பாரதிதாசன்
பன்மணித்திரள்
உழவன் முதல்கேள்வி
|
விடியற்
காலை வேளை -- தனில்
விரிந்த தென்னம் பாளை
கடலிலெல்லாம் காட்டிலெல்லாம்
தூவிற்றுப் பொன் தூளை
கடிய நடந்து கொண்டு -- கையில்
காளை மாடி ரண்டு -- கூட்டிக்
கழனியிலே ஏரிற் பூட்டி
துவக்கினேண்டி தொண்டு
இப்போது மணி ஒன்று -- நான்
ஏரைக் கட்டி நின்று -- நல்ல
கொப்புக் காரி எதிர்பார்த்தேன்
நீ வருவாய் என்று
பப்பளி வண்ணச் சேலை -- இரு
காதில் இழைத்த
ஓலை
இப்படி அப்படிப் பளபளத்ததைக்
கண்டேன் எதிர் மூலை
கொண்டு வந்தாய் சோறு -- மீன்
குழம்பு மிளகின்சாறு -- நீ
அண்டை யில் வை நம் தெருவில்
நடந்த தென்ன கூறு
தண்டமிழர் ஆள -- நம்
தமிழ்நாடு மீள -- நல்ல
தொண்டு செய்தவ ரைச்சிறைக்குக்
கொண்டா போனார் நீள?
|
( 5 )
( 10 )
( 15 )
( 20 )
|
இராசாசி வயிற்றெரிச்சல்
உம் நாடகம் செல்லுமா நரியாரே?
|
சென்னை
விலங்கு மருத்துவம் செய்முறைக்
கல்லூரி யின்தமிழ்க் கழகந் தன்னைத்
தொடக்கம் செய்த இராசாசி சொன்னார்;
வெறுங்கூச்ச லிடுவதால் சாதிவேர் அறாது?
பெரியார் தாமும், பெரியார் கொள்கைக்
குரியார் தாமும், சாதிக் கொள்ளைநோய்
ஒழிக்கும் பணியில் ஓய்விலா துழைப்பது
வையம் அறியும்! மறுக்க ஒண்ணாது!
வெறுங்கூச்ச லிடுவதாய் இராசாசி விளம்பினால்
ஆரைப் பற்றி விளம்பிய தாகும்?
வெல்லும் பெரியார் வெறும்பேச்சுக் காரரா?
வீரத் தமிழர் வெறும்பேச்சுக் காரரா?
முன்னால் நீர்ஓர் முதல மைச்சராய்
இருந்தீர் இந்தியைக் கொண்டு வந்தீர்!
உமது வாலை ஒட்ட அறுத்தது
பெரியார் வெறும்பேச்சுத் தானா? பேசுக
அமைச்சுக் கட்டிலும் அரோகரா ஆனதே,
பெரியார் வெறும்பேச்சுக் காரரா? பேசுக;
சாதி கனவிலும் தலைகாட்டாமல்
காதிலும் சாதிக் கதைகே ளாமல்
ஒழிக்கப் படுவதை உணர எண்ணினால்
விழிக்குக் கறுப்புக் கண்ணாடி வேண்டாம்!
ஒருவர்மேல் ஒருவர் அன்புவைத் தால்தான்
ஒழியும் சாதி வெறுப்பால் ஒழியாது?
அடியோடு!மரத்தை அகற்ற எண்ணுவோன்
ஆணி வேர்மேல் அன்புவைப் பானோ!
வன்பு மிக்க சோறுவிற் பான்மேல்
அன்பு வைத்த பெரியார் அறிவுரை
என்னா யிற்று? நன்று கருதுக!
பார்ப்பான் என்ற பேயர்ப்பல கைதான்
போனதா புகலுக! இல்லையே! இல்லையே!
ஆயிரம் தமிழர், அன்புப் போரில்
புழவாய்த் துடித்தனர், போனதா பலகை?
எப்போது பலகை எடுக்கப் பட்டது?
தப்பேது மின்றி எண்ணுக சற்றே!
விரிவாய்ப் படித்ததாய் விளம்பி நிற்பீர்
பெரிய அலுவல் பார்த்ததாய்ப் பேசுவீர்
ஆண்டில் முதுமை அடைந்தேன் என்பீர்
?;மக்கள் நிகர்? எனும் மிக்க சிறி்ய
பாடமும் அறியாக்குள்ளநாடகம் செல்லுமோநரி யாரே?
|
( 25
)
( 30 )
( 35 )
( 40 )
( 45 )
( 50 )
( 55 )
( 60 )
( 65 ) |
வீட்டைப்
பூட்டிக் குடும்பத் தோடு
நாட்டை மீட்க இன்றே ஓடு!
