பாரதிதாசன்
பன்மணித்திரள்
பெண்கள் பாட்டு
|
எடுப்பு
எறிந்தஎன் பூப்பந்தை எடுக்கமுடியுமோ
இசைப்பீர் தோழியரே !
உடனெடுப்பு
அறிந்த வரைக்கும் பந்து வானை அளாவிப்பின்
ஆத்திகன் நடுவீட்டில் போய்ச்சேர்ந்த தாலே -- எறிந்த
பார்ப்பனன் கால் மாடு -- தலையைவைத்துப்
படுக்கும் அப்புல்லனோடு -- முட்கள் செறிந்து
மூர்க்கமாய் வளர்ந்திடும் மூடவழக்கக் காடு
மொய்க்கும் ஆத்திகன் வீடுமுடைநாற்றச் சுடுகாடு -- எறிந்த
அகத்தில் ஆணவம் கொழுக்கும் -- பொய்வஞ்சப்பாசை
அணுக வும்கால் வழுக்கும் -- ஏழைக்கு மட்டும்
இகசுகம் பொய்மைஎன்னும் இதயத்தின் அழுக்கும்
இழுக்க மெல்லாம்மறைக்க முகத்திற்குறி பழுக்கும்-- எறிந்த
கடவுள்கள் என்னும் உலையே -- மூட்டிவைத்த
கடுமத வாள்கொள் நிலையே -- நிலையாய் நின்று
படியில்தாழ்ந்தோர் என்போரைப் பன்னும்படு கொலையே
பாங்கிய ரேஅதனைப் பார்க்கசகிக்கலையே -- எறிந்த
ஏழைஅறிவை வேட்டு -- இட்டத்தினாலே
இழிகோயி லென்னும் காட்டை -- விழியிற் காட்டிப்
பாழாக்கச் சொல்லியதிற் பறித்திடும் பணமூட்டை!
பார்க்கவும் சகியேன் ஆத்திகன் வீட்டை! -- எறிந்த
பொய்மைப் புராணப் பேச்சில் -- மக்களறிவைப்
புதைக்கும் அவனின் மூச்சில் -- வெளிமயங்க
மொழிக்கும் விருதா பக்திமொழிந்திடும் கைவீச்சில்முகம்கருகி யிருக்கும் என்பந்து சீச்சீ! -- எறிந்த
|
( 5 )
( 10 )
( 15 )
( 20 )
|
பெண்கள் விடுதலை
(சிறு காப்பியம்)
|
கிழக்கு
வெளுக்கக் கிளிமொழியாள் தங்கம்
வழக்கப் படிவீட்டு வாயிற் படிதுலக்கி
கோலமிட்ட பின்பு குடித்தனத்துக் கானபல
வேலை தொடங்கி விரைவாய் முடிக்கையிலே
ஏழுமணிக் காலை எழுந்தாள் அவள்மாமி
வாழுகின்ற பெண்ணாநீ வாடிஎன்றாள் தங்கத்தை
இந்நேரம் தூங்கி யிருந்தாயா? என்பிள்ளை
எந்நேரம் காத்திருப்பான் இட்டலிக்கும் காப்பிக்கும்
என்றே அதட்டி இழுத்துத் தலைமயிரை
நின்றபொற் பாவை நிலத்தில் விழச்செய்தாள்.
வாரிச் சுருட்டி மலர்க்குழலைத் தான்செருகி
கூரிய வேல்விழியாள் கொண்டதுயர் காட்டாமல்
தொட்ட பணிமுடித்துச் சுள்ளி அடுப்பேற்றி
இட்டலியும் பச்சடியும் இட்டஒரு தட்டுடனும்,
காய்சுவை நீருடனும் கொண்டான் தனிஅறையில்
போய்ப்பார்த்தாள் இன்னும் பொழுது விடியவில்லை
என்று நினைத்தே இருவிழி திறக்காமல்
பன்றிபோல் பாயில் படுத்துப்புரளுகின்ற
அத்தான் நிலைகண்டாள்; அத்தைசொல் தான்நினையாள்,
முத்தான வாய்திறந்து மொய்குழலாள் கூறலுற்றாள்;
எட்டு மணிஅத்தான் எழுந்திருப்பூர் தந்தையார்
திட்டுவார் கண்கள் திறப்பீர் விரைவாகக்
காலைக் கடன்முடித்துக் காப்பி முடித்துடனே
வேலைக்குப் போவீரே என்று விளம்பக்
கழுதைபோல் தன்னிரண்டு கால்கள் உயர்த்தி
அழகு மனையாளை அப்படியே தானுதைத்தே
தூக்கத்தில் வந்தெனக்குத் தொல்லை கொடுக்கின்றாய்
போக்கற்ற நாயே, நீ போடிஎனப்புகன்றான்.
செப்போடும் தட்டோடும் சேயிழையாள் கூடத்தில்
வெம்பும் உளத்தோடும் மீளவந்து பார்க்கையிலே
மாமனார் வந்து மலைபோலக் காத்திருக்க
ஊமைபோல் சென்றே உணவை எதிர்வைத்தாள்
எங்கேஉன் அத்தான் எழுந்திருக்க வில்லையோ?
