பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு249

Untitled Document

    வரவில்லை யென்றுநீர் வைரவன் மகனை
எட்டி யடித்த ஏதுவி னாலே,
எத்தனை ரூபாய் வாரி யிறைத்தீர்?

425   இதுநாள் வரையிலும் எங்கட் காக
எதைநீர் செய்தீர்? எதைநீர் தந்தீர்?
மக்கட் கெல்லாம் வாரிக் கொடுத்தீர்.
ஒருபூ வாகிலும் உழக்கு நெல்லு
பொலியள விந்தா கொண்டு போஎனத்

430   தந்ததும் உண்டோ? சரி, சரி, இன்னும்
உள்ள நிலங்களை ஒவ்வொன் றாக
ஒற்றி கொடுத்திடும்; மலரணை ஓலைகள்
எத்தனை வேண்டுமோ எழுதியும் வைத்திடும்;
பேர்க்கூ லிப்பிர மாணம் செய்யும்;

435   இட்ட தானம் எழுதிக் கொடுத்திடும்;
வேண்டு மானால் விலையும் கொடுத்திடும்;
மனைவி பேர்க்கும் மக்கள் பேர்க்கும்.
உகந்துடை மைப்பிர மாணம் ஒன்றுநீர்
இருக்கும் போதே எழுதியும் வைத்திடும்;

440   மக்களை வீட்டில் வாழ வைத்திடும்;
எங்களைத் தெருவில் இறக்கி விட்டிடும்.
ஆசை அங்கே, அன்பு அங்கே;
பூசை இங்கே! போசனம் இங்கே!
ஆரைக் கேட்டு நீர் ஐந்துகல் யாணம்

445   அடுக்கடுக் காகச் செய்தீர்? ஐயா!
பட்டப் பெயரும் 'பஞ்ச கல்யாணிப்
பிள்ளை' யென்றுநீர் பெற்றுவிட் டீரே!
அன்னியர் பொருளை அபகரிப் பதிலும்,
ஊரார் பொருளை உண்டுவாழ் வதிலும்,

450   கைதேர்ந் தவர்கள் காரண வர்களே!
கள்ளர் மறவர் கணக்கரும் இவருக்கு
எள்ளள வேனும் இணையா வாரோ!
கன்னக் கோலும் கையில் எடாமல்,
எழுது கோலும் இறகும் எடாமல்