முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு | 305 |
Untitled Document "மதலாய்! நின்னடி மலரிணைத் தொழுதேன். அவனே நீயாம் ஐயம் அதற்கில்லை! பகவன் நீயே! பரமன் நீயே! புனிதன் நீயே! புராணன் நீயே! தருமன் நீயே! தலைவன் நீயே! ஆதிநீயே! அறவோள் நீயே! ஆயிர வாரத் தாழியான் நீயே! உண்மை ஒளியால் உள்ளிருள் போக்கி நன்மை விளைக்கும் ஞாயிறு நீயே! யானும் இன்றுஉன் இணையடி பணிந்து, பாரிற் பிறந்த பயனெலாம் பெற்றேன். மன்னர் மன்னவ! மானிடத் தருவில் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகட்டு அப்பால் ஒருமுறை மலரும் ஒண்மலர் இதுவாம். மலரிதன் மணமே அறிவின் மணமாய் மனத்தின் மாசு மாற்றிடும், ஐயா! மலரிதன் மருவே அருளின் மதுவாய் மன்னுயிர்க்கு இன்பம் வளர்த்திடும், ஐயா! இம்மா மகனை ஈன்றவர் போல மாதவஞ் செய்தோர் மாநிலத்து உண்டோ? ஆயினம், அரசே! அரிவாள் போன்உன் நெஞ்சினை அறுக்கும் நெடுந்துயர் ஒன்றுஇம் மகவால் உனக்கு வருவது திண்ணம், மங்கையர்க் கரசி, மாயா தேவி! வாழ்க்கையோ துன்ப மயமாம்; அதனால் ஏந்திய முத்தினை ஈன்றபின் இப்பி மாண்டு மண்ணில் மறைவது போல, இற்றைக்கு ஏழாம் நாளில் இறவா இன்ப வீட எய்துவது உண்மையாம்" என்று உரைத்து ஏகினனே. | 38 | |
|
|