பக்கம் எண் :

பாரதிதாசன் பன்மணித்திரள்

பெரியார் சொல் வெல்கவே!

காலையிலே உணவருந்தி வேலைக்குச் சென்றான்
கடைத்தெருமேற் செல்லுகையில் இருவர்எனை நோக்கி
வேலெறிந்த தைப்போலே விட்டெறிந்த சொற்கள்
விளைத்தமனத் தொல்லையினை என்னென்று சொல்வேன்
''சேலோடுவில் புலிஉயர்த்தோர் வழிவந்தேன் என்பான்
செந்தமிழ்நாட் டடிமைஇவள்'' என்று சொல்லிப்போனார்
வேலைக்கு நேரந்தான் ஆயிற்றே என்று
விரைவாக நான் நடந்தேன். குறுக்கிட்டான் ஓர் ஆள்!

காங்கிரசு மேன்மையினை மிகவாகச் சொன்னான்
கதைமுடிந்த பின்என்றன் ஆதரவு கேட்டான்
காங்கிரசை ஆதரித்தால் என்னவரும் என்றேன்
கைநிறையச் செல்வம்வரும் என்றுரைத்தான். நானும்
தீங்கரசை ஆதரித்தால் செருப்படியும் வருமே
எனச்சொல்விச் செல்லுகையில் ஒருநொண்டிப் பார்ப்பான்
நாங்கள்தாம் சரியாக நடப்பவர்கள் என்றான்
நகைக்காமல் மற்றவர்கள் நொண்டிகளோ என்றேன்.

அனைத்துலகக் கட்சி இது! மக்களெலாம், உடைமை
அனைத்தையுமே பொதுவாக அடையவைக்கும் கட்சி!
தினைத்துணையும் பொதுப்பணத்தைத் திருடாத கட்சி!
தெரிந்தவரைத் தெரியாமற் கொலைசெய் யாக்கட்சி!
மனைவிநீ! கண வன்நான் என்றுசோ றுண்டு
மங்கையரை ஏமாற்றிப் பிள்ளைகொடுத் தோடும்
புனைசுருட்டுக் காரரிலாப் பொன்னான கட்சி!
போடிந்த உண்டியிலே பணம்என்றான் மேலும்.

இவ்வூரார் நிலத்தையெலாம் வீடுகளை யெல்லாம்
எண்ணி எண்ணிப் பார்த்ததிலே உன்றன் விழுக்காடு
நெய்வேலி சேர்ந்தாப்போல் நன்செய்ஒரு வேலி.
நீஇருக்கும் கூரையண்டை மாடிவீ டொன்றும்
இவ்வாரம் உன்பேருக் காக்குவதாய் எங்கள்
ஊர்க்குழுவி னோரெல்லாம் தீர்மானம் செய்தார்
உன்குடும்பம், நாளைவரும் தேர்தலிலே எம்மை
ஒரேயடியாய் ஆதரிக்க வேண்டுமென்று சொன்னான்.

விட்டாலே போதுமென்று விரைவாக நடந்தேன்
விடமாட்டேன் உன்னைஎன மற்றொருவன் வந்தான்
''பட்டாளத் தலைமைமட்டும் தில்லிக்கு வேண்டும்
பார்ப்பானை அணுவளவும் திட்டுவதே இல்லை

ஒட்டாக மாகாண உரிமைமட்டும் தேவை
உயர்தமிழும் தேவைஅதில் வடமொழியும் வேண்டும்
தட்டாமல் எம்மைநீ ஆதரித்தால் போதும
தமிழரசுக் கழகத்தான் இவ்வாறு சொன்னான்.
அரிவாளும் நெற்கதிரும் அடையாளங் காட்டி
அடுத்தொருவன் வந்தென்னை நடுத்தெருவில் நிறுத்தி
எரிவெய்யில் கால்களையும் தலையினையும் தீய்த்தே
எரிக்கின்ற நேரத்தில் காதினையும் எரித்தான்
தரவேண்டும் ஆதரவு தரவேண்டும் என்றான்
சரிஎன்றேன் விடவில்லை ஒரேஓட்ட மாகத்
தெருத்தாண்டிப் போகையிலே தோழரே என்று
செப்பியது காதில்விழத் திரும்பினேன் அங்கே

