| | சரணம் | |
| | மங்கையர் மாணிக்கமிவளை - மணந்திட மாதவம் செய்தாரு மெவரோ? தங்கவடி வழகி தரள நகையழகி திங்கள் முகத்தழகி செகத்திலிவள் போலுண்டோ? | (புத்தி) |
| | 9. பாரதி மண்டபம் | |
| | இராகம் - வஸந்தா தாளம் - ஆதி | |
| | பல்லவி | |
| 1793 | மண்டபம் வாழ்கவே! - பாரதி மண்டபம் வாழ்கவே! | |
| | அநுபல்லவி | |
| | தண்டமிழ் பேல அவன் தந்த கவிகள் போல, எண்டிசையும் போற்றும் இமைய மலையே போல | (மண்டபம்) |
| | சரணம் | |
| | பாரத சக்திவளர் - பீடமாய் பைந்தமிழ்க் காலயமாய், வீர சுதந்திரத்தின் வெற்றி நிலைக்களமாய் சூரிய சந்திரர் இத் தொல்லுல குள்ளளவும் | (மண்டபம்) |
| | 10. சித்திரை மன்னவன் | |