பாரதிதாசன்
பன்மணித்திரள்
குழந்தைக்கு அழைப்பு
தாய் தந்தை போட்டி
[தோழியிடம் இருக்கும் குழந்தையை நோக்கித் தாய் தன் கையேந்தியபடி]
|
தாய்; என்னிடம்
வா சின்னப்பா!
தந்தை; என்னிடம் வா பொன்னப்பா!
தாய்; பால் கொடுப்பாள் அன்னை
படுத்த ணைப்பாள் அன்னை
தாலாட் டுவாள் அன்னை -- நீ
தாவிடுவாய் என்னை
என்னிடம்
வா சின்னப்பா.
(கருநாடக
தேவகாந்தாரி)
தந்தை; அம்மா ஒரு வம்பி
அவளையே நீ நம்பிச்
செம்மை யாய்வி ரும்பி -- நீ
செல்ல வேண்டாம் தம்பி.
என்னிடம்
வா பொன்னப்பா.
(வலச்சி)
தாய்; அப்பா தாம்அ டிப்பார்
அம்மா தான்அ ணைப்பாள்
இப்போதென்மேல் தப்பா -- உனக்
கென்மேலேவெ றுப்பா?
என்னிடம்
வா சின்னப்பா.
(காப்பி)
தந்தை; ஆசையுன்மேல் இல்லை
அவள் கடிப்பாள் பல்லை -- அவள்
ஏசுகின்ற சொல்லை -- நீ
ஏற்காவிட்டால் தொல்லை,
என்னிடம்
வா பொன்னப்பா.
(சிந்து
பைரவி)
தாய்: காதலோஎன் மீது
கடுகடுப்புன் மீது -- உனக்
கேதுதுணை ஓது -- தம்பி
யானுக்கே தோது
என்னிடம்
வா சின்னப்பா.
(பியாக்)
தந்தை; உன் தாயைம றந்தேன் -- அவள்
உதவியும்து றந்தேன் -- நீ
இன்பமென்ற றிந்தேன் -- உனை
ஏந்தநான்ப றந்தேன்
என்னிடம்
வா பொன்னப்பா.
(கமாஸ்)
தாய்; பிள்ளைக்கான வாய்ப்பே -- தன்
பெற்றதாயின் காப்பே -- இங்
குள்ளவரின் ஏய்ப்போ, உயிர்
உருக்கும்வேலந் தோப்பே.
என்னிடம்
வா சின்னப்பா.
(சுருட்டி)
தந்தை; அன்னைகெட்டிக் காரி -- அவள்
அதிகப்பேச்சுக் காரி
என்னையேநீ கோரி -- வா!
எடுத்தணைப்பேன் வாரி
என்னிடம்
வா பொன்னப்பா. |
( 5 )
( 10 )
( 15 )
( 20 )
( 25 )
( 30 )
( 35 )
( 40 )
|
துடைப்பிள்ளைக்குத் தொடக்கக் கல்வி!
|
அப்பா
என்றுசொல் -- எங்கே?
அப்பா என்றுசொல்
அப்பா அப்பா. அப்பா
அப்பா என்றுசொல் -- எங்கே
அப்பா என்றுசொல்.
திப்பி வடித்த தேனைப் போலச்
சிப்பி உடைத்த முத்தைப் போல
முப்பெரு வேந்தர் வழிவந்தவனே,
முத்தமிழேஉயிராய்வந்தவனே
அப்பாவும் நானும் செய்தவ நிலத்தில்
அன்பு விளைக்க விளைந்தாய் மகனே (அப்பா)
குறள் படித்தால் அறம்பு கட்டும் -- என்
கொம்புத்தே னேஅது நாளைக்கா காட்டும்
நிறை மூன் றெழுத்தே இன்பம் கொட்டும்
நேரே உன்வாய் இன்றுதிறக்கட்டும் (அப்பா)
"அம்மா" என்றாய் பாதி தானே?