எங்கிருந்து வந்தாய்நீ என்குடித்த னம்கெடுக்க?இன்னுமா தூங்குகின்றான் ஏன்குரங்கே மூஞ்சியைப்பார்,
ஒன்பதுக் கெழுந்திருந்து பத்துமணிக்கு ஊண்முடித்துக்
கையில் குடையேந்திக் காலிற் செருப்பணிந்தே
ஐயாதம் வேலைக்குச் சென்றால் அடுத்தநாள்
வீட்டுக்குப் போக விடைபெறலாம் அல்லவோ
காட்டுக் குறத்திபோல் கண்ணெதிரில் நிற்காதே!
என்றுதன் பிள்ளை இழைத்த பிழைக்காகக்
கன்னல் மொழியாள்மேல் காய்ந்துவிழுந் தேமாமன்
உண்ணத் தலைப்பட்டான் இட்டலியை, ஒண்டொடியாள்
எண்ணத் தலைப்பட்டாள் தன்னிலையை! என்செய்வாள்?
அத்தான் எழுந்தான் அரைநொடியிற் பல்துலக்கிப்
பொத்தல்நாற் காலியின்மேல் பொத்தென்று குந்தினான்
உள்ளே விழுந்தபடி ஓவென்று கூச்சலிட்டான்
பிள்ளை நிலைகண்டும் பெற்றோர் அருகிருந்தும்
கொல்லைக் கிணற்றில் குடிதண்ணீர் மொண்டிருந்த
மெல்லி விரைந்துவந்து மேலே எடுத்துவிட்டாள்.
புண்பட்ட தோஎன்று பூவையாள் பார்க்கையிலே
கண்கெட்ட துண்டோ! கடியநீ ஓடிவந்து
தூக்கினால் என்ன தொலைந்துபோ என்றுரைத்துத்
தாக்கினான் தையல் தலைசாய வீழ்ந்தெழுந்தாள்.
அப்போது மாமி அருமை மகனிடத்தில்
கொப்பேறிக் குந்தும் குரங்குபோல் உன்மனைவி
மேலேறிக் குந்தியே நாற்காலி மேற்பிரம்பைக்
கேலி பிறர்செய்யக் கிழித்துத் தொலைத்துவிட்டாள்
என்றாள். அருகில் இருந்திட்ட மாமனோ
நின்றால் அடித்திடுவான் நீபோஎன் றேஉரைக்க
அப்படியே பிள்ளையும் ஐந்தாறு தந்திடவே
பொற்பாவை கண்ணில் புனல்சாய உட்சென்றாள்!
மாலை ஒருமணிக்கு மங்கை அடுப்பருகில்
வேலைசெய் யும்போது முற்பகுதி வீட்டறையில்
எண்ணெய்ஏ னத்தை எலிஉருட்டிப் போயிருக்கப்
பெண்ணுடைத்தாள் என்று பெரும்பழியை மாமிஅவள்
சூட்டினாள் அந்தத் துடுக்குமகன் தாயின்சொல்
கேட்டுக் கயிற்றால் கிளிமொழியை ஓர்தூணில்
கட்டினான் கட்டிக் கழியால் அடிக்கையிலே
மங்கையைப் பெற்றவர்கள் வந்தார். நிலைகண்டார்!.
தங்கமே என்று தலைமீது கைவைத்துத்
தேம்பி அழுது சிறிது பொறுப்பீரோ
கட்டவிழ்க்க மாட்டீரோ என்று கதற அவன்
கண்ணான பெண்ணாளைக் கட்டவிழ்த்துப் போஎன்றான்
பெண்ணாளின் மாமியவள் பெண்ணென்றால் இப்படியா?
கொண்டவனை மீறுவதா? கொண்டவனை அண்டாமல்
கண்டவனை அண்டிக் கதைபேசப் போவதுண்டா?
என்று பலபொய் எடுத்தெடுத்து வீசலுற்றாள்;
என்றைக்கும் வாழாள் இவளென்றான் மாமனும்!
அந்நாள் இரவில் அணங்குதனைப் பெற்றவர்களபொன்னையன் வீட்டுக்குப் போய்இத னைக்கூறி
எதுசெயலாம் என்று வினவ அவன்சொல்வான்
இதுவெல்லாம் முன்னாள் பிரமன் எழுதியதாம்
ஆரும் அழிக்க முடியாது கொண்டவனால்
நேருவதை நாம்தடுக்க எண்ணுவதும் நேர்மையில்லை
பெண்டாட்டி என்றும் பிழைசெய்யக் கூடியவள்
கொண்டவன் கொல்வான்; அணைப்பான் அவன்விருப்பம்
இந்நாள் இதுவெல்லாம் நான்சொல்லும் சொல்லல்ல
அந்நாள் மனுவே அழுத்தி எழுதியவை,
என்றுரைக்கப், பெற்றவர்கள் உள்ளம் எரிந்தவராய்க்
கன்றைப் பிரியும் கறவைஎனக் காலையிலே
பெண்ணைப் பிரிந்து பெருந்துன்பன் மேலிட்டு
வெண்ணெய்நல்லூர் வண்டியின் மேலேறிச் சென்றார்கள்.