காட்டியதாம் கைவரிசை தில்லி -- அதை
சீட்டுக் கிழிந்து போனதென்று சொல்லி (வீட்)
ஆட்டுவாராம் அடக்குவாராம்
அழிப்பாராம் ஒழிப்பாராம்
ஓட்டுவாராம் நம்மைஅவ் வடக்கர் -- மேலும்
தீட்டுவாராம் கத்தியை அவ்விடக்கர் (வீட்)
வெற்றி பெற்றால் மீள்வ தென்று
வீழ்ச்சி யுற்றால் சாவதென்று
நற்றமிழன் னைக்குறுதி கூறு! -- அட
நாம்தமிழர்! நாம்தமிழிர்! ஏறு (வீட்)
செந்தமிழைக் கொல்லச் சொல்லி
சீரகத்தை அழிக்கச் சொல்லி
இந்தியினைக் கற்கச் சொல்லி -- ஒரு
மந்தியாட்டம் ஆடியதாம் தில்லி (வீட்)
தாய்க்கரிசி இல்லை என்பார்
தமிழர்க்கெல்லாம் தொல்லை என்பார்
வாய்க்கரிசி போட்டுக்கொண்டு முந்து -- நல்ல
போர்ப்பரிசு நீபெற நினைந்து! (வீட்) |
( 70 )
( 75 )
( 80 )
( 85 ) |
தாய்மார், போருக்கு மக்களை அனுப்புக!
|
அருந்திய பால்முலை
ஆறுத் தெறிந்த தாய்
அறத்துணை பூண்ட
மறத் தமிழ் நாடு! (அருந்திய)
வரும்பகைக் களிற்றின் நெற்றியிற் புதைந்தவேல்
வாங்காது வந்ததன் தீங்கான மைந்தன் (அருந்திய)
தெரிந்திருக்கும் தமிழர்தம் வீரம்!
இடையி லேமறந் திருக்கவும் கூடும்;
சரிந்த பகைவர்கால் தமிழகம் தீண்டுமுன்
தாய்மார் மக்களை அனுப்புக தாக்கவே (அருந்திய)
இமய வட்டாரம் தாக்கிய சோழன்
இருந்த மலைத்தொடர் சோழமலைத்தொடர்!
தமிழன் தாக்கினை மறந்தாரைத் தாக்கத்
தாய்மார் மக்களைப் போருக்கு அனுப்புக (அருந்திய)
இமய வெற்பின் அண்டையிற் பெரிதாய்
இன்னும் உண்டதன் பேர்? சோழன் கணவாய்!
தமை மறந்து பகைவர் புகுந்தனர்
தாய்மார் மக்களைப் போருக்கு அனுப்புக (அருந்திய)
|
( 90 )
( 95 )
( 100 )
|
தமிழன் உணவே தமிழர்க்கு அமிழ்து!
அகவல்
|
சாப்பாட்டு
வோளையில் தஞ்சா வூரின்
நிலையம் சேர்ந்தது நெடும்புகை வண்டி!
திரு. வீர மணியின் திருமணம் வாழ்த்தித்
திருச்சியி னின்று திரும்பும் எனக்குப்
பெரும்பசி வயிற்றைப் பிசைவதா யிற்று!
நானோ,
பார்ப்பனன் தொட்டதைத் திரும்பியும் பாரேன்
தமிழன் உணவு தாங்கி வாரானா
என்று நினைந்துக் கிடக்கையில், எதிரில்
தமிழன், ஒருவன் தலைப்பெட் டியுடன்
சுவைநீர், இட்டலி, தூய, வடை எனும்
அமிழ்தைஎன் காதில் போட்டான்! அழைத்தேன்
அரையணா விழுக்காடு வடைகள் ஆறும்,
அவ்விழுக் காடே அன்பின் இட்டளி
மூன்றும், பருப்புக் குழம்பில் முழுகத்
தாயென இட்டான்; சேயென உண்டேன்.
சுவைநீர் சுடச்சுடத் தந்தான் பருகினேன்.
இத்தனைக்கும் ஆறணா என்றான்!
அத்தனை யுண்டேன் தந்ததோ ஆறணா!
தஞ்சை வண்டிச் சரகில்ஓர் தமிழன்
மலிவு விலையில் உண்டி வழங்கினான்
என்பதில் வியப்பே இல்லை. ஆனால்,
இத்தனை சுவையினை எங்கும்நான் காண்கிலேன்,
உண்டி விற்கும் உண்மைத் தமிழரே
அண்டிய தமிழர், அமிழ்தமிழ் தமிழ்தெனச்
செப்பும் வண்ணம் செய்திறம் பெறுக!
உண்டி கொள்ளும் உண்மைத் தமிழரே,
தமிழன் உணவே தமிழர்க்கு அமிழ்து!
தமிழர் தமிழனை ஆத ரிக்க!
தஞ்சைத் தமிழன் செய்தது போல
இனிதே யாயினும், எட்டியே ஆயினும்,
வாழ்வ தாயினும் சாவ தாயினும்
தமிழன் ஆக்கிய துண்க
தமிழகம் தன்னுரி மைபெறற் பொருட்டே |
( 105 )
( 110 )
( 115 )
( 120 )
( 125 )
( 130 )
( 135 )
|
தில்லிக்கு எச்சரிக்கை
வானொலியை ஆக்கு! ஆகஷ்வாணியை நீக்கு!
|
வானொலியாம்
தமிழ்நீக்கி ஆகாஷ் வாணி
வடசொல்லை அங்குவைத்தார்! தமிழர் நாட்டில்
தேனொலியாம் தமிழ்இருக்க வடக்கு நஞ்சைச்
செந்தமிழர் காதினிலே ஊற்றி னீரே
ஏனையா எனக்கேட்டார் விசுவ நாதர்
இதுதானே சரிஎன்றார் ஆள வந்தார்
பூனை அல்ல தமிழ்நாடு நெஞ்சம் அஞ்சாப்
புலி என்று காட்டுமட்டும் அவர்திருந்தார்.