திமுக வென்று சொன்னபடி சிரிக்குமுகக் குள்ளத்
திருமேனி ஒன்றுநின்ற ததனை நான் கண்டேன்
நமதுகழ கந்தனிலே நீசேர வேண்டும்
நடிக்கவைப்போம் சினிமாவில் கதைஎழுதச் செய்வோம்
கமழும்உன் பேர்இந்தக் கண்ணில்லா நாட்டில்!
கலைஞன்நீ ஆய்விடலாம் என்றான் கவிஞன்நீ
எமதன்றோ இந்நாடு? சட்டசபை போக
எண்ணமா அடுத்தநொடி பார்த்துக்கொள் என்றான்,

ஓடத்தான் வழிபார்த்தேன் விட்ட பாடில்லை
உயர்சினிமாக் கம்பெனியாம் வாஎன்று சொன்னான்.
நாடகமாம்! கம்பெனியாம்! வாவென்று சொன்னான்
நங்கைமார் அழகழகாய் உண்டென்றான் பாவி,
போடாநீ என்றுரைத்தேன் போனபா டில்லை
புறத்தினிலே இழுத்தெறிந்தேன் போகவழி பார்த்தேன்
நாடோடி நாயொன்று குரைத்த தென்னைப்பார்த்து
நடுங்கிநின்றேன் இதுவுமொரு கட்சியோ என்றே.


(வேறு)


நேரந் தவறிநான் வேலைக்குச் சென்றதனால்
வேலைக்கு வேண்டாம் நீ நாளைக்குவாஎன்று
நாரா யணசாமி ஐயர் நவின்றிடவே
''நாலைந்து பிள்ளைகள் பெண்டாட்டி ஒருத்தி
தாரும்அரை நாள்வேலை சாகா திருப்பதற்கே
என்றுபல வாறுநான் சாற்றவும் அக்கொடியன்
ஊரில்இட மில்லா நேரத்தில் நீங்கள் எலாம்
ஒழிந்தால்தான் என்ன முழுகிப்போம் என்றுரைத்தான்.

எனக்குப்பின் வந்த இரண்டுதடிப் பார்ப்பனர்க்கும்
என்கண் எதிரினிலே வேலைதந்தான். ஒருபுறத்தில்
நினைப்பினிலே ஆழ்ந்தவனாய் நீளப் படுத்துவிட்டேன்
நெஞ்ச நெருப்புக்கு நல்லமழை வந்ததுபோல்

சினக்கும் கடல்ஒலிபோல் சாதி ஒழிகஎன்று
செப்பியது கேட்டேன் பெருங்கூட்டம் நான்கண்டேன்
இனவெறியைக் கிளப்பிவிடும் இவைகளைத் தில்லி
இன்றே சிறையிலிட வேண்டுமென்று சொல்லி

நாரா யணசாமி நவின்றான் அதேநேரம்
நம்தமிழ் நாட்டை விடுவிப்போம் என்றதொரு
சீரான பேரொலியும் செவிக்கமுதாய்ச் சேர்ந்ததங்கே!
தெருநோக்கி ஓடினேன் ஓடுகையில் என்கையை
நாரா யணசாமி பற்றினான் வேலையைநீ
ஒப்புக் கொள்என்று நவின்றான் என்நிலையதனை
ஆராய்ந்தேன் நாட்டின் அடிமைநிலை ஆராய்ந்தேன்
அழுதனவே என்கண்கள்! கத்திதூக்கின கைகள்!

சாதி ஒழிகஎன்றும் தமிழ்நாடு மீள்கஎன்றும்
தத்தளிக்கும் என்னருமைத் தமிழர் கிளர்ச்சியினை மோதி அழிக்கஎண்ணும் கட்சிகளும் வாழ்வனவோ!
முத்தாகப் பேசிப்பொய் மூட்டைகளை இங்கவிழ்க்கும்
தீதான கட்சிகட்கும் ஆதரவு சேர்வதுண்டோ?
செந்தமிழர் எல்லாரும் ஓர்குலமே! நம்நாடு
போதிய நல்லுரிமை பூணாதா? என்னாத
புழுக்களுக்கும் கட்சிஒன்றா? பெரியார்சொல் வெல்லுகவே!




( 5 )





( 10 )




( 15 )





( 20 )





( 25 )




( 30 )





( 35 )





( 40 )




( 45 )





( 50 )




( 55 )




( 60 )








( 65 )





( 70 )





( 75 )





( 80 )





( 85 )






( 90 )




( 95 )

பெரியார் அறப்போர்

    செயற்கருஞ்செயல் செய்தல் வேண்டும்;
   பெறற்கரும்புகழ் பெறுதல் வேண்டும்!
   
