பக்கம் எண் :

பாரதிதாசன் பன்மணித்திரள்

திருநிறை செல்வர்

பத்ம திலகம் -- வேலாயுதனார்

திருமண வாழ்த்து

வாழ்கநீ செல்லி பத்ம திலகமே வாழ்க! வாழ்க!
ஆழ்கடற் புவியில் வாழ்வின் அறம்வகுத் தவ்வ றத்தைத்
தாழ்லிலா தியற்று தற்குத் திருமணம் தக்க தென்றார்
சூழ்மண மன்றில் நீயும் தூயனும் துலங்கக் கண்டேன்!

மங்கல இசை ததும்ப மலர்மணம் ததும்ப பன்னீர்த்
திங்கள்வெண் கலசந் தன்னிற் சில்லென்று குளிர் ததும்பத்
தங்குறா திரண்டுள் ளத்திற் றதும்பிட அன்பு வெள்ளம்
மங்கையுன் எழில் ததும்பத் ததும்பிற்றுன் மணாளன் ஆசை

மறைவிலா தெவர்க்கும் நன்மை வாய்ந்திடப் பொதுத்தொண்டாற்றும்
துறைவலார் செல்வ னாருன் தந்தையார் தூய செல்வத்
திறையனார் வேலா யுதனார் மணாளர், உன் இன்ப வாழ்விற்
குறைவிலாக் குறையே யன்றிக் குதூகலம் உனக்கே பத்ம

தனிப்பெரும் கடல்!த மிழ்ச்சேய்! சொக்கலிங் கனார்த வத்தால்
சனப்பெருங் கடலிற் றோன்றும் சந்திரன்! குணத்தின் குன்று!
இனப்பெருங் கடலின் வேலா யுதனெனும் அமுத ஊற்றை
மனப்பெருங் கடல ளாவ இன்பத்தில் வதிக பத்மா!

வில்லாண்மைத் தமிழர்க் கின்ப விடுதலை மறிக்கும் பேதப்
புல்லாண்மைச் சுய நலத்தார் புலன்மாற்றி இனங்காக் கின்ற
நல்லாண்மை மக்கள் பெற்று நற்பேரர் பேரர் கண்டு
பல்லாண்டு மணாள னோடு பாரில்நீடுழி வாழி!





( 5 )





( 10 )





( 15 )





( 20 )
வள்ளல் சிவாசி கணேசனார் வாழ்க!

அள்ளிக் கொடுத்தனர் ஓரிலக் கத்தை அறிவுதரும்
பள்ளிக்குப் பிள்ளைகட் கெல்லாம் உணவு பரிந்தளிக்க!
உள்ள முதலமைச் சர்காம ராசர் உவந்து பெற்றார்
வள்ளல் சிவாசி கணேசனார் வாழிய வாழியவே!

ஓரிலக் கப்பணம் மாணவர் உண்ணக் கொடுத்ததன்றி
வாரிப் பலவாம் நிறுவனங் கட்கும் வழங்குவதாய்
ஊரினர் கேட்க உறுதி யளித்திட்ட உண்மைவண்மைச்
சீரியர் ஆன சிவாசி கணேசனார் வாழியவே!

ஊணுறக்கங் கொளார் உற்ற மனைவி யுடன்கிடவார்
வீணர் வலைக்குட் படார்மட மாதர் விழிக்குட்படார்
வாணாளில் இந்நாள் வரைக்கும் இராப்பக லாய்உழைத்தே
காண்நில வானார் கணேசர் படக்கூத்தர் மீன்களுக்கே!

அவர்இவர் என்னா துலகத்தி லுள்ளவர் உள்ளமெல்லாம்
கவர்பவ ராய்ப்படக் கூத்தர் வானத்திற் கதிரவனாய்
எவர்இது நாள்மட்டும் தோன்றினார் பொன்பெற்றார் ஈத்துவந்தார்?
எவர்புகழ் ஏற்றார் அவர்தாம் கணேசனார் வாழியவே!

குணத்தால் அடித்தனர் குள்ளர் எதிர்ப்பைத் தமிழகத்தில்
பணத்தால் அடித்தார் அறியாமைப் பேயைப்பார்ப் பார்மனத்தில்
வணத்தால் அடித்த முகம், நடிப் பால்அச் சடித்துவண்மை
மனத்தால் அடித்தார் புகழைக் கணேசனார் வாழியவே!      





( 25 )





( 30 )





( 35 )





( 40 )
வள்ளல் சிவாசி கணேசனார் வாழ்க!