இளவழகன் தமிழ்நாட்டான்; ஆகாஷ் வாணி
எனும்இழிவு தொலையுமட்டும் உண்ணேன் என்றான்;
உளஅழகை வெளிக்காட்டிச் சூளு ரைத்தே
உயர்திருச்சி வானொலியின் நிலையத் தின்முன்
எளிதாக நாட்டாரை எழுப்பி விட்டே
ஏதுமிலாத் தனியாள்போல் உட்கார்ந் துள்ளான்
இளவழகன் எண்ணமே தமிழர் எண்ணம்!
எச்சரிக்கை செய்கின்றேன் தில்லியார்க்கே. |
( 140 )
( 145 )
( 150 )
|
சோறு வேண்டும்
துணிவேண்டும் -- நல்ல
கூறை வேண்டும்வே றென்ன வேண்டும்?
(சோறு)
ஆறுசெல்ல ஊர்தி வேண்டு மெனில்
அதுபெற்ற பின்பும் ஆசையா தூண்டும்?
(சோறு)
ஈறு வேண்டும்உன் ஆசைக்கு! மேன்மேல்
ஏற்றம் வேண்டினால் புகழ்தேட வேண்டும்
நாறுவேண்டும் மலருக்கு! நீ தமிழ்
நாட்டுக்கு நாளும் உழைத்திட வேண்டும் (சோறு)
புகழாசை கொள்ளுக; பொருளாசை தள்ளுக!
புகழொன்றே நிலைஎன்ற தேவர்சொல் எண்ணுக!
இகழ்வரும் மிகுபொருள் தேடுங்கால்! தமிழ்மீட்பில்
என்ன நேர்ந்தாலும் அவைஎலாம் இன்பமே
(சோறு)
அழகிய இயங்கியில் நீ செல்லுகின்றாய்;
அடிமை என்றுனைப் பிறன் சொல்லுகின்றான்!
பழுது போக்கித் தமிழகம் மீட்பையேல்
பார்ப்பான் நல்லதோர் தமிழனைப் பார்ப்பான்
(சோறு)
தமிழன் உயர்ந்தவன் என்றுசொல் கின்றாய்;
தமிழன் வீரன் என்றுசொல் கின்றாய்;
தமிழன் அடிமை எனும்பழி போக்குங்கால்
தமிழா உன்புகஒ நிலையாக்கு கின்றாய்! (சோறு)
|
( 155 )
( 160 )
( 165 )
( 170 )
( 175 )
|
அழகிய
நிகழ்ச்சி ஒன்றை
அன்புள்ள சர்மா சொல்லி
எழுதுக செய்யு ளாக
என்றனர் எழுத லானேன்
எழுதும்இக் கருத்தை நாட்டில்
எல்லோரும் பின்பற் றத்தான்
எழுதினேன் என்ப தில்லை;
புதுமைகண்டு இன்பங் கொள்க!
புகைவண்டி தனிலோர் அச்சுப்
பொற்பாவை அமர்ந்தி ருந்தாள்!
தகும்ஒரு செம்மல் தானும்
அவளெதிர் அமர்ந்தி ருந்தான்!
மிகப்பலர் இருந்தார்; பின்னர்
வகுப்பைவிட்டி றங்கி விட்டார்
திகழ்பவர் இருவர்; வாயைத்
திறவாத ஊமையர்கள்!
அவள்பார்ப்பாள் அவன் முகத்தை
அவன்பார்ப்பான் அவள் முகத்தை!
அவள்பார்ப்பாள் அவன் முகத்தில்
அல்லலை! அவள் முகத்தில்
அவன்பார்ப்பான் அல்ல லைத்தான்!
காரணம் அறிவ தற்கோ
அவனுந்தான் ஆவ லுற்றான்
அவளுந்தான் ஆவலுற்றாள்!
துடியாத தோகை யாளின்
துடியிடை துடித்தல் கண்டான்
அடிவயிற் றின்மேல் கையை
அணைப்பானை அவளும் கண்டாள்!
நாடிதோறும் மங்கை துன்பம்
நூறுபங் காதல் கண்டான்
வடிகின்ற கண்ணீர் கண்டாள்
வல்லாளன் முகத்தில் மங்கை!
அவள்படும் துன்பத் திற்குக்
காரணம் கேட்டா னில்லை!
அவன்எதற் கல்லல் உற்றான்
அதைஅவள் கேட்டா ளில்லை.
அவளும்தன் தொல்லை பற்றி
அறிவிக்க வில்லை, அன்னோன்
நவிலவே இல்லை தன்னை
நலித்திடும் நலிவு பற்றி
ஆயிரம் தேள்க டுப்பை
அடக்கிக்கொண் டிருந்தார் அந்த
ஆயிழை யாளும் நல்ல
அழகனும் யார்பொ றுப்பார்?