   பிறவியற் சாதி உண்டெனப் பிதற்றியும்,
   அறிவை அழித்தும் ஒற்றுமை அழித்தும்,
   தமிழகம் -- உலகம் உமிழகமாகி
   ஒழியவும், நாடொறும் அழிவுசெய் துவரும்
   அயலான் அடியை அடையப் பெறுவது
   செயற்கருஞ்செயல் செய்வ தாகுமோ?
   பெறற்கரும்புகழ் பெறுவதாகுமா?
       
   தன்இனம் தன்மொழி தன்நாடு தன்கலை
   இன்ன வற்றின் உயர்வை இழிவெனப்
   பிறருளம் மகிழப் பேசி வாழ்பவன்
   துணைவேந்த னாயினும்தமிழன் துறைக்குத்
   தலைவ னாயினும் அந்தத் தமிழன்
   செயற்கரு மூறு செய்தவனாவான்;
   பெறற்கரும்பழி பெற்றவனாவான்.
   ஆயிர மாயிரம் ஆண்டுகளாகத்
   தீயசாதிஇந் நாட்டைத் தீய்ப்பதை

   ஆயிர மாயிரம் ஆண்டுக ளாகத்
   தூயவர் முயன்றும் தொலைத்தா ரில்லை!
   அதனால் இந்த அழகிய தமிழகம்
   மதிப்பற்று வாழ்வு மங்கி வருவதும்
   உலகம் அறிந்த ஒன்றாம்! இன்று
   நிலையில் தமிழரை உயர்த்தவும் நீங்கா
       
   மாசு நீக்கவும் வந்த பெரியார்
   அறப்போர்ப் பறைமுழக்கு -- அதோகேட்கின்றது!
   தொல்சீர்த் தமிழர்க்கு நல்ல வாய்ப்பிது!
   செயந்க ருஞ்செயல் செய்தல் வேண்டும்
   பெறற்க ரும்புகழ் பெறுதல் வேண்டும்!
   கல்வி அமைச்சரோ செல்வ அமைச்சரோ
   இயன்ற மட்டும் பங்கை ஏற்க;
   அப்பெரும் போரில் அறப்படை யணியில்

   கடைசி வரிசையிற் காணும் தொண்டனின்
   செருப்புத் துடைப்பதோர் செயலை யேனும்
   செய்க அஃது செயற்கருஞ் செயலே செயலே!
   பெறுக அதனால் பெறற்கரும் புகழே!
   ஆலைக்காரர் ஆகுக அவர்தம்

   தோலைக் காசுக்குத் தொலைப்பார் போலப்
   பெரியார் அறப்போர் பெருமதிப்பினைச்
   சிறிதென இனிப்பது நீக்கித் திருந்தித்   தொண்டரொடு தொண்டு செய்து கிடக்க
   சட்டை மாட்டித் தலைக்கணி செய்து
   பட்டு டுத்துப் பகட்டுமோர் தமிழனும்
   என்னினும் தாழ்ந்தவன் என்னும் ஆரியன்
   தன்னிலும் தாழ்ந்தவன் நான்நான் நான்எனும்''
   மடமை மாய்வதெந்தாள்? அந்நாள்
   இந்தநாள்! அரியது செய்க!
   நந்தம் பெரியார் படையொடு நடக்கவே!




( 100 )




( 105 )





( 110 )




( 115 )





( 120 )




( 125 )





( 130 )





( 135 )




( 140 )




( 145 )
எவர் பெரியார் அவர் வாழ்க!

   குமரி நாட்டின் தமிழ்நான் மறைகள்
   அமிழ்ந்தன! வடவர் மறைகள் நிமிர்ந்தன!
   தமிழன் முதலில் உலகினுக் களித்த
   அமிழ்துநேர் தத்துவம் ஆன என்னூல்
   அமிந்தது வடவரின் அறிவுக் கொவ்வாப்
   பொய்மைகள் மெய்ம்மைகள் ஆகிப் பொலிந்தன!
   அகத்தியன் தொல்காப் யியன்முத லானவர்
   தகுதிறம் தமிழிற் பெறுதிறம் அருளிய
   எண்ணருங் கண்ணிகர் தமிழ்பாடும் ஏடுகள்

   மறைந்தன! வடவர் தீயொழுக்க நூற்கள்
   நிறைந்தன! இந்த நெடும்புகழ் நாட்டில்!
   ''தீதுசெய் யற்க செய்யில் வருந்துக
   ஏதும் இனியும் செய்யற்க'' வெனும்
   விழுமிய தமிழர் மேன்மை நெஞ்செல்லாம்
   'கழுவாய்' எனுமொரு வழுவே நிறைந்தது.

