பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு307

Untitled Document
    தேனும் தளிரும் சேர்த்துப் பிசைந்து
பூசியே வருத்தம் போக்கினன். ஆங்கே
இத்தனை அன்பு காட்டினன் எனினும்
அவன்,
நோவு நொம்பலம் நோயின் தன்மை
இந்நாள் வரையிலும் யாதுஎன அறியான்.
ஆதலின்,
பறவையின் மீது பாய்ந்த அம்பின்
முனையைத் தனது முழங்கை யதனில்
அமுக்கிப் பார்த்தனன்; ஐயோ! ' என்றனன்;
பிரிந்து பின்னும் பறவையை எடுத்துத்
தாயினும் இரங்கித் தழுவி அணைத்தனன்.
சிறிது நேரம் சென்றபின், அங்கோர்
சேவகன் வந்து தெண்டனிட்டு, 'எங்கள்
அரச குமரன்ஓர் அன்னப் பறவையை
எய்து வீழ்த்தினன்; வீழ்ந்த இடமும்
மலர்மிகு ரோஜா வனமிது வேயாம்;
யாதும் தாமத மின்றி அவனிடம்
அன்னப் பறவையை அனுப்பிடு மாறுஇங்கு
என்னை உன்பால் ஏவினன்' என்றனன்
சேவகன் மொழிஎலாம் சித்தார்த்தன் கேட்டு,
இயம்பிய மறுமொழி இயம்பக் கேண்மின்;
39

வேறு

1484   "எய்த அம்பினால் - பறவை
இறந்து வீழ்ந்திடுமேல்,
எய்த வர்க்காகும் - உரிமை;
யாதும் ஐயமில்லை.
40

1485   நீண்ட சிறிகினிலே - விசைதான்
நின்றி ருப்பதல்லால்,
மாண்ட தில்லைஅன்னம் - உயிர்த்து
வாழு கின்றதப்பா!
41