வஞ்சி மரச்சருகு வாதனூர்ச் சாலையிலே
கொஞ்ச நஞ்சமல்ல குவிந்து கிடந்திடுதே
ஆலைச்சங் கூதும் அதிகா லையில்நீபோய்
நாலுசுமை கட்டிவந்தால் நாலுபணம் மீதியன்றோ?
என்றுரைத் தாள்மாமி இதுகேட்ட தங்கம்தன்
பொன்னான அத்தான்பால் போயுரைக்க லாயினாள்;
வஞ்சிச் சருகுக்கு மாமியார் போஎன்றார்
கொஞ்சம் விலையே கொடுத்தால் அதுகிடைக்கும்
பத்துக்கல் ஓடிப் படாப்பாடு பட்டிடநாம்
சொத்தில்லா ஏழைகளா சொல்லுங்க ளென்றுரைத்தாள்
நன்செயிலும் புன்செயிலும் நானூறு காணியுண்டு
இன்னுமுண்டு தோப்பும் இருப்பும் இருந்தாலும்
என்தாயின் சொல்லைநீ ஏன்மறுத்தாய்? நாள்தோறும்
சென்று சுமந்துவர வேண்டுமென்றான் தீயவனும்!
நெஞ்சம் துடித்தாள் நிலைதளர்ந்தாள் அத்தானைக்
கெஞ்சினாள் அந்தப் பழக்கம் கிடையாதே?
ஒன்றியாய்ப் போவதற்கும் என்னுள்ளம் ஒப்பாதே
சென்றுரைப்பீர் மாமியிடம் செல்லா வகைசெய்ய,
என்றாள் பயனில்லை இரவு கழிந்தவுடன்
சென்றாக வேண்டுமென்று சிங்கக் கனாக்கண்டாள்!
மாடியிலே மங்கையர்க ளோடிருந்து பந்தாடி
வாடினேன் என்று வலஞ்சுழியும் அப்பவகை
உண்ணென்று தாய்எனக்கே ஊட்டுகையில் நானவற்றை
மண்ணென் றுமிழ்ந்ததெல்லாம் எண்ணி அழுவேனா!
சூட்டுமலர் வாடமணிச் சுட்டியொடு நான்களைந்தே
போட்டு வயிரப் புதுச்சட்டி வாங்கியதை
எண்ணி அழுவேனா! எருமைமுது கென்புபோல்
பண்ணிய தங்கமணிக் கோவை பழையதென்று
வேலைக்கா ரிக்கு விடியலில் நான்தந்து
மாலையிலே மற்றொன்று வாங்கியதை எண்ணி
அழுவேனா? மான்குட்டி கேட்ட அளவில்
எழுதி வரவழைத்த தெண்ணி அழுவேனா!
தன்னாடை மேலென்றாள் தான்காண நான்அன்றே
பொன்னாடை பூண்டதை எண்ணி அழுவேனா!
அண்டைத் தெருவுக்கும் ஆடும் இருகுதிரை
வண்டிஎன்றால் வந்துநின்ற தெண்ணி அழுவேனா? இந்நாளில் என்கணவர் இல்லத்தில் நாள்தோறும்
தொன்னையிலே நொய்க்கஞ்சி தூக்கிக் குடிஎன்னும்
அன்பில்லார்க் காட்பட்ட தெண்ணீ எழுவேனா!
உள்ளம் அறிய ஒருபிழைசெய் யாவிடினும்
தள்ளித் தலையுடைப்ப தெண்ணி அழுவேனா!
வஞ்சிச் சருகெடுத்து வாஎன்ற சொல்லுக்கே
அஞ்சி நடுங்குவ தெண்ணி அழுவேனா! (160)
என்று துடித்தழுதாள் ஏனழுதாய் என்றுரைத்த
முன்வீட்டு முத்தம்மா என்னும் முதியவள்பால்
அப்போது தங்கத்தின் அத்தானும் மாமனும்
எப்போதும் போல இருந்தார்கள் திண்ணையிலே
ஆளவந்தார்க் காளாய் அமைந்திட்ட காவலர்கள்
வாள்இடுப்பில் கட்டி வலக்கையில் செப்பேட்டை
ஏந்தி இவர்கள் எதிரினிலே வந்துநின்று
சூழ்ந்துள்ள மக்களுக்குச் சொல்வார் பெருங்குரலில்
பெண்டாட்டி என்ற பெயரடைந்த நாள்முதலே
ஒண்டொடிக்கும் சொத்தில் ஒருபாதி உண்டுரிமை!
தன்மனைவி சொத்தால்தான் வேறுமணம் தான்செயலாம்
இன்னல் மனைவிக் கிழைத்தால் கொலைக்குற்றம்
ஆளவந்தார் ஆணை இதுவென்றே அறிவித்து
வாளுருவிக் காட்டி வழிநடந்து சென்றார்கள்!