அப்பா என்மீதித் தேனே
செம்மை யாய்ச்சொல் அதனைத் தானே
செவிநான் பெற்ற பேறென்பேனே (அப்பா)
|
( 45 )
( 50 )
( 55 )
( 60 )
|
இளையமாணவர் திருநாள்
(அகவல்)
காலை
|
காலையில்
எழுந்து வயிறு கழித்துப்
பாலைப் போலப் பல்லைத் துலக்கிப்
பட்டுப்போல உடம்பு குளித்துச்
சிட்டுப் போலத் தலையை வாரித்
தடுக்கில் குந்தித் தந்ததை உண்டும்
உடுப்பை உடுத்திச் சுவடி எடுத்தும்
துள்ளிக் கூடம் விட்டுப்
பள்ளிக்கூடம் பறக்குமாம் கிளியே! |
( 65 )
|
நல்லாசிரியர்
பாடம் சொல்வார்;
எல்லா ரும்தாம் இருந்து கேட்பார்,
கெட்ட பிள்ளைகள் கேட்க மாட்டார்.
நல்ல பிள்ளைகள் நன்றாய்க் கேட்பார்!
அண்டையில் இருக்கும் பிள்ளைக ளோடு
சண்டை யிடுவது சரியே இல்லை!
நத்தை போல எழுதலா காது;
முத்தைப் போல எழுத வேண்டும்
கணகண வென்று வீட்டு
மணி அடித்ததும் வருமாம் கிளியே!
|
( 70
)
( 75 )
|
நடுப்பகல்
உணவு நன்றாய் உண்டு
படிப்பதை எல்லாம் நன்றாய்ப் படித்து
முழுதும் கணக்கைப் போட்டு முடித்தும்
எழுதச் சொன்னதை எழுதி முடித்தும்
தப்பா சரியா என்று சொல்ல
அப்பா இடத்தில் அதையே காட்டித்
தெருவோ ரம்பள் ளிக்கு
விரித்த குடையுடன் போகுமாம் வெல்லமே;
|
( 80
)
( 85 )
|
பள்ளிக்
கூடம் போகும் போது
துள்ளிக் குதிப்பார் துடுக்குப் பசங்கள்;
ஒட்டமாக ஓடக் கூடாது!
வீட்டுத் திண்ணையில் ஏறக் கூடாது!
போகும் போது வம்பு கூடாது!
நேராய்ப் பள்ளிக் கூடம்
சீராய்ப் போகுமாம் செல்லக் கிளியே! |
( 90 )
|
மாலை வேளையில்
பள்ளிக் கூட
வேலை முடித்து வீட்டுக்கு வந்து
பழமோ பயறோ அம்மா கொடுத்ததை
அழாமல் வாங்கி அமைவாய் உண்டு
தெருவோ ரத்தில் சிரித்து விளையாடி
விருவி ரென்று வீட்டுக்கு வந்து
விளக்கின் அருகில் சுவடி விரித்துப்
பளிச்சென்று மனத்திற் படியப் படித்துச்
சோறுண்டு தூங்கும் பிள்ளைபோல்
வேறுண்டா வீடு நிறைந்த செல்லமே?
|
( 95
)
( 100 )
|
தெருவோரம்
இடது பக்கம்
செல்லும் நல்ல பிள்ளை!
வருபவர்மேல் இடித்துக் கொள்ளும்
பிள்ளை ஒரு நொள்ளை.
மாடு வரும் குதிரை வரும்
வருமல்லவா வண்டி?
வரக்கண்டும் விலகாமல்
இருப்பவன் ஓர் நொண்டி.
ஆடுவரும் எருமை வரும்
முன்னே போனால் மிதிக்கும்'
அழுக்கு மூட்டைக் கழுதைவரும்
பின்னே போனால் உதைக்கும்
மணி அடிக்கும் ஊது கேட்கும்
ஏமாறக் கூடாது
வண்டி வந்தால் தீமையல்ல
வா? செவிடாகாது?
கல்லிருக்கும் முள்ளிருக்கும்
காலிற்பட்டால் தொல்லை,
கண்ணிருந்தும் காணாதவன்
போல முட்டாள் இல்லை.
புல்லிருக்கும் அதற்குள்ளே
பூச்சிபொட்டுக் கிடக்கும்
புற்றிருக்கும் அதற்குள்ளே
பாம்பிருந்து கடிக்கும்!
|
( 105
)
( 110 )
( 115 )
( 120 )
( 125 )
|
எடுப்பு
:
நூலைப்படி -- சங்கத்தமிழ்
நூலைப்படி -- முறைப்படி
நூலைப்படி
உடனெடுப்பு
:
காலையிற்படி கடும்பகல்படி
மாலை, இரவு பொருள்படும் படி
நூலைப்படி
அடிகள்
:
கற்பவை கற்கும்படி
வள்ளுவர் சொன்னபடி
கற்கத்தான் வேண்டும் அப்படிக்
கல்லாதவர் வாழ்வதெப்படி? நூலைப்படி!