தீயினில் புழுக்க ளானார் செந்தமி ழன்னைக் குள்ள
தூய்மைகா ணாரைக் கண்டு
துடிப்பார்போல் துடிதுடித்தார்!
கைம்மலர் மார்பு தாங்கக்
கண்மலர் அருவி பாய்ச்ச
விம்மினாள் வாய்அ விழ்ந்து
வீழ்ந்தன துன்பச் சொற்கள்
?வெம்முலை பால்கட் டிற்றே?
மெல்லிஇவ் வாறு சொல்லச்
செம்மலும் பசித்தீ என்றான்
திகைத்தன இரண்டு நெஞ்சம்!
உணர்வெனும் உலகு சேர்ந்தார்
ஒருநொடிப் போதில்! கீழ்மைக்
குணம்வெந்து மடியக் கண்டார்
கொடுங்கச்சு முடிய விழ்த்தாள்
இணைமுலைக் கண்ணைக் கௌவி
இம்மென்று பால்கு டித்தான்
தணிந்தனன் கடும்ப சித்தீ
தணிந்தனள் பால்கடுப்பே!
பறந்தது புகைச்சாக் காடு
நின்றது பக்கத்தூரில்!
மறந்திடேன்! நன்றி! சென்று
வருகின்றேன் என்றான்! என்றாள்
பிறந்தவர் வாழும் வாழ்வு
பிறர்நன்றி யின்தொ குப்பே!
மறவாத தூய உள்ளம்
இறவாத வாழ்வு நல்கும்.
|
( 180 )
( 185 )
( 190 )
( 195 )
( 200 )
( 205 )
( 210 )
( 215 )
( 220 )
( 225 )
( 230 )
( 235 )
( 240 )
( 245 )
|
கண்காக்கும்
இமைபோல என்னைக்
காத்தவள் அன்றோ எனைஈன்ற அன்னை!
எண்ணும் எண்ணங்கள் இழைக்கும் செயலெலாம்
எனக்கே ஆக்கி ஈஎறும் பணுகாமல்
(கண்காக்கும்)
பொன்னல்ல அவளாசை பூணல்ல அவளாசை
புத்துருக்கு நெய்ஒழுகும் உணவல்ல அவளாசை
என்நல்ல வாழ்வை அவள்காணும் இன்பம்
எப்போதெப்போ தென்ப தவள்ஒரே ஆசை
(கண்காக்கும்)
அன்பு மணாளன் காதலைக் தள்ளி
ஐந்தாண்டு வரைஎனை அமிழ்தாய் அள்ளிப்
பொன்முலை யூட்டிச் செந்தமிழ்ப் பள்ளி
புகுத்தும் வரைக்கும்என் மேல்ஒரே புள்ளி
(கண்காக்கும்)
வாழ்ந்தாள் என்றால் தனக்கென்றா வாழ்ந்தாள்?
வருந்தினாள் என்றாள் தனக்கென்றா வருந்தினாள்?
தாழ்ந்தாள் மேனி! தனக்கென்றா தாழ்ந்தாள்?
தன்னுடல் பொருள் ஆவி எனக்கன்றோ ஈந்தாள்?
(கண்காக்கும்)
உரையினை ஈன்றவள் செந்தமிழ் அன்னை
உறைவிடம் ஈன்றவள் தமிழக அன்னை
கருவிலே இவையெல்லாம் அடையவே முன்னைக்
கனிவயி றேந்தினாள் அவளேமுதல் அன்னை
(கண்காக்கும்)
|
( 250
)
( 255 )
( 260 )
( 265 )
( 270 )
|
என்,
வாழ்க்கைப்பயிர் செழிக்கவந்த
வான்மழை அவளே -- இன்பத்
தேன்மழை அவளே
கீழ்க்கடல்மேல் கதிர்வருமுன் விழிமலர்ந்திடுவாள்
தொழு தெழுந் திடுவாள்
(என்)
இல்வாழ்க்கைக் கேற்றகுணம்
செயல்கள் உடையவள்
செல்வவரு வாய்க்குத்தக்க
செலவு செய்பவள்
நல்லார்வணங்கும் கற்பைஉயி ரென்றுநினைப்பாள்
எல்லாம்பெற் றேனிவளை நான்மணந்ததனால்
தன்னையும் தான்மணந்த
துணைவன் தன்னையும்
தன்னினத்துத் தமிழ்ப்பெருங்குடி
தனிப் பெருமையையும்
எந்நாளும்காப்பதிலே இம்மியும் தவறாள்
பொன்னேட்டிற் புகழ்எழுதும் நன்னயமுடையாள். |
( 275 )
( 280 )
( 285 )
( 290 ) |
செந்தமிழர்
கான்றுமிழ்ந்த தீச்சரக்கு
வினாவிடை
வெண்பா
ஆனபல் லாயிரம் ஆண்டறிந்த தென்னாட்டில்
பானை முகம்புகுந்த தெவ்வாறு? -- மானே,
அடக்கமிலா ஆரியரால் ஆறாம் நூற்றாண்டில்
வடக்கினின்று வந்தசரக்கு;
திருவாத வூரார் திருவாசகத்தில்
ஒருபானை மூஞ்சிதான் உண்டா? கருங்குயிலே
கூனாம் கொடும்பல்லன் வத்திடுமுன் வந்ததே
தேனாம் திருவாசகம்.