   ''நல்குதல் வேள்வி'' என்பது நலியக் --
   கொல்வது வேள்ளி எனும்நிலை குவிந்ததே!
   ஒருவனுக்கு ஒருத்தி எனும் ''அகம்'' ஒழிய
   ஐவருக் கொருத்தி எனும் அயல் நாட்டுக்
   குச்சுக் காரிக்குக் கோயிலும் கட்டி
   மெச்சிக் கும்பிடும் நிலையும் மேவிற்று.
   மக்கள் நிகர்எனும் மாத்தமிழ் நாட்டில்
   மக்களில் வேற்றுமை வாய்க்கவும் ஆனதே!
   உயர்ந்தவன் நான்என்றுரைத்தான் பார்ப்பான்!
   அயர்ந்தவன் நான்என்றுரைத்தான் தமிழன்
   இப்படி ஒரு நிலை காணுகின்றோமே
   இப்படி எங்குண்டிந்த உலகில்?

   இறந்த காலத் தொடக்கத் திருந்து   சிறந்த வாழ்வுகொள் செந்தமிழ் நாடு
   இழிநிலை நோக்கி இறங்குந் தோறும்
   பழிநீக் கிஎடவன் பறந்தான் இதுவரை?
   இதுவரை எந்தத் தமிழன் இதற்கெலாம்
   பரிந்துபோராடினான்? எண்ணிப் பார்ப்பீர்!
   தமிழன் மானம் தவிடுபொடி ஆகையில்
   வாழாது வாழ்ந்தவன் வடுச்சுமந்து சாகையில்
   'ஆ' என்று துள்ளி மார்பு தட்டிச்
   சாவொன்று வாழ்வொன்று பார்ப்பேன் என்று
   பார்ப்பனக் கோட்டையை நோக்கிப் பாயுமிவ்
   அருஞ்செயல் செய்வார் அல்லால்
   பெரியார் எவர்? -- நம் பெரியார் வாழ்கவே!        
 



( 150 )





( 155 )





( 160 )




( 165 )




( 170 )





( 175 )




( 180 )




( 185 )
உலகுக்கு மீட்சி உண்டா?
புத்தர் -- பெரியார் -- வள்ளுவர்

   கந்தை உடைஉடுத்துக் கைப்பிள்ளை தானேந்தி
   வந்தாள் ஒருத்தி ''வழியேதும் இல்லைஉங்கள்
   வீட்டில்இட்ட வேலை செய்வேன் வேண்டிய தெல்லாம்என்றன்
   பாட்டுக்குத் தக்கபடி'' என்று சொன்னவுடன்
   சோறு தருவதென்றும் திங்கள் தொறும் வெள்ளி
   ஆறு தருவதென்றும் வேலைக் கமர்த்திடவே

   இட்டபணி செய்தாள் நடுப்பகலில் என்மனைவி
   வட்டியிலே சோறுகறி வட்டித்தே உண்என்றாள்,

   ''சாலையிலோர் வீட்டுக் குறட்டில்என் தாய்ஒருத்தி
   மேலும் இரண்டுபேர் தங்கையரை வெம்பசிதான்
   வாட்டி வருத்தும்இந்த வட்டிலொடு போய்அவர்க்கே
   ஊட்டி வரவேண்டும்'' என்றே உரைத்துநின்றாள்
   உண்ணாரோ? ஊட்டுவதேன்? என்றுரைத்தாள் என்மனைவி;
   ''கண்ணில்லார் மூவரும்'' என் றாள்கலங்கும் கண்ணுடைய
   என்மனைவி நெஞ்சம் இரங்கியே ''நீஓடி
   அன்னவரை இங்கே அழைத்துவா'' என்றுரைத்தாள்.