அறம்படி பொருளைப் படி
அப்படியே இன்பம் படி
இறந்ததமிழ்நான் மறை
பிறந்ததென்று சொல்லும்படி நூலைப்படி!
அகப்பொருள் படி அதன்படி
புறப்பொருள் படி நல்லபடி
புகப் புகப் படிப்படியாய்ப்
புலமை வரும் என்சொற்படி நூலைப்படி!
சாதி என்னும் தாழ்ந்தபடி
நமக்கெல்லாம் தள்ளுபடி
சேதி அப்படி தெரிந்துபடி
தீமை வந்திடுமேமறுபடி நூலைப்படி
பொய்யிலே முக்காற்படி
புரட்டிலே காற்படி
வையகம் ஏமாறும்படி
வைத்துள்ளநூற்களை ஒப்புவதெப்படி நூலைப்படி!
தொடங்கையில் வருந்தும்படி
இருப்பினும் ஊன்றிப்படி
அடங்காஇன் பம்மறுபடி
ஆகும்என்ற ஆன்றோர்சொற்படி நூலைப்படி! |
( 130 )
( 135 )
( 140 )
( 145 )
( 150 )
( 155 )
|
கணகண வென்று மணியடித்தது
காது கேட்கலையா? -- பாப்பா
காது கேட்கலையா? தம்பி
காது கேட்கலையா? -- உன்
கையில்சுவடிப் பையை எடுக்க
நேரம் வாய்க்கலையா?
முணுமுணு என்று மூலையிலே
நின்றால் என்னவரும்? -- பாப்பா
நின்றால் என்னவரும்? -- தம்பி
நின்றால் என்னவரும்? -- என்
முன்னேவந்து சொன்னால் வாயின்
முத்தா சிந்திவிடும்
பலகை இல்லையா எழுதப்
பலபம் இல்லையா? -- பாப்பா
பலபம் இல்லையா? -- தம்பி
பலபம் இல்லையா? -- வீட்டுப்
பாடம்எழுத மறந்தது உண்டா,
அந்தத் தொல்லையா?
சலவை செய்து வந்தசட்டை
வேண்டும் என்றாயா? -- அழுக்கு
வேண்டாம் என்றாயா? -- தம்பி வேண்டாம் என்றாயா? -- இதோ
சலவைச்சட்டை போட்டுக் கொண்டாய்
சிரித்துக் கொண்டாயா?
மனத்தில் உள்ளதை எடுத்துச்சொல்ல
வாயும் இல்லையா? -- பாப்பா
வாயும் இல்லையா? -- தம்பி
வாயும் இல்லையா? -- நீ
வாய்திறந்தால் கொடுக்கத் தந்தை
தாயும் இல்லையா?
தனித்தமிழில் கலகல என்று
தட்டாமல் பேசு -- பாப்பா
தட்டாமல் பேசு -- தம்பி
தட்டாமல் பேசு -- நீ
சாலைஓரம் நடக்க வேண்டும்
எங்கே கை வீசு! |
( 160 )
( 165 )
( 170 )
( 175 )
( 180 )
( 185 )
( 190 )
|
குருடன் இடத்திலும் திருடாதே ஒன்று!
கொல்லுமே உன்னை உன்நெஞ்சே நின்று (குருடன்)
திருடன் ஒருதரம் தப்பிவிட் டாலும்
திருடித் திருடித் திருடிமேன் மேலும்
பெரிய திருடனாய் பலஆண்டின் காலம்
பெறுவான் தண்டனை! சிரிக்குமே ஞாலம்! (குருடன்)
பசித்த போதிலும் பொறுப்பது பாங்கு
பருக்கை ஒன்றைத் திருடலும் தீங்கு
பிசைந்த கூழுக்கும் பிறர்உப்பு வேண்டாம்
பிழை செய்யும் நண்பனையும்விட்டு நீங்கு (குருடன்)
நீபடி! நீஉழை! நீபிழை நன்றாய்
நீபிறர்க் குதவிசெய் நற்குணக் குன்றாய்
நீபடி செந்தமிழ் நூலெலாம் ஒன்றாய்
நீதமிழ்க்குள்ள பகைஎல்லாம்
வென்றாய் (குருடன்)
|
( 195
)
( 200 )
( 205 )
|
உடற்பயிற்சியும் கறிகாய் விளைவும்
|
வாடகைக்கோர்
சின்னநிலம் வாங்கிக் கொண்டானே
குப்பன் -- வாங்கிக்கொண்டானே
மண்வெட்டியை விடியுமுன்பு தாங்கிக்கொண்டானே!
