பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு171

Untitled Document
  நாடு புகழும் பாளையமா
நகர சபையிந் நானிலத்தில்
நீடு வாழ எமையாளும்
நெடுமா லருளை வேண்டுவமே!

தலைவர் வாழ்த்து

1076 ஐயமறப் பன்னாலும் ஆய்ந்து கற்றோன்,
     அயராது பொதுநலத்துக் குழைக்கும் அன்பன்,
மெய்யுணர்ந்த காந்திமகான் விதித்த வெல்லாம்
     வேதவிதி என்று கடைப் பிடிக்குந் தொண்டன்,
செய்யநெறி கண்டுசபைத் தலைமை தாங்கும்
     திறலோன்சுப் பிரமணியச் செல்வன் என்றும்
வையமெலாம் புகழ்பாடி வணங்கும் செந்தில்
     மாமுருகன் திருவருளால் வாழ்க மாதோ!

155. மகாத்மா காந்தி ஞாபகார்த்த ஸ்தூபி

1077 மங்கை மதுரம், மணவாளன் கிருஷ்ணன் இவர்
செங்கைப் பொருளின் திருப்பணியாம் - பொங்குபுகழ்
காந்திமகான் கற்பித்த கற்பனைகள் அத்தனையும்
ஏந்தியெம் தூபி இது.

156. தெ. தி இந்துக் கலாசாலை

1078 தேசிக விநாயகநின் சேவடியைச் சேவித்து
வாசமலர் தூவி வணங்குகின்றேன் - மாசிலா
இந்துகலா சாலைவளர்ந் திந்நாகை நன்னகரில்
சந்ததமும் வாழவரம் தா.

1079 எத்தொழிற்கும் முன்னின் றெமக்குத் துணைபுரியும்
அத்திமுகத் தண்ணல் அருளாலே - சித்தமகிழ்
இந்நாகை நன்னகரில் இந்து கலா சாலை வளர்ந்
தெந்நாளும் வாழ்க இனிது.

1080 பன்னாட்டு நாவலரும் பாராட்டும் நாவரசன்
கன்னாட்டித் தந்த கலாசாலை - சொன்னாட்டி
இந்நாகை நன்னகரில் ஈசன் திருவருளால்
எந்நாளும் வாழ்க இனிது.