பக்கம் எண் :

204கவிமணியின் கவிதைகள்

Untitled Document
  .அல்லும் பகலும் அயர்விலா துழைப்போன்.
சாதிசமய சாத்திர கோத்திர
வேற்றுமை காணா வீதியி லுலாவுவோன்,
தவத்திற் பெரியோன்; தமிழ்ப்பயிர் வளர்ப்போன்,
களங்கமில் உளத்தாற் கைம்மக வனையோன்,
அன்பால் எவரையுந் தன்பாற்கொள்வோன்,
புதுவையம் பதிவாழ் புண்ணியன், எங்கும்
துதிபெறு சுவாமி சுத்தா னந்த
பாரதி யெனப்பெயர் பகரும்
சீரிய ஞானச் செல்வமிக் கோனே.

221. புதுவைக் கல்விக் கழக வெள்ளிவிழா மலர்

1238 பாரில் என்றும் சுதந்திரத்தைப்
     பாது காக்கும் நகரமெனப்
பேரு யர்ந்த புதுவைநகர்
     பேணுங் கல்விக் கழகத்தின்
சீரணிந்த வெள்ளிவிழாச்
     சிறப்பில் மலர்ந்த மலர்கங்கை
நீர ணிந்த இறையருளால்
     நித்தம் வாழ்க வாழ்கவே!

222. தமிழன் இதயம்

1239 இற்றைத் தமிழன் இதயத் துடிப்பினைஇச்
சொற்றரு சித்திரத்தில் தோன்ற வைத்தான் - சுற்றறிந்த
ஓவிய நற்கலைஞன் ஓதுபுகழ் நாமக்கல்
பாவலன் ராமலிங்கம்பார்.

223. ரஸிகமணி

1240 கூடி யிருக்கும் நண்பரெலாம்
குடித்து மகிழ்ந்து கூத்தாட,
பாடிப் பாடிப் பாடலிலே
பாலும் தேனும் கலந்துதவும்