   சாய்வுநாற்காலியிலே சாய்ந்திருந்தேன் என்எதிரில்
   தாய்இரண்டு பெண்கள் தலைமகளின் கைபற்றி
   வந்து வரிசையாய் நின்றார்கள் பிள்ளைக்குக்
   குந்தியே பாலூட்டிக் கொண்டேவே லைக்காரி
   மூவர்க்கும் சோறூட்டி மூன்றுவிரல் தானுண்டு
   யாவர்க்கும் நெஞ்சில் இரக்கத்தை ஊட்டிநின்றாள்.
       ஏழைப் பணிப்பெண்ணே ''இந்த நகரமன்றம்
   ஏழைகளுக் கேதேனும் ஏற்பாடு சேய்கிலையோ''
   என்றுநான் கேட்டவுடன் ''இந்த நகரமன்றம்
   ஒன்றுமில்லா எங்கட்கா ஒத்தாசை செய்யுமெ''ன்றாள்

   எண்ணக் கடலிலேநான் ஆழ்ந்தேன் இக்கிழவி
   கண்ணில்லாள் காமத்தை வென்றிருந்தால், இன்றிந்தப்
   பெண்ணிரண்டும் ஏழைப் பெரியபெண்ணும் பிள்ளையும்
   உண்ணுதற்கும் கட்ட உடைக்கும் சிறிதேனும்
   ஒத்தாசை யற்ற உலகில் பிறந்தழியார்!
   தொத்துநோய்க் காமம்வந்து தொட்டுவிட்ட போதிலுமே
   கற்றவர்கள் சொல்லும் கருத்தடைமு றைகளைப்பின்
   பற்றியிருந்தாலும் பழிநேர்ந்திராதன்றோ!

   கண்ணிலார் இம்மூவர் மட்டுமா? எண்ணிலார்!
   எண்ணிலார் காதிலார்! காலிலார், கையிலார்
   எண்ணிலார்! உண்ணிலார் எண்ணிலார்! ஏதிருந்தும்
   உள்நிறை வில்லார் உலகத்தில் எண்ணிலார்
   தப்ப முடியாத சாவுகள் மூப்புநோய்
   எப்புறமும் உண்டன்றோ, முப்போதும் துன்பன்றோ!
   புத்தர்பிரான் அன்றுகண்ட பொல்லா உலகென்முன்
   பெத்தெனக்கு தித்தது. நான் ''போ'' எனறேன் போகவில்லை

   எண்ணிப்பார் என்றுரைத்தான் எங்கிருந்தோ புத்தர்பிரான்
   எண்ணக் கடலினின் றேறவில் லைநானும்   மக்களெல்லாம் காமத்தை மாய்க்கத்தான் வேண்டுமா?
   மக்கள்வரும் வாயில்களைச் சாத்தத்தான் வேண்டுமா?

   யாரும் பிறவாமை இன்ப நிலைதானா!
   பாரில் பிறப்புநிலை பட்டழிய வேண்டுமா?
   ஈராயிரத்தைந்நூ றியாண்டின்முன் இவ்வுருலகில்
   சீரார்ந்த புத்தர்நெறி இன்னும் சிறக்குமா?

   ஈரோட்டார் என்பெரியார் ''மக்களிலே தாழ்வுயர்வுப்
   போராட்டம் வேரற்றுப் போனால் உலகில்
   நலிவில்லை எய்தும் நலம்'' என்றருளி னாரே!
   தலையின்மேற் கொள்ளவே தக்கதன்றோ அன்னதுவும்?
   வள்ளுவனார் இப்பெரிய வையத்தைக் காப்பதற்கோர்
   தெள்ளு தமிழ்ப்பாட்டும் செப்பினார் -- அஃது
   பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
   தொகுத்தவற்றுளெல்லாம் தலை!        
 



( 190 )






( 195 )




( 200 )




( 205 )





( 210 )





( 215 )





( 220 )



( 225 )





( 230 )





( 235 )





( 240 )


தாய் தன் குழந்தைக்கு

கூடுகட்டி முடிக்க -- ஓடிப் பாடு பட்டுக்
கோட்டுப் புன்னைஅரும்பு -- போல முட்டை இட்டு
மூடிஅடை காத்து -- முழுவே லையும் கெட்டு?
முந்திரிக் கொட்டையைப்போல் -- குஞ்சு பொறித்தது சிட்டு

காடும் வீடும்சென்று -- கம்போ நொய்யோ தேடிக்
காலை மாலைதோறும் -- குஞ்சு வயிற்றை மூடிக்
கேடு செய்யும்காக்கை -- கிட்டா வண்ணம் நாடிக்
கிட்ட இருந்து படிப்பு -- கற்றுக் கொடுக்கும் பாடி

சிட்டுக் குஞ்சு படிக்கும் -- பள்ளிக் கூடம் கூடு
சின்னக் குழந்தை படிக்கும் -- பள்ளிக் கூடம் வீடு
சிட்டுக் குஞ்சுக் கெல்லாம் -- தாய்சொல் தானே ஏடு?
சின்ன குழந்தாய் நீயும் -- தாயின் சொல்லை நாடு.