ஃ ஃ ஃ
மங்கை அதுகேட்டாள் மணவாளனும்கேட்டான்
அங்கிருந்த மாமனும் கேட்டான் அவன்சென்று
தன்மனைவி காதில் தனியாக நின்றுரைத்தான்
முன்னிகழ்ந்த துன்ப வரலாறு முற்றிற்றே!
ஃ ஃ ஃ
பின்பொருநாள் வீட்டுப் பெருங்கணக்கு மாறுபட
என்னவகை கண்டறிவ தென்றறியா மாமன்தான்
தன்மகனைக் கேட்டும் சரிசெய்யத் தோன்றாமல்
அன்பு மருமகளை அண்டி "ஒரு விண்ணப்பம்
என்றான் மருமகளும் என்னவென்றாள் "இக்கணக்கில்
நின்ற பிழைதன்னை நேராக்க வேண்டுமென்றான்.
இன்னும் அரைமணிக்குப் பின்னால் நினைப்பூட்டிச்
சொன்னால் சரிபார்க்கத் தோதுபடும் என்றுரைத்தாள்.
ஃ ஃ ஃ
அப்போது மங்கையின் அன்னையும் தந்தையும்
எப்போதும் போல்பார்க்க எண்ணியங்கு வந்தார்கள்
ஃ ஃ ஃ
வீட்டுத் தனியறையில் மெல்லிஇருந் தாள்தலையை
நீட்டாமலே வெளியில் நின்றிருந்தார் மாமனார்
அத்தான் அலுவ லகத்தினின்று வீடுவந்து
முத்து நகைக்காரி முகம்பார்க்க எண்ணி
மனையின் அறைக்குள் "வரலாமா" என்றுதனிவிர லால்கதவைத் தட்டி வெளிநின்றான்.
காத்திருக்கச் சொன்னாள் கனிமொழியாள் தான்கணக்குப்
பார்த்தபின் பெற்றோரைப் பார்த்துப் பலபேசி
மாமன் கணக்கை வகைசெய்து காட்டியபின்
நாமலர்ந்தாள் நல்அத்தானோடு.
|
( 25
)
( 30 )
( 35 )
( 40 )
( 45 )
( 50 )
( 55 )
( 60 )
( 65 )
( 70 )
( 75 )
( 80 )
( 85 )
( 90 )
( 95 )
( 100 )
( 105 )
( 110 )
( 115 )
( 120 )
( 125 )
( 130 )
( 135 )
( 140 )
( 145 )
( 150 )
( 155 )
( 165 )
( 170 )
( 175 )
( 180 )
( 185 )
( 190 )
( 195 )
|
திராவிட நாட்டுத்
தொண்டால் வரும் இன்பம்
|
அவன் :
பிறர்நலம் கண்டுநாம் பொறாமை கொள்கிலோம்;
நிலைபொருள் பெறினும் குறைபாடு கருதும்
அவாவை உடையோம் அல்லோம், வெகுளியால்
எவர்க்கும் தீமை இயற்றுவோம் இல்லை
இன்னாத கூறலும் இல்லை! நம்நா
டிந்நாள் இந்நொடி வரைக்கும் நல்லறம்
வழுவாது வாழ்க்கை நடத்துதல் எண்ணிநான்
மகிழும்இவ் வேளையில், வண்டின் இசையும்
புகுகுளிர் தென்றலும் பூக்களின் மணமும்
அம்ம கிழ்ச்சியைப் பெருக்கின அன்றியும்,
முத்துப்பல் சிரித்தால் முகமெலாம் சிரிக்கும்உன்
அத்து மீறிய அழகும் இளைமையும்
பழயபடி பழய படிஇழுத் தென்னை
நிழலுறு காவிரி நீர்த்துறை போன்றதோர்
இன்பத்தில் ஆழ்த்தின அன்பின் பொய்கையே.
அவள் :
பிரியினும் உம்திரு வுருவம்என் நெஞ்சில்
பிரிய வில்லை எனினும் அருகில்
நீவிர் இருந்தால் தான்என் ஆவி
இருப்ப தாகும் அருகில் இருக்கவும்
தழுவிடில் என்னுயிர் தளிர்ப்ப தாகும்நான்
தழுவ நீவிர் தமிழ்பேசி யணைப்பின்
சொல்லொணா இன்பம் தூய மணாளரே!
அவள் ;
இதனைப் போன்ற இனபம்இவ் வுலகில்
வேறெத னாலும் விளையக் கூடுமோ?
அதனை அறிய ஆவல் உற்றேன்
அவன் ;
முத்துக் கடல்முரசு முப்புறம் முழங்க
வடக்கின் வங்கத் திடதுகால் ஊன்றி வானவில் ஒத்த வாளா யுதத்தை
இமயம் நோக்கி எடுத்த திருக்கோலப்
பெருநாட் டைநமைப் பெற்றபொன் னாட்டைத்
திராவிட நாட்டைச் சிலர்எதிர்க் கின்றனர்.
அச்சிலர் அந்நாள் பிச்சைஎன்று வந்தவர்,
திராவிடர்க்குச் சேயிழை கூட்டிக் கொடுத்தல்
செய்து வந்தவர் இந்நாள் அவர்கள்
நையும் சூழ்ச்சி நாடாளாலாயினர்
திராவிடர் ஒன்று சேரா வண்ணம்
கலாம்விளைக் கின்றனர்? நிலாமுகப் பெண்ணே!