கூனாம்
கொடும்பல்லன் -- யானை
முகன்.
கலையுண்ட முன்னைக் கழகத்தார். யானைத்
தலைகண்ட துண்டா தமிழில்? -- கொலைவழியே
அன்னை குளித்தால் அழுக்கெடுத்துப் பிள்ளை செய்தாள்
இன்னவெலாம் அந்நாளில் ஏது?
(கழகம்
-- தமிழ்ச் சங்கம். சங்க நூல்களின்
பிள்ளையார்
பேச்சே இல்லை
என்றபடி.)
பாவில்வரு நஞ்செனவே யானைமுகன் பைந்தமழ்
நூலில் நுழைந்தவகை எவ்வாறு? -- வாலிழையே
பல்லவர் புத்தர் படைஎடுத்தார், செந்தமிழில்
வல்லவர் வாயடைத் தார். |
( 295 )
-
( 300 )
( 305 )
( 310 )
|
வால்இழை -- தூய அணி அணிந்தவள்
|
அடுத்துக்
கெடுத்தார்கள் அந்தமிழை என்றால்
எடுத்துக்காட் டேதேனும் உண்டோ? -- வடுக்கண்ணாய்.
மூவா யிரம்சொன்னான் மூலன்என்றார் சேக்கிழார்
பாஏது மேல்நாற்பா னேழ்?
(திருமூலர், 3000 பாடல்களே சொன்னதாகச்
சேக்கிழார் சொல்ல அதற்கு
மேல் 47 செய்யுட்கள் எங்கிருந்து
வந்தன என்றபடி.)
நாற்பத்தேழ் செய்யுளையும் நல்லதிரு மந்திரத்தில்
ஏற்பத் திணித்தார் எதைஎண்ணி? -- வேற்கண்ணாய்.
''ஐந்து கரத்தினை'' ஆனதொரு செய்யுள்செய்து
முந்தவைத்தார் மூலன்நூ லில்.
(திருமூலர் திருமந்திரந்தில் ''ஐந்து
கரத்தனை'' என்று யானைமுகன்
பாட்டைச் செய்து முதலில் செருகிகினார்
என்றபடி.)
தூயதிரு மூலனார் சொன்னதொடக் கச்செய்யுள்
ஆய அதுதான் எதுபுகல்க? -- நேரினழயே
''ஒன்றவன் தானே'' எனல் என்று சேக்கிழார்
நன்று நவின்றாரன் றோ?
(திருமந் திரத்தின் முதற் செய்யுளாக
''ஒன்றவன் தானே'' என்று தொடங்கும்
முழுமுதற் கடவுள்பற்றிய செய்யுளையே
சொல்லி வைத்தார் என்க.)
ஆத்திகர் என்ற அறிவிலிகள் இவ்வாறு
நாத்திகம் யாதுக்கு நாடினார்? -- ஏத்தழகே
செல்லாத யானைமுகன் செல்லுபடி ஆக்கஇந்தப்
பொல்லாங்கு சூழ்ந்தார் புகுந்து,
வந்த சிறுசரக்கு வாங்குநர்இ லாச்சரக்குச்
செந்தமிழர் கான்றுமிழ்ந்த தீச்சரக்கு -- முந்தவிடும்
பானைவயிற் றுச்சரக்குப் பல்நீண்ட கைச்சரக்கு
யானைமுகன் என்னும் சரக்கு. |
( 315 )
( 320 )
( 325 )
( 330 )
( 335 )
( 340 )
|
மாலை ஏழு
மணிக்கு வெள்ளையன்
வேலை யாக வெளியிற் சென்றவன்
மிதிபறக்க மிதி வண்டி பறக்க
அதிவி ரைவாய் வீட்டை அடைந்து
கிள்ளையே கிள்ளையே கேள்செய்தி என்று
துள்ளிய வண்ணம் சொல்ல லானான்
அழகரும் அம்மையும் மூன்று மக்களும்
காற்றுக் குக்கடற் கரையில் இருந்தனர்
ஏழரை மணிக்கெலாம் புகைவண்டி ஏறி
ஊருக்குப் போவதாய் உரைத்தனர் அவர்கள்
இங்குண வுண்பதாய் ஏற்றுக் கொண்டனர்
எங்கே எழுந்திரு! சரியாய் இடையில்
அரைமணி தானுண்டு -- அதற்குள் சமையல்
முடிய வேண்டும் இந்தா மூன்றுகுடம்
தண்ணீர், குண்டான், தட்டு முட்டுகள்
என்றே எதிரில் வைத்தான்! கிள்ளை
சின்னபடி ஒன்றரை கழுவிச் சேர்த்தே
வெள்ளையன் மூட்டிய அடுப்பின் மேல்உள
பானையில் இட்டு, வற்றற் பானையும்
எண்ணெயும் புளியும் உப்பும் இட்டு
சட்டியும் வட்டிலும் தான் தொட்டிருக்கையில்
மிளகாய்த் தூள்மேல் வெள்ளையன் ஓட்டிய
குழவி குருகுரு வென்றது! குழம்பு
