முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு | 169 |
Untitled Document | | மன்னும் தஞ்சை மாநகரில் வளரும் நல்நா டகசபையெம் அன்னை தேவி பராசக்தி அருளால் என்றும் வாழியவே. |
1066 | | செய்யகம் சூழுமூர் செந்தமிழ் ஓங்குமூர் வையகம் போற்றழகு வாழுமூர் - மெய்யுணர்ந்து இந்திரன் தேர்விட் டிறங்குமூர் இந்தவூர்க்கு எந்தவூ ராகும் இணை? |
1067 | | கண்டவர்தம் கண்ணும் கருத்தும் கவருமொரு மண்டபமாய் ஓங்கி வளர்ந்ததால் - பண்டுமுதல் செய்தமிழ்த் தாய்மீது தேரூர்ப் பெருமக்கள் ஐயமறப் போற்றிவரும் அன்பு. |
1068 | | நாவிற் குடியிருந்து நல்லமுதச் சொல்லுதவும் தேவி அழகி திருவருளால் - மேவுபுகழ் நன்னகர மாம்தேர் நகரமென்றும் வாழியவே பொன்னகரம் போலப் பொலிந்து. |
1069 | | சிந்தைமகிழ் நல்லூராம் தென் சுசிந்தை பாலூராம் பைந்தமிழைப் போற்றும் பழவூராம் - வந்துநிதம் இந்திரன் தேர்விட் டிறங்கூராம் இவ்வூர்க் கெந்தவூ ராகும் இணை |
1070 | | சித்தம் களிக்குமூர் செய்யகம் சூழுமூர் முத்தமிழு மோங்கி முழங்குமூர் - நித்தமுமே இந்திரன் தேர்வந் திறங்குமூர் இந்தவூர்க்கு எந்தவூ ராகும் இணை |
1071 | | மாந்தரெலாம் போற்றி வணங்கும் பெருமான்எம் காந்திமதி நாதன் கருணையினால் - ஏந்துபுகழ் நன்னகராம் நெல்லை நகரமென்றும் வாழியவே பொன்னகரே போலப் பொலிந்து. | |
|
|