இன்று நாம் நாட்டுக் கிழைக்கும் ஒவ்வொரு
சிறிய தொண்டும் பெருநலம் செய்யும்,
இழைக்கும் தொண்டெலாம் இன்பம் செய்யும்.
மானம் பாழ்பட வாழ்வதைப் பார்க்கிலும்
ஊனுடல் ஓழிவதே உயர்வை நல்கும்,
தூங்கும் திராவிடத் தோழன்இல் சென்று
தீங்குறு திராவிட நிலைமை செப்பி
அன்னோன் அயர்வைச் சிறிதே அகற்றுவோன்
நெஞ்சினில் தோன்றும் இன்பம் கொஞ்சமன்று.
திராவிடர் மொழிக்கும் திராவிடர் சுவைக்கும்
திராவிட நாக ரிகத்தின் சீர்க்கும்
மதம்சாதி என்னும் மடமைக் கப்பால்
தூய நெஞ்சமும் தூய கொள்கையும்
மேற்கொண்டு வாழும்நம் மேன்மை தனக்கும்
இடையூறு றுக்கும் கடையரை எதிர்த்துப்
போராடு கின்ற போது பொரிபடும்
வாளிடைத் திராவிடன் தோள் கிடந்தே
அசையும் ஒவ்வோர் அசைவிலும் அன்னோன்
கசிதேன் பெண்இதழ் காட்டும் அதனினும்
பேரின் பத்தை அடைவான்
ஆரிதை மறுப்பார் அன்பு மங்கையே?
|
( 200 )
( 205 )
( 210 )
( 215 )
( 220 )
( 225 )
( 230 )
( 235 )
( 240 )
( 245 )
( 250 )
( 255 )
( 260 ) |
காக்கைசொல் நம்பிக் காசைமட்டும்
போக்கடிக்காதே!
காக்கை இறைப்பில் கத்திக்
கிடந்தது
வீட்டுக் காரன் கேட்டுக்
வருந்தினான்
பறந்தது காக்கை சிறிதுநேரத்தில்
மறந்த நண்பன் வந்தான் விருந்தாய்!
மற்றும் ஒருநாள் வந்து காக்கை
கத்திக் கிடந்தது -- கடிதில்
ஒருவன்
விருந்தாய் வந்தான் வீட்டுக்
காரன்
தெரிந்து கொண்டான் காக்கையின்
திறமையை
ஒருநாள் விருந்தினர் ஒன்பது
பேர்கள்
வரலானார்கள் வருவதன் முன்பு
காக்கை எதுவும் கத்தவேயில்லை.
காக்கை மறந்ததாய்க் கருதினான்
வீட்டினன்!
ஒருநாள் காக்கை ஓயாது கத்தவே
வரும்விருந்தென்று வழிபார்த்
திருந்தான்
அஞ்சு மணிவரை ஆருமே வருகிலர்
அஞ்சல் வந்தது அயலூரி னின்றும்
ஒருவன் வருவதும் ஓலை வருவதும்
சரிநிகர் என்று தான்நினைத்
திருந்தான்!
நாளை வருவதாய் நண்பன் ஒருவன்
ஆள்ஒரு வனிடம் அஞ்சல் அனுப்பினான்.
மறுநாள் காக்கையும் வாய்ப்பறை
அறைய
அறிவித் தபடி அவனும் வந்தான்.
மாரி யம்மன் தேருக்கு நண்பன்
காரூரினின்று கடிது வருவான்
என்று நினைந்துகொண் டிருந்தான்
வீட்டினன்.
அன்று காக்கையின் அறிக்கை
தன்னை
நோக்கி யிருந்தான் காக்கையும்
வந்தது,
காக்கா காக்கா என்றுகத்தியது.
மனைவியை அழைத்து வருபவனுக்குத்
தனியே ஒருபடி சமைஎனச் சொன்னான்.
காக்கை மேலும் கத்தியே கிடந்தது
நோக்கியே துப்பாக்கியோடு ஒருவன்
அண்டைவீட் டின்மேல் அமைவாய்
வந்து
குண்டு பாய்ச்சிக் கொன்றான்
காக்கையை!
கரிய காக்கை கழறிய வண்ணம்
வீட்டுக் காரனே விளம்புவேன்
கேட்பாய்!
மோட்டுக் காக்கை முழங்குவதுண்டு,
மக்கள் விருந்தாய் வருவதுண்டு
மும்முறை அன்று முந்நூறு தரம்!
இம்முறை சரியாய் இயலுவதுண்டு.
காக்கைசொல் நம்பிக் காசை
மட்டும்
போக்கடிக்காதே புகல்வேன்
இன்னும்
தன்பின் தொடரும் சாவை அறியாக்
கன்னங்கரிய காக்கையா அறியும்
இல்லிடை விருந்து வருவதை?