சோற்றை இறக்கிய அடுப்புமேல் சொளசொள
என்றே வற்றல் நன்று மணக்கக்
கொதித்தது! கிள்ளைகை கொத்த வரையையும்,
வெள்ளை யன்கை வெண்டைக் காயையும்,
ஆய்ந்தன குழம்பை அங்ஙனே இறக்கிப்
பொன்னெனக் கொத்தவரைப் பொரியல் இறக்குமுன்
வெள்ளையன் வாழை இலையினை வெடுக்கென
அறுத்துத் திருத்திக் கழுவிஅப் படியே
கூடம் பெருக்கிக் கூடப் பாய்இட்டு
நீடுசால் நிறைய நீர்நி றைத்துச்
செம்பும், துடைக்கத் துணியும் வைத்துத்
தன்னனா தான தான தானனா
என்று பாடிக் கொண்டே ''என்ன''
என்று கூவினான் ''எல்லாம் ஆயிற்று''
என்று மறுமொழி எழுப்பினாள் கிள்ளை
மணிப்பொறி டிங்கென ஏழரை வகுத்தது
நடுக்கட் டினிலே நாற்கா லிகளும்
விரிப்புப் பெட்டிமேல் வெற்றிலைத் தட்டும்
அழகின் சிரிப்பென அமைத்து முடித்து
வெள்ளையன் கைகூப்பி வேண்டக் கிள்ளைவாய்
மலர்தூய் வருக வருக என்ன
அழகர் வந்தார் அம்மை வந்தாள்
மழலை பேசி மக்கள் வந்தனர்
இருக்கை காட்ட இருந்தனர், உங்கள்
சிரிக்கும் சிறுவர் எங்கென்று கேட்க
வீட்டுப் பாடம் விரும்பி அங்கொரு
வீட்டுக் கேகினர் என்றது கேட்டுக்
கைய லம்பத் திரும்பினர் கண்டனர்
இருகையில் தண்ணீர் ஏந்தி நிற்கும்
தமிழ்ச்செல் வத்தைப் பாண்டியப் பையனை!
வாழ்த்தினர் வியந்தனர் செம்புநீர் வாங்கி கைகால் முகம்கழீஇக் கடிதிற் சென்றே
எட்டுமணி கிட்டிற் றெனஉட் கார்ந்தனர்
ஐவர்க்கு நால்வர் அருந்தொண் டாற்ற
விருந்துண்டு வெற்றிலை கைக்கொண்டு தெருவில்
வந்தனர், மாட்டு வண்டி வந்தது
வணக்கம் வாழ்த்து நன்றி வழங்கச்
சலசலச் சலங்கை மாடுகள் சரேலென
விரைந்தன. வெள்ளையன் உடன்வி ரைந்தான்
புகைச்சல் வண்டி போனதோ கிடைத்ததோ
என்று கிள்ளை வீட்டுக் கேகினள்.
இரண்டு கடிகை ஏகின! அந்தப்
புகைவண் டியது 'பூ'வென் றூதிற்று
வெள்ளையன் கிள்ளையே என்றழைத் தபடி
வண்டி கிடைத்ததே வண்டி கிடைத்ததே
அரைமணி அளவில் சோறுகறி ஆக்கிய
உன்றன் திறமை உவமை யிலாதது
என்றான் வெள்ளையன்; கிள்ளை இசைப்பாள்
ஆடவர் உலகே ஆடவர் உலகே
எனக்கென் துணைவர் போலநின்
மனைமார்க்கு நீதுணை புரிந்து வாழ்கவே |
( 345 )
( 350 )
( 355 )
( 360 )
( 365 )
( 370 )
( 375 )
( 380 )
( 385 )
( 390 )
( 395 )
( 400 )
( 405 )
( 410 )
( 415 )
|
திருவரங்கப்பெருமாள் செத்த பத்து!
|
திருவரங்கத்
தார்தீய்ந்தார் அன்னார் மனைமார்,
இருவரங்குத் தீய்ந்தார்கள் இந்தப் -- பெருநாள்
ஓர்விளம்பிப் பங்குனியின் ஒன்பதாம் நாள்! இதுபார்ப்
பார்விளைத்த தன்றிவே றார்.
மேம்பட் டுலகளந்தார் வேகையிலே தாம்கிடந்த
பாம்புப் படுக்கையும் வெந்ததுவாம் -- சாம்பலாய்ப்
பூண்ட மணியெல்லாம் போனதுவாம்! பொன்னெல்லாம்
நீண்டோடிற் றாம்உருகி நேர்.
கருவறையில் உற்றதீக் காட்டை அவிக்கப்
பெருமாளால் ஆமோ? பெருமாள் -- திருவடியால்
ஊர்ப்பானை எல்லாம் உருட்டி உயிர்வாழும்
பார்ப்பாரால் ஆமோ? பகர்.
மலரவனை யும்சிவனை யும்படைத்த மாயன்
சிலர்வைத்த தீயணைத்த லின்றிக் -- கலகலென
அத்தீயில் வேகையிலே ஆன திருச்சியினோர்
அத்தீ அணைக்கவந் தார்.
