயப்பாடுகள்
அகல வில்லை அறிக்கை செய்தேன்.
'பார்ப்பனர் தமிழர் பகைவன்' என்றேன்
உண்மை என்றே அன்னை ஒப்பினாள்
"பார்ப்பானுக்குத் தமிழ் மகள் பயந்த
தீயனால் நாட்டுக்கு நன்மையுண்டா?"
என்றேன் அன்னை இயம்பு கின்றாள்.
பார்ப்புக்குப் பிறந்தோன் பகைவன் பகைவன்; அன்னோன்
தீர்ப்புக் கடங்கி திரிபவரும் தீயரே.
வள்ளுவன் திருக்குறள் ஆணை? அவர்களால்
எள்ளுமூக்கத்தனை நன்மையும் இந்நாட்டுக்கு
இல்லை இல்லை என்றாள் அன்னை
அன்னையே இன்னும்ஓர் அறிக்கை, நாட்டை
ஆளவந்தார் தமிழரே ஆயினும்
மாள வந்த பார்ப்பன மக்களை
ஏறவிட்ட தென்ன வென்றேன்
வீழ்ந்துமுன் காட்டும் 'வீரமே' என்றாள்.
இதற்கிடை என்னரும் பேத்தியும் பேரனும்
தூக்கமா என்றனர், நாட்டுக்கு
ஆக்கம் நேருமுன் தூக்கமேது இங்கே. |
( 165 )
( 170 )
( 175 )
( 180 )
( 185 )
( 190 )
( 195 )
( 200 )
( 205 )
( 210 )
( 215 )
( 220 )
( 225 )
( 230 )
|
பாவி மொழியில் பகர்ந்த மகாவமிச
நூலில் ஒரு செய்தி நோக்ககின்றோம் - மேலாம்
தமிழ் என்ற சொல்லைத் தமிழோ என்றார்; ஏன்?
தமிழரல்லார் நாக்குத்தவறு
தமிழ்நாட்டை ஆசிரியர் தலைமை முன்னாள்
தமிரிசி என்றுரைத்தார். தாம் ஓர் - தமிழரல்லார்!
ஆதலினால் தோழா அயலார் ஒரு சொல்லை
ஓதலினால் மாறுபடல் உண்டு
தமிழென்று சாற்றுதற்கு மச்ச புராணம்
த்ரமிளென்று சாற்றியதும் காண்க-தமிழா
படியைப் ப்ரதி என்னும் பச்சைவடவோர்இப்
படியுரைத்தல் யார்வியப்பார் பார்.
தமிழோவும் தமிரிசயும் வேறு
த்ரமிளத் ரமில் எல்லாம் சாற்றின் - தமிழன்
திரிபே அவைகள்! செந்தமிழ்ச்சொல் வேர்தான்
பிரிந்ததுண்டோ இங்கவற்றில் பேசு
திரிந்தமிழ்ச் சொல்லும் தமிழ்ச்சொல்லே ஆற்றில்
பிரிந்தவாய்க்காலும் பிரிதோ?-தெரிந்த
பழத்தைப் பயம் பளம் என்பார் அவைதாம்
தழைந்த தமிழ்ச்சொற்கள் தாம்.
உரைத்த இவை கொண்டே உணர்க தமிழம்
திராவிடம்என் றேதிரிந்த தென்று! - திராவிடம்
ஆசிரியர்வாய்ப் பட்டுத் திரிந்தாலும் அந்தச்சொல்
ஆரியச்சொல் ஆமோ அறி
தென்குமரிப் பஃறுளியும் சேர்வடக்கு மாமலையும்
நன் கெல்லை கொண்ட நடுவிடத்தில்-மன்னும்
பொருள்கள் பலவாம்! பொலிந்தனவே அந்தப்
பொருள்கள் தமிழ்ப்பெயரே பூண்டு
"திராவிடம தன்னந் தனியாரியமா?
"திராவிடம இன்பத் தமிழன்-திரிபன்றோ?
