பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு225

Untitled Document
  தென்னிரத புரியதனில் தேசிகவி
     நாயகத்தின் முளம்சா ராதே
பின்னரும் கிரண மழைபொழிய
     சிதம்பர கிருஷ்ண வமைதியே

259. சரத் காலம்

1333 பொன்னொளியும் மரகத்தின் பொலிவும் செந்நெற்
     புலங்காட்ட, அதன்மீது நிழலை வீசும்
பன்னரிய சரற்கால மேகந் தன்னைப்
     பரிதி விரைந்தெழுந்தோடிவெருட்டிச் செல்ல,
தன்னைமறந் தொளிமயக்கில் மயங்கி வண்டு
     சாருமலர்த் தேன்மறந்து சுழன்று பாட
மன்னுகுளம் நதிக்கரையில் வாழுந் தாரா
     மனங்களித்துக் குரலெழுப்பித் திரியும் மாதோ.

1334 நீலமெடு வான்முகட்டைத் தாக்கி நிற்போம்;
     நிரந்தோடி வெளியிடத்தைக் கொள்ளை கொள்வோம்;
வேலையிது காலையெதும் செய்ய வேண்டாம்;
     வீட்டினுக்கு யாவரும் திரும்ப வேண்டாம்;
மேலெழுந்த பெருவெள்ள நுரையே போல,
     விளங்கும் எழிற் சிரிப்பினொளி மிதக்கு தம்மா!
சீலமிகு சோதரரே! கூடி இன்று,
     தெம்மாங்கு பாடிவிளை யாடு வோமே!

1335 விரித்துவிடு பாய்காற்றுப் பிடித்து ஓடம்
    விரைந்துகுதிப் தோடியழ கமையக் கண்டேன்;
பெருத்தநிதி யிருக்குமிடம் பாடக் கேட்டேன்;
    பெறும்வழிகள் அறிந்தாசை பெரிதும் கொண்டேன்!
திருத்தமுறச் சுடரொளிதான் முகத்தல் வீசத்
     திரண்டுபுயல் பின்வர, மாலுமியும் நின்றான்
கருத்தொடெதைப் பாடுவன்யான், களிப்பி லொன்றாய்
     கண்ணீரும் புன்னகையும் கலந்தது அம்மா!

1336 உள்ளமதை ஆகாயம் பரவ விட்டேன்;
     உன்கரமும் என்கனவில் தீண்டப் பெற்றேன்
மெள்ள உன்றன் முகமறைக்கும் திரையை நீக்கி
     விழிகளையான் கண்டுதொழக் கருணை செய்வாய்