       பள்ளியில் மாண வர்கள்
   பகலுண வுண்ணும் வண்ணம்
   அள்ளிஓர் இலக்கம் ஈந்த
   அண்ணல் கணேசர் இந்நாள்,
   புள்ளினம் பாடும் சோலை
   மதுரையின் போடி தன்னில்
   உள்ளதோர் தொழிற் பயிற்சி
   பள்ளிக்கும் ஈத்து வந்தார்!

   இன்றீந்த வெண்பொற் காசோ,
   இரண்டரை இலக்க மாகும்!
   நன்றிந்த உலகு மெச்சும்
   நடிப்பின்நற்றிறத்தால் பெற்ற
   குன்றொத்த பெருஞ்செல் வத்தைக்
   குவித்தீந்த கணேச னார்போல்
   என்றெந்த நடிகர் ஈந்தார்
   இப்புகழ் யாவர் பெற்றார்?

   தமதென்று வையம் ஆண்ட
   தமிழரின் தமிழ கத்தை
   எமதென்று பிறரு ரைக்கும்
   இழிநிலை போக்க எண்ணாத்
   தமிழக நடிக ருக்கும்
   தகுதிரைப் படக்கா ரர்க்கும்
   இமைதிறந் திடக்,க ணேசர்
   இரண்டரை கொடுத்தார் போலும்!

   உரிமையும் உயர்வும் கொண்ட
   உலகநா டுகள்அ னைத்தும்
   கருலியாய்க் கொண்ட ஒன்று;
   கல்வியே என்ப தெண்ணித்
   திரிபிலா அறிவின் மிக்க
   சிவாசிநற் கணேச னாரும்
   அருவியாய்ச் சொரிந்தார் செல்வம்,
   அரும்பயிர்க் கல்வி வேரில்

   தேவைக்கு மேற்கொண்ட டுள்ள
   செல்வம், தன் நாட்டு மக்கள்
   ஆவற்கே சேர்க்க வேண்டும்;
   அறம் அஃதே அறிவும் அஃதே
   நாவலர் கணேசர் இந்த
   நல்வழி கண்டு மற்றும்
   ஈவோர்க்கும் வழிகாண் பித்தார்
   எந்நாளும் வாழ்க நன்றே.




( 45 )





( 50 )




( 55 )





( 60 )





( 65 )




( 70 )





( 75 )




( 80 )
வாழ்த்துப்பா

{ அண்ணாமலைப் பல்கலைக் கழக 25-ம் ஆண்டு
வெள்ளி விழாவில் பாரதிதாசன் 
வாழ்த்துப் பாக்கள்
}

தண்ணறுந் தாயகம் ஒண்மை எய்த
அண்ணா மலைநகர் ஆக்கி, அண்ணாமலைப்
பல்கலைக் கழகம் பண்ணி, எண்ணிலா
நல்லா சிரியரை நயந்து பல்வகைத்
துறைதொறும் வகுப்பு நிறைவுற மாணவர்க்
கறிவுபெற வருகென அன்பழைப்பு அனுப்பிக்
கழகம் தனது காலெடுத்தூன்றி
நடக்கத் துவங்கிற் றென்ற நன்னிலை
அடைவித்தான்எழில் அண்ணாமலை அரசு!

அந்நிலை அந்நாள் பல்கலைக் கழகம்
அடைந்த தென்றால் அதற்குக் காரணம்
கனிந்த உள்ளத்துக் காவலன் கைப்பொருள்
இழப்பு மட்டுமா அண்ணலின் இடையறா
உழைப்பும் காரணம் தழைதமிழ் நாட்டில்
உடைமை உடலுழைப் பிரண்டும் உதவிய
கொடையிற் பெரிய கோமான் ஒருவனைக்
காட்டெனிற்செட்டி நாட்டானைக் காட்டுவோம்!

காய்ப்புநா ளின்முன் காய்த்துப் பழுத்தமாந்
தோப்புப் போன்ற தூய்கழ கத்தாய்
அதற்குள் எத்தனை ஆயிரம் அறிஞரை,
எத்தனை ஆயிரம் முத்தமிழப் புலவரை
ஈன்று புரந்தந்தாள்! ஈடெடுப் பில்லா
எழுத்தா ளர்களை -- எத்தனை பேர்களை
அளித்தாள்! -- பொருளின் பெற்றி ஆயுநர்
தமிழிசை வல்லுநர் அமிழ்தப்பாவலர் இந்தா இந்தா -- என்று தந்தாள்!

ஒருநூற் றாண்டில் தரத்தகு பயனைக்
கால்நூற் றாண்டில் தந்தது கழகம்
அதற்கு வையம் அடிநாள் விழிபெற
வண்தமிழ் வழங்கியார் வழி வழி வந்த
பேரா சிரியரைக் கழகம் பெற்றதும்
பாரா சிரியர் புகழும் பண்புறு
சீபீ ராம சாமியை அடைந்ததும்
கன்றினை ஆவெனக் கழகத்தை ஓம்பும்
அறிஞன் முத்தையனை அண்ணலின் புதல்வனைப்
பெற்றதும் அன்றோ உற்ற காரணம்!