வருவதற்குள் மண்ணுண்டான் தீயுண்டான் மற்றும்
கருவறையில் எல்லாம் கரியாய்க் -- கரிந்தனவாம்
நெட்டைக் கருங்கல்லே நீறாகும் போதுவண்ணப்
பட்டாடை என்ன படாது!
கரிய பெருமாள் அடியார் முகத்தில்
கரியைத் தடவிக் கரியாய்க் -- கரிந்தானாம்
தானிருந்தும் பார்ப்பனரைத் தாங்கினான் தான்செத்தும்
தானம் தரும்படிவைத் தான்.
கருங்கல் எரிந்ததென்று கண்ணீர் சொரிந்தார்
திருந்தா மடையர்! சிரித்தே -- இருந்தார்கள்
பார்ப்பார்! திருமால் படிவம் புதுக்கையிலே
ஊர்ப்பணத்தை உண்ணலாம் என்று.
ஆயிரம் ஆண்டாய்ப்பல் லாயிரம் கோடிஎன்று
தீயாப் பணம்பறித்தான் தீயானான்! -- தாய்நாடே
செல்வத் திருக்கோயில், நீபெற்ற மாணவரின்
கல்வித் திருக்கோயி லாக்கு.
நடமாடக் கோயில்ஆம் நம்பர்க்கொன் றீயில்
படமாடக் கோயிற் பரமர்க் -- குடன் ஆகும்!
என்றார் திருமூலர்! நெய்வடையை ஈந்தாரே
தின்றாரா கல்லார் சிறிது?
ஆளவந்தீர் மக்கட் கறிவைப் பெருக்காமல்
மாளுகின்றீர் மாளுங்கள்! மாளுங்கள்!! -- நாளும்
உருவணக்கத் தாலே திருவழியும்! உள்ளப்
பெருவணக்கத் தால்பெருகும் பேறு! |
( 420 )
( 425 )
( 430 )
( 435 )
( 440 )
( 445 )
( 450 )
( 455 )
|
தமிழர்க்கு வாழ்க்கைச்சுவை ஏது?
|
உணவு விடுதி
ஒன்றில்ஓர் அறையில்
இருவர் தங்கினர். ஒருவன் தமிழன்
மற்றவன் பிரன்சு நாட்டு வாணிகன்!
கமழ்புனல் ஆடி அமிழ்துண வுண்டு
தூயுடை உடுத்துச் சாய்வுநாற் காலியிற்
சாய்ந்த தமிழன், தன்னெதிர் நடப்பதைப்
பாடிக் கொண்டே பார்த்தி ருந்தான்!
அறை வெள்ளிக்குக் காற்கோப்பை யுணவு
கேட்டு, வாங்கி உண்டு, கிழிந்த
உடையுடன் பிரான்சினன் எதிரில் உள்ள
சாய்வு நாற்காலியிற் சாயத் தொடங்கினான்.
தமிழன் அவனை நோக்கிச் சாற்றினான்:-
''சுவையிலா உணவையும் தூய்ப்பது, பிரான்சில்
உள்ளவ ரிடத்திலும் உண்டோ நண்பரே.''
தமிழனை நோக்கிப் பிரான்சினன் சாற்றினான்:-
''உயர்சுவை உணவை உண்பதென்பது
தமிழகத் தமிழரிடத்திலும் உண்டோ?'
பின்னும் பிரான்சினன் பேசு கின்றனன்:-
எரிச்சல் உறுவதேன் இன்தமிழ் நண்பரே
பிறந்தஉம் நாட்டைப் பிறன்ஆள்கின்றான்;
வாழ்க்கையில் சுவையும் வாய்ப்பதுண்டோ! ?
வாழ்க்கைச் சுவையிலான் வாய்ச்சுவை யுடையனோ!
இன்றுநீர் உண்டதில் என்சுவை கண்டீர்?
கமழ்புனல் ஆடினீர்; அமிழ்துண வுண்டீர்
நீர்ஓர் அடிமை என்பதை நினைந்திரோ ?
என்று தமிழனை எண்ணத்தில் ஆழ்த்தினான்
கமழ்புனல் கழிபுனல், ஆனது தமிழற்கே.
