Untitled Document
1619 | | பாறைகள்மீது வரைந்துவைத்தார் - வழிப் பக்கமும் தூணில் பொறிந்துவைத்தார், ஆறு குளங்கள் துறைகளிலும் - கல்லில் ஆணை அழியாது எழுதிவைத்தார். | 175 |
1620 | | அங்காடி வீதியில் கண்டிடலாம் - சந்தி அம்பலந் தோறுமே கண்டிடலாம்; கங்கா நதிக்கரை எங்கும்இவ் வாணையைக் காணா இடமேதும் இல்லைஐயா. | 176 |
1621 | | அந்நாள் முதலாம் பின்னா ளெல்லாம் மாதமும் மாரி வானம் பொழிந்தது; நாடு செழித்தது; நகரம் சிறந்தது; உண்மை யறிவும் உதய மாயது; செம்மை வளரந்தது; தீமை தேய்ந்தது; புத்தன் உரையைப் பொன்னுரையாக நித்தம் நித்தம் நினைத்த பயனாய்க் கொல்லா விரதம் குவலயத்து எல்லா உயிர்க்கும் இன்பளித் ததுவே! | 177 |
|
|
|