வயலும் ஏரும் மழையும் எருவும்
இருந்தும் என்ன செய்வேன் என்னுமோர்
ஏழைக்கு விதைநெல் ஈந்தான் போல
அரசன்அண்ணாமலை திருநாட்டுக்குப்
பண்டைப் பெருமையும் பதியும் நிதியும்
இருந்தும் வருந்தும் நிலைமை எண்ணி
அறிவின் ஊற்றுத் திறந்தான், அப்பெரு
நிறுவனம் வெல்க நீடுவா ழியவே!
அண்ணா மலைபுகழ் விண்ணென விரிக!
அன்னோன் மக்களும் சுற்றமும் மற்றும்
கழகம் காக்கும் கணக்காயர்களும் மாணவர் தாமும்
எழிலுறு சிபீ இராமசாமியும்
வாழிய பைந்தமிழ் நாடு
வாழிய வாழிய வண்தமிழ் நன்றே

                  (வேறு)

தேனூற்றும் பூவில் தமிழூற்றும் வண்டுதிகழ்
                  பொதும்பர்
வானூற்று நண்ணுதில் லைக்கண்அண் ணாமலை
                  மன்னளித்த
ஆனூற்றுப் பாலின் அறிவூற்றி டும்பல்
                  கலைக் கழகம்
கால்நூற்றாண்டுங்கண்டு பல்லூழியுங்காண
                  வாழியவே!






( 85 )





( 90 )





( 95 )




( 100 )




( 105 )





( 110 )






( 115 )




( 120 )




( 125 )







( 130 )




( 135 )
சென்னை மாகாணத் தமிழாசிரியர் மூன்றாவது
மாநாட்டுக்குப் பாரதிதாசன் அனுப்பிய
வாழ்த்து!

தமிழாசிரியர் மாநாடு வாழ்க!
தகுமவர் நோக்கங்கள் வெல்க!
அமுதே நிகர்த்த தீந்தமிழ் தன்னை
இளைஞருக் கருத்துவார் தம்மை,
நமதாளவந்தார் மதிப்பதே இல்லை
நன்றான ஒற்றுமை பெற்றே
''எமதா ணையேற்பீர் ஆளவந்தாரே
இல்லையேல் வீழ்விரெ''ன் றுரைக்க.

உரிய தாய்மொழி மக்களுக் கீவோர்
நாட்டினுக் குயிரினை ஒப்பார்
அரிய நற்செயல் செய்பவர் மக்கட்
கறிவினை யூட்டுவா ராவார்
பிரிதலின்றி ஆசிரி யர்கள்
ஒற்றுமைப் பேற்றினை எய்திப்
பெரியர் என்று தாம்தமை எண்ணும்
பிற்போக் காளரை வீழ்த்த!

தமிழர் நாட்டை தமிழரே ஆள்க
தமிழரால் வணங்கிடத் தக்கோர்
தமிழா சிரியரே! இந்நிலை இந்நாள்
தளரினும்; தழைத்திடும் நாளை!
இமய வெற்பில் தம்பெயர் பொறித்த
இனத்தர் நாமென உணர்க
அமைதி மாய்க்கும் வடவர் தம்,பிடி
அகலுக நாளும்வாழியவே;



( 140 )





( 145 )




( 150 )





( 155 )




( 160 )
5-2-59 புதுவை, புலவர் குமாரசாமி அவர்கட்கு
நடை பெற்ற பாராட்டு விழாவின்போது;
பொன்னாடை போர்த்துப் பொற்கிழி அளித்து
வாழத்துரை நிகழ்த்திய

சென்னை மாநில முதலமைச்சர் காமராசர்
அவர்கட்கு விழாக் குழுவின் சார்பில்

பாரதிதாசன் வாழ்த்து

அமிழ்து பசித்தோர்க் ககப்பட் டதுபோல்
தமிழர்க்குக் கிடைத்த தகுகாம ராசரே?
தமிழகம் நிறவெறித் தலைவனால் தொல்லை
சுமந்து துடிப்பது நீங்க, நீவிர்
அமைச்சுப் பதவிக்கொப்பிய அருட்டிறம்
தமிழர் பலபல தலைமுறை மறப்பரிது