இன்பத் தமிழகத்துக் கிட்டார் திராவிடப்பேர்
என்பார் சொல் ஏற்புடையதன்று
|
( 235 )
( 240 )
( 245 )
( 250 )
( 255 )
( 260 )
|
அழியா திருப்பது புகழொன்றே ஆகும்-பிற
அனைத்தும் மறைந்து போகும் (அழியா)
வழியே ஏகுக வழியே மீளுக
பழிதே டாதே அருமைக் குழந்தாய்! (அழியா)
மொழி என்றால் உயிரின் நரம்பு-நன்
முத்தமிழ் மொழியோ தமிழர் வரம்பு
மழையால் நன்செய் ஆகும் கரம்பு-நின்
வாழ்நாளெல்லாம் வைத்துத் தமிழை விரும்பு! (அழியா)
தமிழுக்கு வரும் இடையூறு-போகச்
சாவதும் உனக்குச் செங்கரும்பின் சாறு!
சுமைசுமை யாய்வரும் தமிழர் கைம்மாறு
தொடங்கப்பா போர் தமிழ்உய்யுமாறு! (அழியா)
தமிழை இகழ்வோன் மடையன்
தமிழிற் றமிழனைக் காணான் கடையன்
அமிழ்திற் சுவைகாணான் எவ்வறி வுடையான்?
அழிப்பானை மகனே அழித்திடத் தடைஏன்? (அழியா)
புகழ் உள்ளான் சாவதே இல்லை
இகழ்உடையானோ வாழ்வதே இல்லை!
மகனே உற்றுக்கேள் என் சொல்லை-எனக்கு
மகிழ்ச்சியை அதுதான் என் வாழ்வின் எல்லை! (அழியா)
|
( 265 )
( 270 )
( 275 )
( 280 )
|
அந்நாள் சமயக் கணக்கரை நினைக்கிறேன்
இந்த நாள் சமயச் சழக்கரைப் பார்க்கிறேன்
வேறுபாடு எத்தனை மாறுபாடு எத்தனை!
கூறும் சமயக் கொள்கைகள் மாறினும்
அனைவரும் தமிழின் அருமை பெருமையைத்
தனைப்புகழ்வதினும் தமிழைப் புகழ்வதில்
மாற்றுக்குறையா மதிப்புடன் போற்றினர்
ஏற்றுக் கொள்வோர் தமிழர் ஆதலின்
இந்நாள் சமய படங்கள் எப்படி?
ஆரிய மொழியின் அடிமை வருடி
வீரியமிலாது வெம்புகின்றன
குருக்கள் மார்எனும் கோயிற்பெருச்சாளிகள்
இருப்பிடமன்றோ எம்மவர் இருப்பிடம்!
இன்னிசை பாடிய எந்தமிழ் நால்வர்
இன்றமிழ்ப் பாட்டை எழில்படச் சுவரில்
எழுதியதன்றி தொழுதிட வைத்திலர்
கடவுளை வணங்கக் கருதிச் செல்லுவார்
வடமொழி அருச்சனை செய்து வருகையில்
தின்பண்டத்தை வாங்கித் தின்று
தென்பொடு பார்ப்புக்குத் தண்டம் அழுது
சுவரில் எழுதிய சொல்லோவியங்களைத்
தவறியும் பார்த்துத் தமிழ்ப் பாட்டு எண்ணார்.
இப்படி நடக்கிறது ஏதோ தமிழ்ப்பணி!
அறநிலையம் எனும் துறைத்தனத்தில்
மறந்தும் தமிழை மதிப்பதில்லை
சைவ வைணவ மடங்கள். அவற்றைஆள்
சைவ வைணவ மடாதிபதிகள்
கோயில் நிலத்தால் கும்பி நிரப்பி
மூலையில் பூசாரி குடும்பத் தாருடன்
துறவிகள் ஜயகோ உறவிகள் ஆயினர்
நிறங்கள் அவர்கள் நெஞ்சில் நிறைவதால்
சிவபோக சாரத்தில் செந்தமிழ் மறந்தனர்
வைகுண்ட போகத்தில் வண்டமிழ் மறந்தனர்
மற்ற சமயமோ தமிழுக்கும் அவர்க்கும்
சொற்றொடர் பில்லை. சொல்லுவேன் தமிழரே
மடங்கள் மதித்திடும் கோயில் அனைத்தையும்
பிடுங்கிட வேண்டும் அரசு, பெருந்தமிழ்க்
கல்விச் சாலைகளாக அதனை மாற்றுக.