நல்லதா மூடநம்பிக்கையதே?
|
( 265 )
( 265 )
( 270 )
( 275 )
( 280 )
( 285 )
( 290 )
( 295 )
( 300 )
|
உறங்கிட இடமும் தந்தோம்
உணவிட்டோம் உடைய ளித்தோம்
திறமிகு பணிப்பெண் ணேநீ
செய்திடும் வீட்டு வேலை
அரைகுறை யாவ தல்லால்
அழகில்லை திருத்த மில்லை
பொறுப்பில்லை என்று சொன்னாள்
பொறுப்புள்ள வீட்டுக் காரி!
நானென்ன செக்கு மாடா?
நாள்தோறும் வேளை தோறும்
ஊனெல்லாம் சோர்ந்து போத
உழைப்பால் குறைகள் சொல்ல
லானதென் றுரைத்தாள் வேலைக்
கமர்ந்தவள். வீட்டுக் காரி
யானும்அவ் வாறே நாளும்
உழைத்திட விலையோ என்றாள்.
தீயினை முகத்திற் கொட்டிச்
சென்றனள் வேலைக் காரி.
ஆயஇச் செய்தி தன்னை
அணங்குதன் மணவா ளன்பால்
போயுரைத் திட்டாள், "பெண்ணே
புதல்வர்க்கும் கணவ னுக்கும்
நீயுழைக் கின்றாய். அன்னாள்
நிறைகூலிக்கே உழைத்தாள்!
ஒருத்திக்கும் ஒருவனுக்கும்
வாழ்க்கையின் உடன்பாடென்னும்
திருமணம் ஒழிய வேண்டும்.
தெரிந்தவர் கூடி அன்பு
புரிவதால் தோன்றும் மக்கள்
பொதுமக்கள் ஆதல் வேண்டும்.
அருந்துதல் உறைதல் எல்லாம்
பொதுவென அமைதல் வேண்டும்.
கட்டாய வேலை வேண்டும்
மட்டான அறிவு கொண்ட
வையகம் நான்குறித்த
தெட்டிலா அமைதி நோக்கிச்
செல்வதே! சென்ற பின்னர்
தட்டில்லை எவ்வேலைக்கும்
தடையொன்றும் இருக்காதென்றான்.
|
( 305 )
( 305 )
( 305 )
( 305 )
( 305 )
( 305 )
( 305 )
( 305 )
|
எடுப்பு
இராமல் ஓழிக மதப்பேய் என்றார்
இராமலிங்க அடிகள் (இராமல்)
உடனெடுப்பு
வராததென்ன இம்மதி அவரை
மதிக்கும் அடியார்க்கே (இராமல்)
அடி
ஒரே ஒருகடவுள் எவர்க்கும் என்றால்
உலக மதங்கள் ஏனோ
இரவு பகலாக மதமே பேசுவோன்
அதன்படி நடப்பானோ!
பெரியதோர் அன்பும் வாய்மையும் உடையோர்
பேரின்பம் எய்துதல் திண்ணம், (இராமல்)
|
( 310 )
( 315 )
|
மக்கள் நிகர் என்று மாநிலம் அதிர
எக்காளம் ஊதடா மறவா -- நீ
எக்காளம் ஊதடா ஊது!
பொய்க்கூற்று வஞ்சகம் ஏமாற்று யாவும்
புதைந்தன யார்க்கும் எதிலும் ஒரேநிலை (மக்கள் நிகர்)
கைக்குள் ஆட்சி வந்தாய் எண்ணிய
கானாறு சாதியாம் கீழ்நோக்கி ஓடினும்
மக்கட் பெருங்கடல் தனில்அது வீழும்
வாய்மைக்கு அழிவில்லை சாதிகள் இல்லை! (மக்கள் நிகர்)
|
( 320 )
( 325 )
|
அரசியல் வகையின் அயல்மொழிப் பெயர்கள்
|
சோசலிசம்
இரண்டு கறவைகள் உன்னிடம் இருந்தால்
அண்டைவீட்டானுக்கொன்று அளித்தல் சோசலிசம்!
காப்டலிசம்
கறவைகள் இரண்டில் கடிதொன்றை விற்றுக்
காளை வாங்குவது 'காப்ட லிசமா'ம்!
கம்யூனிசம்
ஆவிரண்டனையும் ஆள்வோர்க்கு விற்றுத்
தேவைக்குப் பால்பெறச் செப்பல் 'கம்யூனிசம்'!
பாசிகம்
பகரிரு கறவையைப் பறித்தஆள் வோரிடம்
தொகைதந்து பால்பெறச் சொல்வது "பாசிகம்'!
நாசிசம்
உரியவன் தன்னை ஒழித்தே
கறவை இரண்டையும் கைப்பற்றல் 'நாசிசம்'
நியூடிலிசம்
இரண்டு கறவையால் திரண்டபால் அனைத்தையும்
சாக்டைக்கு ஆக்குவது தான் 'நியூ டி லிசம்'
எதனை இவற்றில் ஏற்பாய்?
அதனைஉன் நாட்டுக்கு ஆக்குக தோழணே!
|
( 330 )
( 335 )
( 340 ) |
பிறவியில் என்னென்ன புதுமை -- மக்கட்
பிறவியில் என்னென்ன புதுமை?