குமரி தொடங்கி இமையம் வரையுள
பெருநிலம் ஒருநா டெனும் பேராட்சி
ஒருபுறம் உங்களை இழுக்க, மறுபுறம்
அலுவல் அனைத்தும் தமக்கே என்னும்
தலைகொழுத்த சாதி இழுக்க
நொடிப்பொழுது தேனும் நுண்முறை வாழாமல்
அடிப்படை நலங்கள் தமிழகம் அடைய
உள்ளத்தால் பொய்யா துழைக்கும்நீர்; தமிழர்கள்

உள்ளத்துள் எல்லாம் உள்ளீர் ஐயா!
புதுவையிற் புலவர் குமார சாமிக்கு
நிதிதந்து பொன்னாடை போர்த்த நீவீர்
வருதல் வேண்டும் என்றே மாகப்
பெரும்பணிக் கிடையிலும் வருதல் ஒப்பினீர்
செய்தநன்றி சிறிதும் மறவோம்
வாழ்க காமராசரே!
வாழ்கநும் ஆட்சி தமிழ்வாழ்தற் பொருட்டே!




( 165 )





( 170 )





( 175 )




( 180 )
ஈத்துவக்கும் செம்மல் ஏ.கே. வேலனார் வாழ்க!

முன்னும் கொடுத்தார் கரைந்தைக்கல் லூரிதான்
                முன்னுறவே
பின்னும் கொடுத்தார் புலவர் குழுநலம்
                பெற்றிடவே
மன்னும் தமிழ்க்கென்று வாய்மூடு முன்நிதி
                வைத்துவிட்டேன்
என்னும்ஏ. கேவேல னார்வாழ்க செந்தமிழ்க்
                கீத்துவந்தே!

இருபத்தை யாயிரம் ஐயா யிரமென
                இன்தமிழுக்
கருளிச் சிறந்தார் திரைப்பட வணிகர்;
                ஆக்குநர்; ஆம்
பெருமுத் தமிழிற் புலவர்; பிறர் நலம்
                பேணுநல்லார்;
திருவுற்றே கேவேல னார்வாழ்க நானிலச்
                சீர்த்திபெற்றே!


( 185 )




( 190 )





( 195 )


தறித் தொழிலாலே!!

                    எடுப்பு

     தறித் தொழிலாலே -- கைத்
  தறித் தொழிலாலே ...


                    உடனெடுப்பு

     தமிழ்த் திருநாடே -- என்
     தமிழ்த் திருநாடே
     தழைத்து வருகின்றாய் -- வறுமையைத்
     தணித்து வருகின்றாய் வாழ்க!
     தறித் தொழிலாலே ...

                    அடிகள்

     பறிக்கும் பட்டாடை -- கண்ணைப்
     பறிக்கும் பட்டாடை! -- ஒளி
     பாய்ச்சும் நூலாடை!
     சிறக்கும் வானும் கதிரும் நிலவும்
     சேர்த்து நெய்த பொன்னாடை
     செந்தமிழ் நாடே தந்தாய்!
     சிறுமையைத் தவிர்த்தாய் நாட்டின்
     பெருமையை வளர்த்தாய் வாழ்க!
     தறித் தொழிலாலே ...
     அழகு செய்வ தெல்லாம் -- அழகுக்
     கழுகு செய்வ தெல்லாம் கைத்தறி
     ஆடைகள் அல்லவோ?
     இழைகள் எல்லாம் பால் நுரையாய்
     பழந்தமிழ் நாடே அளித்தாய்
     பாவையரின் ஆடவரின்
     ஆவலைத் தவிர்த்தாய் வாழ்க!
     தறித் தொழிலாலே ...




( 200 )








( 205 )






( 210 )




( 215 )




( 220 )

கைத்தறி ஆடை

ஆடையிற்சி றந்ததுகைத் தறிஆடை          -- மக்கள்
அனைவர்க்கும் நல்லதந்தத் தேனோடை
ஓடையில் தேனைஅள்ளி உண்ணவாரீர்        -- அள்ளி
உண்டுகைத் தறிக்குதவி பண்ணவாரீர்!
சேலையிற்சி றந்ததுகைத் தறிச்சேலை          -- அது
தேவைக்கு ரியவண்ண மலர்ச்சோலை         -- குளிர்
சோலைவண் ணமலர்கள் வாங்கவாரீர்         -- நம்
தூயகைத் தறித்தொழிலைத் தாங்கவாரீர்!
வேட்டியிற்சி றந்ததுகைத் தறிவேட்டி           -- களை
வெற்றிக்கெல் லாம்அதுவே வழிகாட்டி         -- புகழ்
காட்டும் கலைக்குநலம் காட்டவாரீர்
கைத்தறித்தொ ழிலைநிலை நாட்டவாரீர்!
எந்நாட்டினும் தென்னாட்டுக் கைத்தறித்தொழில்   -- திசை
எட்டும் பரப்பியது தன்பே ரெழில்            -- நம்
தென்னாட்டுக் கைத்தறித் தொழில்ஓங்க         -- ஓங்கச்
செல்லநிலை யும்கலையும் செழித்தோங்கும்


( 225 )




( 230 )




( 235 )



அவன் புகழ் வாழ்க!