கோயிலைக் கலையின் கூடமாய் மாற்றுக.
இதனைச் செய்யாத வரையில்
தமிழ் வாழாதே தமிழர் வாழாரே!
|
( 285 )
( 290 )
( 295 )
( 300 )
( 305 )
( 310 )
( 315 )
( 320 )
|
தமிழுக் காக!- என்
தாயினுக் காக!
அமையாரின் படையை என் சினத்தால் எரிப்பேன்
அவராலே நான்சாக நேரினும் சிரிப்பேன் (தமிழுக்காக!)
தமிழுக்கு மகன் நான்! - ஒரு
தாழ்வையும் அறியேன்
தமை உயர்வென் பார்அவர் பகைப்பெருங் கடனாத்
தாக்கிடுவேன் அல்ல திழப்பேன் என் உடல் (தமிழுக்காக!)
அஞ்சுதல் இல்லேன்-நான்
ஆரியன் அல்லேன்
நெஞ்சம் தமிழ் மரபின் வீரத் தொகுப்பு
நேர்போரில் காண்பேன்சிறப்பல்ல திறப்பு! (தமிழுக்காக!)
பைந்தமிழ் எல்லை - தனில்
பகைக்கிட மில்லை
எந்நாளும் தோலாத செந்தமிழன் தோள்
எழுந்தால்நான் தூள்; அல்லது தமிழ்த்தாய் ஆள்வாள்
|
( 325 )
( 330 )
( 335 )
|
வீறுடைய செம்மொழி தமிழ்மொழி
- உலகம்
வேரூன்றிய நாள்முதல் உயிர்மொழி!
வீறுடைய
செம்மொழி...
மாறுபடும் மொழிகளைப்போல் மாறவில்லை
மங்கிவரும் மொழிகளைப்போல் மங்கவில்லை!
வேறுபடும் மொழிகளைப்போல் வேறாகவில்லை
வீழ்ந்துபடும் மொழிகளைப்போல் வீழவில்லை!
வீறுடைய
செம்மொழி...
கூறுபடும் மொழிகளைப்போல் குலையவில்லை
கொஞ்சிபேசும் வழக்கற்றுக் குமையவில்லை!
சாறுபட்டு மரங்களைப்போல் சாயவில்லை
தரங்கெட்ட மனிதரைப்போல் தாழவில்லை!
வீறுடைய
செம்மொழி!
|
( 340 )
( 345 )
( 350 )
|
உலகின் முதல்மொழியே
- எம்
உணர்வின் முதல்மொழியாம்
கலைகளின் சீர்மொழியே -எம்
கண்ணிற் சிறந்ததுவாம்
அலகில் ஆற்றல் மொழி - என்
அன்னைத் தமிழ்மொழியாம்!
தொல்காப்பிய மொழியே - எம்
தூய நல்மொழியாம்!
பல்காப்பிய மொழியே - எம்
பண்பாடுணர்த்தும் மொழி!
வெல்லும் தமிழ்மொழியே - எம்
வீரவாழ்வு மொழியாம்!
பண்ணும் இயல்கூத்தும்-இப்
பாருக்களித்த மொழி!
எண்ண உயிர்வினுக்கே - தலை
இருப்பெனும் செம்மொழியாம்
மண்விண் இருக்கும்வரை - தமிழ்
வாழ்வுயர்த்தும் மொழியாம்! |
( 355 )
( 360 )
( 365 )
( 370 )
|
|
|
|