நறுமலர் சூடிய மங்கைஒ ருத்தியும்
நானிலம் மெச்சிடும் செம்மல்ஒ ருத்தனும்
சிறிதன்பு செய்குவர் சேயிழை ஈவாள்
சிப்பிமுத்துக்கிணை பச்சைக் குழந்தையை (பிறவி...)
பால்குடிக்கும் சிரிக்கும் சிறு கால்கைகள்
பார்த்திட ஆட்டும் தலைநிலை நின்றிட
எலும்பின் னேதவ ழும்பிற குட்கார்ந்து
எழுந்து நடக்கும் குழந்தைப் பருவத்தில் (பிறவி...)
அஞ்சொல் பயின்றுநற் பாவை விரும்பிஆண்
டைந்தாகப் பள்ளிக் கலைந்துகலை கற்று
மிஞ்சுபத் தாறினில் மெல்லியைக் கூடிப்பின்
மெய்தளர்வாரிந்த வையக மீதினில். (பிறவி...)
|
( 345 )
( 350 )
|
பன்றியை வெட்டிப் படைத்தாயே -- கடைப்
படைச்சாராயங்கொடுத்தாயே!
தின்றுகு டித்துந லம்செய்யு மாவென்று
தெய்வத்தின் மேன்மைகெடுத்தாயே!
மின்திகழ் கோழிய றுத்தாயே -- கரு
மேதியின் வாழ்க்கைஒ றுத்தாயே!
கொன்றால் நலஞ்செய்யு மென்றெண்ணியே தெய்வக்
கொள்கையை முற்றும்வெ றுத்தாயே!
பெண்டாளக் கேட்டது தெய்வமென்றுன் -- தன்
பெண்டினைத் தந்தனன் மன்னனென்றும்
கண்டார் நகைக்கப்பு ராணங்கள் போற்றிக்
கசப்பாக்கி னாய்கட வுட்சிறப்பை!
அண்டும் குடல்தன்னைக் கவ்வவைத்தாய்
-- அதற்
கங்கா ளம்மைப்பட்டம் ஒவ்வவைத்தாய்;
தொண்டிது தெய்வத்துக்கென்றெண்ணியே -- அதன்
தூய்மையும் வாய்மையும் நீவுவித்தாய்!
குழந்தையைக் கேட்டது தெய்வமென்றாய் -- அதைக்
கொன்று சமைத்திட்ட தாய்ப்பு கன்றாய்
தழைந்த அருட்பெறும் தந்தையை இவ்வணம்
தாழ்வுப டுத்திம கிழ்ந்து நின்றாய்!
எவ்வுயிறும் கடவுட் கோயி லெனும்
எண்ணத்தை நீஒப்பு வாயாகில் -- ஓடிக்
கவ்வவரும் வெறி நாய்போலே சாதிக்
கட்டுக்கள் ஏன்வரும் உன்வாயில்?
அவ்வலர் எண்ணுக அன்பேசிவம் -- எனில்
அன்புக்குப் பெண்டாட்டி பிள்ளைமனம்
ஒவ்வாத செய்கைகள் உண்டாக்கியேதெய்வ
உண்மை மறுப்பதுவா உன்தவம்?
கொழுந்தனை யாளிடம் தூதாக -- உருக்
கொள்ளாப் பெரும்பொருள் சென்றதெனில்
ஒழிந்ததன் றோஉன்றன் உள்ளத்தி லேபொருள்
உண்டெனும் கொள்கைசொல் வாயாக!
|
(
355 )
( 360 )
( 365 )
( 370 )
( 375 )
( 380 )
( 385 ) |
சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு
எசமான் கொஞ்சம் இங்கே பாருங்க,
கடிக்கா துங்க காட்டுக் கொருங்கு
படிக்கத் தெரிஞ்சும் பயந்த கொருங்கு
நல்லநல்ல நாடகம் எசமான்
நாலனா குடுங்க நடத்றேன் எசமான்
(வீட்டுக்கார்ர் நாலனா கொடுக்கிறார்)
சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு
மொட்டே கொருங்கு கிட்டே எழுந்துவா
வெள்ளக் காரனே மெதுவா புடிச்சி
கொள்ளே அடிக்கிற கோலே வாங்கி
வடக்கத்தி ஆளுவ வந்து கூடி
ஒங்க ஊறே உறிஞ்ச வந்தா
எப்படி சலாம்நீ இடுவே அவன்கி
(குரங்கு சலாம் போடுகிறது)
ஓகோ பலே பா ஓகோ பலே பா
சடுகுடு சுடுகுடு சடுகுடு சுடுகுடு
வடக்கத்தி ஆளு வாங்கன ஊட்டே
ஒடனே ஒழிச்சி குடுக்கச் சொன்னதும்
சர்க்கார் சட்டம் தலைகவுந் தாப்லே
கரணம் போடு கழுதே கொருங்கு
(கரணம் அடிக்கிறது)
சடுகுடு பலே பா சடுகுடு பலே பா
கண்ணான எனத்தே காட்டிக் குடுத்து