(சண்டே அப்சர்வர் பி. பாலசுப்பிரமணியனார் பிரிவு பற்றியது)

ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
எனும் உண்மை உணர்ந்தவன் தமிழைக்
கொன்றே பிழைப்பவர் தமிழர்ஒற் றுமையைக்
குலைத்ததுமே அவர்தம துடைமை
தின்றே பிழைப்பவர் ஆகிய பார்ப்பன
ஓநாய்கள் வெற்றியில் திரிந்த
அன்றே எதிர்த்தவன்! அணிவீரன்! பால
சுப்பிர மணியனை இழந்தோம்.

நாடுண்டு கூட்டத் தமிழர்கள் உண்டு
நல்ல'வில்' சண்டேஅப் சர்வர்

ஏடுண்டு கூரம் பெழுத்துண்டு கையில்
"எங்கந்தப் பகையான நரிகள்?
கேடுண்டு போகட்டும எனத்தன துடம்பு
கிழத்தனம் அடைந்திடும் வரைக்கும் பாடென்ப தெல்லாம் பட்டவன் பால
சுப்பிர மணியனை இழந்தோம்.

ஆங்கிலந் தன்னில் எழுத்தாளன் பேச்சாளன்
ஐந்தாறு மொழியறி வுடையான்!
தாங்காத வறுமைதான் தாக்கினும் பார்ப்பனர்
தாக்கினும் தமிழர்க்கு நேர்ந்த
தீங்கினைத் தீர்ப்பதில் தளர்கிலான் பால
சுப்பிர மணியனை இழந்தோம்!
ஈங்கெவர் அவன்செய்து வந்தநற் றொண்டினுக்
கீடுசெய் திடவல்லார் அறியேம்!

பாலனாம் குரிசிலை இழந்தததல் தமிழ்த்தாய்
இழந்தனன் படைவீரன் தன்னை!
ஏலாத துன்பத்தை ஏற்றது குடும்பம்!
பெருமையை இழந்தனர் நண்பர்!
மேலான் பருவுடல் மறைந்தனன்; அன்னவன்
மிகக்கொண் டபுக ழுடம்பு
காலமெல்லாம் உள்ள தமிழர்க்கு நல்ல
கருத்தினைத் தந்துவா ழியவே!



( 240 )




( 245 )






( 250 )






( 255 )




( 260 )





( 265 )




காமராசர் கருதவில்லை!

வடக்கில் ஓர்ஊர் மண்ணில் அமிழ்ந்ததாய்த்
திடுக்கிடும் செய்தி கேட்டோம் ஒருநாள்
அப்படிப் பன்முறை அமிந்த துண்டாம்!
அப்படி இனியும் அமிழ்தல் கூடும்.
ஏனெனில் காரணம் இயம்பு கின்றோம்!

பெருநிலம் உட்புறம் அரிப்புக் கொள்ளவும்
கருந்தரை சேறாய்க் கலங்கவும் -- வெள்ளம்
எந்த நேரமும் பாய்ந்துகொண் டிருந்தால்
அந்த நாடே அரோகரா! அரோகரா!

ஆடிப் பாடி அளவு மீறாமல்
வருவதும் வரவு நிற்பதும் ஆன
செம்புனல் ஆற்றைத் தெய்வம் என்று
நம்பெரும் புலமைத் தமிழர் நவிலுவர்

தேவைக்கு மேலும் திரளும் வெள்ளம்
பேயென்று கூறுவர் தமிழ்ப் பெரியோர்

பண்டை நாள்வட பாங்கில் வாழ்ந்த
ஒண்டமிழ் மக்களும் ஒண்டுமா ரியரும்
தெற்கு நன்றெனச் சேர்ந்தனர் என்றால்
தெற்கில் பேயாற்றுத் தீமை இல்லை!

காமராசர் கருதா தொருநாள்
வடக்கில் வற்றாக் கங்கை இருப்பதால்,
கிடப்போம் அவர்கீழ் என்று கிளத்தினார்!