மேடிடித்தும் பள்ளந்தூர்த்தும் மிக உழைத்தானே
குப்பன் -- மிகஉழைத்தானே
வேளையுடன் அலுவலுக்கும் விரும்பிச்செல்வானே!
பாழடைந்ததொர் கிணற்றுநீரில் பயனும்கண்டானே
குப்பன் -- பயனும்கண்டானே
பத்துத்தோண்டி நீரைமொண்டு பாய்ச்சிடுவானே!
வாழைநட்டான் கீரைநட்டான் அவரைபுடலைகள்
குப்பன் -- அவரை புடலைகள்
வாங்கிநட்டான் நாளடைவில் ஓங்கவைத்தானே!
காலைமாலை உடற்பயிற்சி கண்டுவந்தானே
அதனால் --கண்டுவந்தானே
கையும்மெய்யும்
நல்லுறுதி கொண்டுவந்தானே
பாலைத்தரும் கறவைக்கும்புல்
பார்த்துக்கொண்டானே
குப்பன் -- பார்த்துக்
கொண்டானே
பச்சைக்கறி காய்கள்எல்லாம்
விளைத்துக்கொண்டானே!
|
( 210 )
( 215 )
( 220 )
( 225 ) |
அக்கக்கா
என்றதாம்
அழகான என்கிளிப்
அக்காவும் வந்தனள்
அங்கே இருந்ததொரு
நிற்காமல் ஓட்டனாள்
நில்லாமல் போனதுசு
அக்காஉள் ளேபோகும்
அக்கக்கா என்றதாம்
அஞ்சாமல் ஒருதிருடன்
அக்காவைப் பார்த்தான்ப
அஞ்சாறு கோவைப்ப
ஆறேழு கொய்யாப்ப
மஞ்சள் பலாச்சுளை
மட்டாய்க் களாப்பழக்
கொஞ்சமாய் வேர்க்கடலை
கொடுத்தனள் உண்டதாம் |
கிள்ளை
பிள்ளை
தானே
பூனை
அக்கா
ருக்கா
முன்னம்
பின்னும்.
வந்தான்
றந்தான்
ழத்தை
ழத்தை
வித்தை
கொத்தை
முத்தைக்
தத்தை
|
( 245 )
( 250 )
( 255 )
|
ஒருதேன் கூட்டில் இரண்டா
யிரம் அறை
யிருந்தன; அழகாய் இருந்தன. தூய்மையாய்
இருந்தன. ஒன்றுபோல் இருந்தன அன்றோ!
அவ்வறை தோறும் அழகிய குழந்தைகள்
செவ்வனே வாழும். தேன்குடித் துறங்கும்.
என்ன அழகிய ஏற்பாடு! மிகமிக
நேர்மை யான நிறுவனம் அன்றோ
தழைந்த வாழ்வு தாய கம்பெறக்
குழந்தைகள் தம்மைக் கூட்டி வளர்ப்பது
முடியா தென்று முணுமுணுப் பார்க்கு
முடியு மென்று மொழிந்தன ஈக்கள்!
ஈக்கள் செய்தன இச்செயல் இந்நாட்டு
மாக்கள் செய்ய மதிபடைத்திலரே!
ஈன்றவர் ஈன்றார் இளங்குழந் தைகளை
தேன்கூட் டைப்போல் திருந்த வளர்ப்பது
நாட்டை முன்னின்று நடத்துவார் கடமை.
ஒருநாட்டிலுள்ள உடைமை அனைத்தும்
பெருநாட்டத்தோடு பேசுவதாயின் அந்நாட்டுக் குழந்தைகட் கன்றோ உரியவை?
இந்நாட் டவர்க்கெலாம் ஏற்றவை செய்வதாய்த்
தலைமை பெற்றவர் தங்கள் குழந்தையின்
நிலையை மட்டும் நினைத்தால் போதுமா?
தூய செவிலித் தாயை அமைத்தும்
நோயுறா வண்ணம் நுண்முறை நாடியும்
ஆவன செய்வதை அறியாதவர்யார்?