போகா இடங்கள் போனால் -- பொல்லாங்கெல்லாம் நேரும்
பொல்லா ரோடு சேர்ந்தால் -- பொய்யும் புரட்டும் சேரும்
கூகூ என்றே அழுதால் -- குரலோ மிகவும் சோரும்
கொட்டம் செய்யா திருந்தால் -- பெற்றோர் எரிச்சல் தீரும்!

தூசித் தரையில் குந்தி -- துணியைப் பாழாக் காதே
துள்ளிக் குதித்து வீழ்ந்தே -- பல்லை இழக் காதே
பேசுந் தமிழை நன்றாய்ப் -- பேசுமற வாதே !
பெற்ற தமிழ் நாட்டின் -- பெருமை குறைக் காதே

பெரியோர் பேசும் போது -- குறுக்கில் பேசல் தொல்லை
பிஞ்சில் பழத்திற் குள்ள -- சுவையி ருப்ப தில்லை
தெரியா விட்டால் கேட்பாய் -- தெரிந்தார் சொல்லும்
                                சொல்லைத்
திரியாதேநீ காடு -- மேடு பள்ளம் தொல்லை!

எரியும் விளக்கை வாயால் -- என்றும் ஊதல் தீமை
இனிதாய்த் தமிழில் பேசத் -- தெரியாதவன் ஊமை
மரியாதைகாட்டாமை -- வணங்கு வானோர் ஆமை
வாழ்த்துக எந்நாளும் -- வளர் தமிழ்ச் சீர்மை

( 245 )





( 250 )





( 255 )






( 260 )





( 265 )





( 270 )


தாயும் சேயும்

அன்னைதன் பிள்ளையை அணைத்தாள் -- அதனால்
கோடையிற் குளிர்புனல் ஓடையிற் குளித்தாள்
குழந்தை அசைத்த குளிர்மலர்க் கையவள்
உடலிற் படுமவள் உயிரே சிலிர்க்கும்!
அன்னை சுவைத்தஅச் சின்னஞ் சிறுகால்
வடியும் சாற்றுக் கொடிமுந் திரிக்குலை!
செந்தா மரையின் சிற்றிதழ் போன்ற
இமையிடை உலவும் எழிற்கரு வண்டெனும்
கண்ணும் கண்ணிற் கலந்த ஒளியும்,
உண்ண உண்ண உளந்தெவிட்டாது!

பின்னிய தடுக்கில் வண்ணத் துகில்மேல்
சின்னதாய் அமுதச் சேற்றால், திருந்திய
அச்சிற் பதித்தெடுத்(து) ஆவியும் சேர்த்த
பச்சைக் குழந்தை பால்ஒழுகு வாயொடு
கால்கை அசைத்துக் கருமயிர் அசைய
மேற்செலும் பார்வை மின்னிக் கிடப்பதை!
பெற்றவள் அன்பு பெருகப் பெருக
உற்றுப் பார்ப்பாள் உவப்பாள்; சிரிப்பாள்!

தன்னரும் உடலைத் தரையில் தாழ்த்துவாள்
அன்புறு குழந்தையின் அழகு முகத்தொடு
தன்முகம் சேர்ப்பாள்; தாங்கா மகிழ்ச்சியில்
தன்னிதழ் பொன்னிதழ் மேல்வைத்து
அன்பி லுரிஞ்சுமுத்தம் அனைத்துலகு விலைபெறுமே.


( 275 )




( 280 )





( 285 )




( 290 )





( 295 )
அன்னையின் அன்பு

தூங்கா விடிற்பிள்ளை, தூங்காள்! பிணிவகையால்
தீங்காயின் தீங்குறுவாள் ஊண்எதுவும் -- வாங்காள்!
சமைப்பதற்கோ தையல்? மக்க ளுலகை
அமைப்பதற்கே! அவ்வன்பரிது.

படிப்பாள் பயன்நுகர்வாள் பாங்காகச் சோறு
வடிப்பாள் வரும்விருந்தை ஓம்பத் -- துடிப்பாள்
எதுசெயினும் கைப்பிள்ளை எண்ணம் மறவாள்
அதுவும் உலகில் அரிது.

பால்குடிக்கும் பிள்ளை பதறாமல் ஓர்கையை
மேல்வளைத் தொருக்கணித்து, மேனியோ -- நால்கையோ
சாற்றா யினும்அசையா தவ்விரவைத் தான்கழிக்கும்
நற்றாய்சீர் ஞாலத்தரிது.





( 300 )





( 305 )