காவிரி ஊற்றின் கண்தூர்ந் தாலும்
வைகை யூற்றின் வாய்திறந் தாலும்
தமிழன் உரிமையோடு சாக வேண்டும்!
அடிமையாய்க் கங்கை ஆறு பெற்றும்
வாழ்வது மானம் இலாமை என்று
பச்சைத் தமிழர் பகர்ந்தால்
மெச்சுவோம் மீசை முறுக்கேறும் நமக்கே!
( 270 )





( 275 )





( 280 )






( 285 )





( 290 )





( 295 )

பட்டாளம் கிளம்பிற்றுக் கொட்டடா பறை!

நான்கு கோடித் தமிழர் பட்டாளம்
நாட்டை மீட்கக் கிளம்பிற்றுக் கண்டாய்
தீங்கு செய்யும் வடவரின் ஆட்டம்
செல்லா தென்று கொட்டு வெற்றிப்பறை!

நாங்கள் அல்ல ஆட்பட் டிருப்பவர்
நாங்கள் நாட்டை ஆளப் பிறந்தவர்
வேங்கை எழுந்தபின் நரிகட் கிங்கே
வேலை இல்லை என்றுநீ கொட்டு!

ஆண்ட வர்க்கு வாய்த்தது தொண்டோ
ஆளுந் தகுதியும் வடவருக் குண்டோ!
தோண்ட வேண்டாம் வடவர்சாக் குழியென்று
சொல்லிக் கொட்டடா கொட்டுவெற் றிப்பறை!

பழைய வரலாறு தெரியாத தங்கள்
பாட்டன் மாரை கேட்டால் சொல்லுவர்
அழையா வீட்டில் நுழைந்த திடக்கே
அழியப் போவது வடக்கே வடக்கே!

( 300 )





( 305 )





( 310 )





ஆட்பட்டிருப்பது வெட்கம்!

இசை: காபி                               தாளம்: ஆதி

மிடிமையே கொடுக்கும் குடிமையே கெடுக்கும்
அடிமை வாழ்வும் ஒருவாழ்வா? -- நம்
கொடிய தளை அறுக்க உரிமைக் கொடிபறக்க
கூடிப் படை எடுத்தல் தாழ்வா?

படிமன்னர் தொழும் மூன்று முடிமன்னர் வழிவந்தோம்
பழிமன்ன வாழ்ந்திட லாமா? -- நாம்
தொடுத்தது போர்! பகை தொலைந்தது பார்என்று
சொல்லிட இரண்டு நாள் ஆமா?

ஒருகுடி ஓரினம்! ஒருமொழி கொண்டவர்
ஒன்றுபட்டார் என்ற பேச்சு -- நேர்
திருவி லாப்பகைவர் செவியினில் வீழட்டும்
தீர்ந்து போகும் அவர் மூச்சு.

உருவற்றுப் போகட்டும் தமிழினம் என்றென்றே
ஓயா துழைக்கும்ஒரு கோட்டி -- அதன்
கருவற்றுப் போம்படி செய்வோம் நமக்குள்ள
கைகள் எட்டுக்கோடி ஈட்டி.

ஆளாக வந்தவர் ஆள்வதும் ஆண்டவர்
ஆட்பட் டிருப்பதும் வெட்கம் -- மறத்
தோளாய் இருந்தவை தோலா யினஎன்று
சொன்னால்இவ் வையம்சி ரிக்கும்.

தூளாய்ப் பறந்திடும் வஞ்ச நெடுங்குன்றம்
தூங்கும் தமிழர்வி ழித்தால் -- பின்
ஆளப்பி றந்தவர் ஆளுகின்றா ரென
அறிவோர் வரைவார்எ ழுத்தால்.

வாழ்க்கையி லோர்சுவை, வையத்தி லோர்புகழ்!
வாரி ரோதமிழ்ச்சிங் கங்காள்! -- வெந்
தீக்காட்டில் வாழ்கின்ற செந்தமிழ் நாட்டன்னை
மீட்க நமையழைக் கின்றாள்!

வீழ்ச்சி அறிந்ததில்லை வேங்கைக ளேஎழுவீர்
வீரம் நமைப்பிரிந்த தில்லை -- நம்
தாய்க்கா விலங்கு? தமிழ்க்கா துயரமிங்கு?
தாக்குவீர்! தீர்ந்தது தொல்லை!



( 315 )






( 320 )





( 325 )





( 330 )






( 335 )





( 340 )




( 345 )

வெல்க தமிழ்நாடு

இலங்கறத்தால் வீரத்தால் புகழைச் செய்த
இத்தமிழ கத்தாய்க்கு வடக்கன் இட்ட
விலங்கறுக்கப் புறப்பட்டான் தமிழர் தந்தை!
வெல்கவே வெல்கவே என்றார் நாட்டார்
கலங்காத நெஞ்சத்து மறவர் கூட்டக்
கடலொன்று படைஎன்று தொடரும் போதும்
துலங்காமூஞ் சிக்கூட்டம் ஒன்று மட்டும்
துட்டடித்துக் கொண்டிருத்தல் வெட்கக் கேடு!

