பக்கம் எண் :

244கவிமணியின் கவிதைகள்

Untitled Document

    முடிவில்,
மிஷியன் தெரசர் - மிகத்தய வுள்ளவர்,
பொறுமை நல்லகைப் புண்ணிய முள்ளவர்,

300   இறைவன் அடிகள் இதயத் துள்ளவர்
வந்தொரு வாரம் மருந்து கொடுத்துக்
கணவரை மீட்டிஎம் கைகளி லாக்கினர்.
இவர்,
காட்டை வெட்டிக் கஷாய மிடவோ

305   கடலைக் குறுக்கிக் குடிநீர் காய்ச்சவோ
மலையை யிடித்துச் சூரணம் வைக்கவோ
சொல்லி, எங்களைத் தொந்தரை செயவிலை;
அன்றியும்,
பணமோ காசோ பதிவெற் றிலையோ,

310   எமக்குச் செலவுகள் ஏற்பட் டதுமிலை.
இவ்வறம்,
வையகத் தென்றும் வளர்க, வளர்கவே!
வையகத் தென்றும் வளர்க! வளர்கவே!