அமிழ்துண வோக்காளம் அடைந்தான்
உமிழ்ந்தது தமிழனை அறிவுலகு கான்றே! |
( 460 )
( 465 )
-
( 470 )
( 475 )
( 480 )
( 485 ) |
விடுதலை
வாழ்வே வாவா -- எம்
வெற்றிப் பயனே வாவா
கெடுதலை மாய்த்தாய் வாவா -- ஒரு
கீழ்மை தொலைத்தாய் வாவா
தடதட வென்றே சாதி -- எனும்
தடையை இடித்தாய் வாவா
அடிமை தவிர்த்தாய் வாவா -- நல்
அன்பில் உயர்ந்தாய் வாவா
வாழ்வின் பயனே வாவா -- தமிழ்
மக்கள் விருப்பே வாவா
தாழ்வு தவிர்த்தாய் வாவா -- எம்
தமிழின் காப்பே வாவா
ஏழ்மை துடைத்தாய் வாவா -- நல்
இன்பக் கடலே வாவா
ஆழப் புதைத்தாய் மடமை -- நல்
அறிவில் உயர்ந்தாய் வாவா
ஒருமொழி யால்ஓர் இனமாம் -- அவ்
வோரின மேஒரு நாடாம்
ஒருநா டின்னொரு நாட்டைப் -- போய்
ஒடுக்குதல் ஒப்பாய் வாவா
ஒருவன் வாழ ஒருவன்
உழைக்க வேண்டும் என்னும்
இருளைப் பிளப்பாய் வாவா -- இங்
கெவர்க்கும் ஒளியே வாவா
ஊணும் உடையும் வீடும் -- நல்
உயிரின் நலமொடு கல்வி
பேணும் வகையில் யாண்டும் -- காணில்
பெரியவர் சிறியவர் இல்லை
ஆணுரி மைப்பெண் ணுரிமை -- நல்
அறத்தின் காப்பே வாவா
வாணாள் இடையில் தமிழர் -- பெற்ற
மாசு துடைத்தாய் வாவா
உரிமை வாழ்வே வாவா -- எம்
ஒற்றுமை விளைவே வாவா
பெரிது முயன்றார் தமிழர் -- அவர்
பெற்ற்தோர் பேறே வாவா
அறிது புரிந்தார் தமிழர் -- அவர்
ஆர்ந்த புகழே வாவா
வரைகடல் உலகு தமிழும் -- வானும்
வாழ்நாள் வாழ்வாய் வாவா. |
( 490 )
( 495 )
( 500 )
( 505 )
( 510 )
( 515 )
( 520 )
( 525 )
|
மீனாட்சி
எனும்பெயரை மாற்றிக் கொண்டாள்
கயற்கண்ணி எனும் பெயரை மேவலானாள்
என்என்றார் உறவினர்கள். தமிழாற் கொண்ட
என்விழியை என் அன்பர் இனிதாய் உண்பார்!
ஆனதனால் என்றுரைத்தாள்! தீர்த்தம் என்னும்
அதைவிட்டு நீர் என்றாய் ஏனோ என்றார்
தேனாகப் பருகுவர் என் இதழ்நீ ரைத்தான்.
திர்த்தமெனில் அணுகாரே என்று சொன்னாள்.
கயற்கண்ணி தமிழ்மகளாய்க் காட்சி தந்தாள்.
கருப்பனுக்கு! விருப்பமெலாம் அவள்தான் என்றான்.
அயலெவரும் அறியாமே ஒருநாட் காலை
ஐந்துமணிப் புகைவண்டி ஏற லானார்
வெயிலப்பன் இதுகண்டான். கருப்பா இஃது
மேன்மையோ எனக்கேட்டான். கரும்பன் சொல்வான்;
இயல்பாக நான்பெற்ற எதிர்கா லத்தின்
இன்பெனும்நாட் குறிப்பவளின் முகக்கண்ணாடி!
வண்டியும்போய் அயல் நிலையம் நின்ற போது
மங்கையுடன் கருப்பன்தான் இருந்த பெட்டி
கண்டதிலே இருமாதர் ஏறி னார்கள்;
கைப்பிள்ளை புனற்செம்பு துணிமு டிப்புக்
கொண்டொருத்தி குந்தஇடம் பார்த்து நின்றாள்
கொழுமட்டைத் தலைஒருத்தி அவள்பின் நின்றாள்
திண்டாட்டம் நீககிகடுவாய் கயற்கண் ணாளே
சிறுகுழந்தை யொடுதாய்பார் என்றான் அன்பன்
அன்னையும் பிள்ளையும் கைவிலக்கி
அடுத்துநின்ற மொட்டையினை ''இருங்கோ'' என்றே
தன்னிடத்திற் சரிபாதி ஒதுக்கித் தந்தான்
தமிழினத்தின் மேல்வெறுப்பை ஒதுக்கா மங்கை!
இன்னலுற்றான் அன்னைக்கும் பிள்ளைக் குந்தன்
இருப்பிடத்தைத் தந்துதான் எழுந்து நின்றான்!
சென்னைபோய்ச் சேர்ந்ததுவாம் புகைச்சல்வண்டி
சேரவில்லை அவ்விரண்டு கசப்புள்ளங்கள்
நல்லுணவு விடுதிஒன்றில் தங்கி னார்கள்
நாள்போகும்; கிழமை போம்; திங்கள் செல்லும்
அல்லல்மட்டும் அணுவளவும் நீங்க வில்லை
அவளுக்கும் அவனுக்கும்! ஒருநாள் அங்கே
நல்லதொரு வெயிலப்பன் வந்து சேர்ந்தான்;
''நலந்தானா?'' எனக்கேட்டான் கருப்பன் சொன்னான்
தொல்லையண்ணே! நான்பெற்ற எதிர்கா லத்தின்
துன்பெனும்நாட் குறிப்பவளின் முகக்கண் ணாடி! --
மெல்லிஅவள் படக்கூத்த னொடுதொ லைந்தாள்
மீட்சிபெற்றேன் எனக்கருப்பன் வீடு சேர்ந்தான். |
( 530 )
( 535 )
( 540 )
( 545 )
( 550 )
( 555 )
( 560 )
( 565 )
|
|
|
|