தமிழனத்தைத் தலைகவிழ்த்துத் தமிழ கத்தில்
தன்னினத்தை வளர்ப்பதென்ற பார்ப்பான் ஆட்சி
நமைநோக்கி எளியஉரை ஒன்று சொன்ன
நாக்கறுக்கப் புறப்பட்டான் தமிழர் தந்தை!
தமிழ்வெல்க தமிழ்வெல்க என்றார் நாட்டார்;
தமிழர்படை தரைகிழியத் தொடரும் போதும்
உமிழ்பார்ப்பான் எச்சிலுக்கோர் கூட்டம் மட்டும்
உட்கார்ந்து கொண்டுருந்தல் வெட்கக் கேடு!

ஆளவந்தார் காலடியில் அமிழ்து கண்டே
அதற்காகப் போராடும் கூட்டம் ஒன்று! மீளுகநம் தாயகமே என்று கூறி
மேற்செல்லும் மற்றுமொரு பெரிய கூட்டம்!
கோளரிகாள், சிறுத்தைகளே, இவ்வி ரண்டில்
குறிகெட்டுத் திரிகின்ற நரிக்கூட் டத்தின்
ஊளைபெறும் வெற்றியது நாட்டின் தோல்வி
உயர்நோக்கம் தோற்பின் அது நாட்டின் வெற்றி

சீரில்லை; சிறப்பில்லை அன்னையான
திருநாட்டை மீட்பதிலே ஆசை யில்லை
கூரில்லை அறிவினிலே; கொள்கை இல்லாக்
கோடரியின் காம்புகளைக் கான்று மிழ்ந்து
நேரில்லை யாருமே தமிழர்க் கென்று
நிலமதிரத் திரண்டெழுந்து தில்லி என்ற
பேரில்லை என்றாக்கித் தீர்க்க வேண்டும்
பெற்றதமிழ் நாட்டைநாம் பெறுதல் வேண்டும்!



( 350 )





( 355 )




( 360 )





( 365 )




( 370 )





( 375 )



விடுதலைப் பாட்டு
(தமிழருக்கு மறவர் என்று பேர்)


நாயும் ஒப்பாத அடிமை வாழ்வை
நாலு கோடித் தமிழரா ஒப்புவர்?
தாய்நாட் டிற்குத் தமிழர்நா டென்றுபேர்!
தமிழ ருக்கே மறவர் என்றுபேர்!       (நாயும் ஒப்பாத)

தேய்தல் வளர்தல் திங்கள் வழக்கம்
தேயாப் புகழ்செயல் எங்கள் வழக்கம்!
தாய கத்தின் மீட்சிப் போரினில்
சாவும், தமிழர்க் கமிழ்தாய் இனிக்கும்!    (நாயும் ஒப்பாத)

வீரம் பிறந்த நாட்டிற் பிறந்தவர்;
வெற்றித் தமிழர்; உலகிற் சிறந்தவர்;
ஆரியர் அல்லர்; மறைந்தி ருந்தே
அம்பு பாய்ச்சும் பூரியர் அல்லர்       (நாயும் ஒப்பாத)

குறைஒன்று தாயகம் கொள்ளவும் பாரோம்
குன்று பெயரினும் உள்ளுரம் தீரோம்
சிறையும் நோயும் கட்டிலும் தென்றலும்!
செந்நீர் சிந்தல் தேன்சிந்து பாடல்!       (நாயும் ஒப்பாத)

( 380 )





( 385 )





( 390 )





போ போர்க்கு!

(வாகைத் திணை)

துறை: மூதின் முல்லை

         பாலுண்ணும் பிள்ளையே
         விடு மார்பை!

வேல்வைத்த தோளான் நமது நிலத்திற்
கால்வைத்தான் இன்றே கட்டழிக்கப் போகாயோ (பால்)

         கூர்வேலும் இந்தா -- முற்பகை
         குத்தி வளைந்ததை நன்றாய்

ஆராய்ந்து தந்தேன் சாத்தடா தோளில்
அறத்தைச் செய்! நட! இதே நாளில்         (பால்)

         மறக்குடி வந்தோர் -- உன்முனோர்
         போரில் இறந்தனர் அதோபார்!