ஐல்தி வடக்கன் பக்கம்
பல்டி அடிநீ
(பல்டி அடிக்கிறது)
|
( 390 )
( 395 )
( 400 )
( 405 )
( 410 )
|
மகனுக்கு வாய்ந்த மணியே, மயிலே
ஆகமொத்த அன்பின் அழகு மருமகளே
உன்அத்தான் உன்னை விரும்பத்தான் நாளும்
பொன்னைத்தான் ஆடையைத்தான் பூணத்தான்
வேண்டுமெனில்
வீட்டிற்றான் மெல்லிநீ மாமனைத்தான் மாமியைத்தான்
கேட்டுத்தான் செய்வதென எண்ணாதே, கிட்டத்தான்
பெட்டியெண்டு நீதிறந்து பெண்ணே எடுத்துக்கொள்
அட்டியுண்டோ? இல்லை! அனைத்தும் உனதுடைமை
நீயும்என் மைந்தனும் நெஞ்சால் உயிரால்ஒன்று
ஆயினீர் ஆதலால் அன்னோன் விருப்பம்
உனக்குத் தெரியும் உடனே முடிப்பாய்
எனக்கிட்ட வே்லையைநான் இன்பமெனச் செய்திடுவேன்
வானுார்த்தி உழைப்போ. அரசின் அலுவலோ,
வாணிகமோ, நல்ல மருத்துவமோ ஓவியமோ
மாணவர்க்குக் கண்ணளிக்கும் மாண்பு வினையோ
வேண்டுமெனில் வீட்டுச் சமையலுக்கு நானுள்ளேன்
ஈண்டுச் சமையல் இலக்கியம்உண் டாக்க"
விரும்புவை யாயின் அதுசெய்க; வெல்லக்
கரும்பேஉன் அத்தா னிடத்தில் கடுகளவு
தீய நடத்தை தெரிந்தால் திருந்தச்செய்
தூயவன்நீ நானுனக்குச் சொல்லல் மிகையாம்!
எனக்குமுன் மாமனுக்கும் என்னஇனி வேண்டும்?
உனக்குமுன் அத்தான் தனக்கும் உள்காதல்
ஆர்ப்பதும் இன்பத்தில் ஆடுவதும் பாடுவதும்
பார்ப்பதெம் வாழ்வின் பயன்!
|
( 415 )
( 420 )
( 425 )
( 430 )
( 435 )
|
மனுமுதலோர் முன்னாள் வகுத்தது அறமென்னில்
இனியதை மாற்றலும் அஃதே -- மனுதான்
பிறப்பினிலே தாழ்வுயர்வு பேசலறமாஅஃது
அறுப்பதறமா அறை!
அறை : கூறு.
ஒன்றுக்கு வாங்கியதை ஒன்பதுக்கு விற்பவன்
நன்றதனைச் செய்தான்சீர் நாடானேல் -- இன்றே
இமைதிறக்க ஒண்ணாது இடுக்கணுறும் மக்கள்
அமைதி அடைதல்எவ்வாறு.
நன்றதனைச்
செய்தான்; தொழிலாளி
கற்கண்டு பொன்னாக்கும் நல்லுழைப்புக் காரர்நலம்
கற்கண்டு போற்சுவைக்கக் கற்றவர் கற்றிலரே
பாடுதான் செல்லும் பணமோ அதுகுறிக்கும்
ஏடுதான் என்னம் இது.
கற்கண்டு பொன்னாக்குதல்;
கல்லைத் தேர்ந்
தெடுத்து அதை
உருக்கிப் பொன்னாக்கல்.
மணந்தான் இறந்தானேல் மற்றொரு சேய்க்கே
இணங்கும்பெண் எண்ணம் மறுக்கும் -- பிணங்காள்
நல்லறிஞர் மாமறவர் நல்குதலும் கூடுமவள்
வல்லகரு மாய்த்தலோ மாண்பு?
ஒருவன் ஒருத்தியுளம் ஒத்தல் மணமாம்
இருவரை முன்னின் றிணைத்தல் -- மணமென்று
கொட்டு முழங்குவது கோடேறி ஓர்முதியோன்
எட்டுகனி என்னப் படும்.
கோடேறி; கிளையில்
ஏறி
எட்டுகனி; எட்டுகின்ற
கனி
சங்கிலியை ஓர்பறையன் தன்பறையை வேளாளன்
தக்கவே ளாளனையே சார்பார்ப்பான் -- மிக்கஇழி
வாய்நடத்தல் போகாதேல் தாய்நாட்டின் ஆட்சியைஓர்
நாய்நடத்த நாடல்வியப் பன்று.
போகாதேல்: போகாவிட்டால்
மாதிடத்தில் அன்புபெற மாட்டான் மகள்தேடிச்
சோதிடத்தில் காட்டென்பான் தூய்மையிலான்--
சோதிடமாம்
பேரும் தமிழன்று பேறும் முயற்கொம்பே
ஆரும் அறிவிழக்கா தீர்.
மாதிடத்தில்
பெண்ணிடம்
பேறு ; பயன்.
| (
440 )
( 445 )
( 450 )
( 455 )
( 460 )
( 465 )
( 470 )
( 475 )
|
|
|
|