எம்பிள்ளைகட்கே யாம்வாழ் கின்றோம்
செம்புபோல் செழும்பொன் செலவழிக் கின்றோம்
என்று நாளும் இயம்பினார் அன்றோ?
அதுபோல் அன்னைநாட்டு அருஞ்செல் வங்களை
வளர்க்கும் பொறுப்பை வாங்கவேண் டாமா?
இவ்வாண்டில் இத்தனை இளங்குழந் தைகள்
செவ்வெண்ணெய் இன்றிச் செத்தன என்ற
நிலைமுழுதறிந்தும் தலைமுழுகித் தீர்ப்பதா?
மாந்தர் பொதுஇயல்பு மண்ணாகலாமா?
மனச்சான்றுமா வருத்த வில்லை!
தெருத்தோறும் தெருத்தோறும் பெருத்த வீடு
மருத்துவர், மருந்து, திருத்தச் செவிலியர்
கட்டில்கள், தொட்டில்கள், கணக்கர் அமைக்க!
தெருத்தோறும் கருப்பெற்ற சேயிழை மாரைக்
கருத்தொடு நாடொறும் கண்கா ணிக்க!
குழந்தை பெறும்நாள் குறுகிடில் அவரை
மருத்துவ வீட்டில் வரவ ழைக்க
பெறும்நோய் இன்றிப் பெறும்வகை செய்க!
குறுநகை மதலையைக் குளுகுளு வென்று
மனமார்ந்த அன்பொடு வளர்த்து வருக
இரண்டாண் டானபின் இந்தா என்று
குழந்தைப் பள்ளிக்குக் கொடுத்து விடுக!
இன்னவை அனைத்தும் இன்னே செய்து
பொன்னாடாக்குதல் பொதுக்கடன் நமக்கே
குழந்தை வளர்ப்பு நிறுவனம்
தழைந்து திராவிடத் தாயகம் வாழ்கவே!
|
( 260 )
( 265 )
( 270 )
( 275 )
( 280 )
( 285 )
( 290 )
( 295 )
( 300 )
( 305 )
|
'காட்சி' என் றெழுத்து
தம்பி -- சிலர்
காக்ஷிஎன் பார்அது தப்பாம்
காட்சிஎன் னும்பெயர் தம்பி -- கேள்
காண்எனும் சொல்லின்வி ளைவாம்!
'மாட்சிஎன் றெழுது தம்பி -- அது
மாண்எனும் சொல்லின்வி ளைவே!
மாட்சிஎனில் பெருமை யாகும் -- இந்த
வகையை அறிந்துகொள்ள வேண்டும்!
அடிக்கடி 'உத்யோகம்' என்பர் -- அதை
அலுவல்என் றுரைத்திடு தம்பி
படிப்பது வாசித்தல் இரண்டில் -- உன்
பழந்தமிழ் முன்னது தம்பி!
உடுத்திடும் வேட்டியை வேஷ்டி -- என
உரைப்பதும் பெரும்பிழை அன்றோ?
தடுப்பினும் சாதமென்பார்கள் -- அதைத்
தமிழினில் சோறென்று நீசொல்! |
( 310 )
( 315 )
( 320 )
|
வானத்து நீலப்பட்டாடை
-- அதில்
வாரிஇ றைத்தமுத் துக்கள்
மேனி சிலிர்த்திடும் கண்டால் -- அவை
விண்மீன்கள் என்றுசொல் வார்கள்
மீன்என்று சொல்லுவ தேனோ -- அவை
மின்னிடும் காரணம் தானோ;
நீர்நிலை மீன்கள்நம் மீன்கள் -- அவை
நீலவானக்கடல் மீன்கள்
|
( 325
)
( 330 )
|
கொய்யாப் பழத்துக்குக்
கொம்புண்டு காலுண்டு
கூறும் எருதுக் கிரண்டும் இல்லை
கையால் எழுதிய எழுத்தினை நீயேஉன்
கண்ணினால் பார்த்துச் சொல் பிள்ளாய்!
மெய்என்று சொல்வதைப் பொய்யென்று சொல்வார்கள்
வேடிக்கையாயிது பிள்ளாய்?
ஐயா ஒருவரிடம்சென்று கேள்இதை
அவர் மெய்யும் பொய்யாகலாமா?
|
( 335 )
( 340 )
|
|
|
|