பிறங்கிற்றுப் புகழும்! நடுகற்கள் நோக்குக!
பிழைக்கினும் இறக்கினும் புகழேபோ போர்க்கு! (பால்)
( 395 )






( 400 )







( 405 )

மக்கள் பாசறை

காங்கிரசு தீங்கர சானதால் அதனைத்
தமிழர் ஒதுக்கித் தள்ளினர், மற்றும்
சட்ட மன்றினர் தந்நலச் சுவரில்
முட்டித், தமிழரை முழுதும் இழந்தனர்.
கட்சித் தலைவர்கள் மக்களைக் கைவிட்டுத்
தமக்குத் தலைவர் தாம்என்று வாழ்ந்தனர்.

ஆதலின் தமிழர் அனைவரும் இந்நாள்
எவர்க்கும் எந்த நிறுவனத் திற்கும்
கட்டுப் படாமல்ஓர் பாசறை கண்டனர்,
"தலைவர் பெரியார என்றுதாம் கொண்டனர்
மக்கட் பாசறை எக்கட் சிக்கும்
எத்தலை வர்க்கும் அடக்கம் இல்லை
என்பதை மீண்டும் மீண்டும் இயம்புவோம்

அரசியல் அறிந்தவர் அறமு ணர்ந்தவர்
இதனை ஊன்றி எண்ண வேண்டும்

"விடுதலை தமிழ கத்திற்கு வேண்டும
சாற்றும் இஃது தமிழரின் மூச்சே
ஆதலின் இந்நாள் தமிழர் அனைவரும்
உருவால் பலர்எனில் உணர்வால் ஒருவரே
இந்நாள் எதிரிகள் தமிழருக் கிருப்பினும்
தமிழ கத்தைத் தமிழரே ஆள்வதாய்ச்
சாற்றினும் அதிலே தவறொன்று மில்லை
தமிழைப் பேசும் தமிழக நிலைமை
இதுஎனில், மற்றத் தமிழகம் எவ்வாறு?
தனிநாடல்ல கேரளம்! தமிழகம்!
தனிநாடல்ல தெலுங்கம் தமிழகம்.
தனிநாடல்ல கன்னடம்! தமிழகம்

ஆயினும் அவற்றின் நிலைமை வேறே
அங்குளார் அயலார்க் கடங்கி வாழ்குவர்
தம்நிலை உணர்கிலார்! தருதி காண்கிலர்
உணர்வார் விரைவில்! உணரச் செய்வோம்.

திறக்கட்டும் பாசறைக் கதவு! அயல்மேற்
பறக்கட்டும் தமிழர் பட்டளம்! அயலார்
தொடர்பினை அறுத்துத் தொலையச் செய்யட்டும்.
இங்குத் தமிழ்க்கொடி யேறுக
எங்கும்பின் ஏறும்! பெரியார் வெல்கவே.



( 410 )





( 415 )





( 420 )





( 425 )




( 430 )





( 435 )





( 440 )

கொலைப்படை வேண்டும்

பீரிட்டடிக்கும் உடற்குருதி கண்டாள்
சேரா திருந்திடப் பழகு -- வரும்
போர்வீர னுக்கிதே அழகு!
                   (பீரிட்டடிக்கும் உடற்குருதி)

நேரிட்ட போரிலே உன்விழுப்    புண்ணில்
நின்பகை நடுமார்பில் நீசெய்த    புண்ணில்
                   (பீரிட்டடிக்கும் உடற்குருதி)

மீன் உண்ணத் தான்வேண்டும்    தேடு!நீ
மிக உண்ணத் தான்வேண்டும்     ஆடு!
நான் உண்ட துண்டு புலிக்கறியி   னோடு
நல்லகர டிக்கறியை! உயர்வென்று  பாடு
                   (பீரிட்டடிக்கும் உடற்குருதி)

ஊன்வாங்க வேண்டாம், உயிரோடு வாங்கி
உடம்பு துடித்திடக் கத்தியைத்     தாங்கித்
தேன்வாங்கக் கூடழிப் பான்போல  ஓங்கித்
திறம்செய்க! உயிரினிற் கண்ணோட்டம் நீங்கி
                   (பீரிட்டடிக் உடற்குருதி)

வடபாங்கில் முன்னாளில் தமிழரை வென்றார்
வந்திட்ட ஆரியர்! உடும்பையும்   தின்றார்
இடம்பெற்ற பின்சைவம் மிகநல்ல  தென்றார்
இன்று தேவைப்படல் கொலைப்படை அன்றோ?
                   (பீரிட்டடிக்கும் உடற்குருதி)

எண்ணாயிரம் தமிழ்மக்களைக் கழுவால்
இழித்த குருதியைத் தேனென்றாள் விழியால்
பண்ணப் பழகடா பச்சைப் படுகொலை
பைந்தமி ழர்க்கெலாம் உயிரடா விடுதலை
                   (பீரிட்டடிக்கும் உடற்குருதி)


( 445 )






( 450 )






( 455 )





( 460 )





( 465 )