| | பல்லவி | |
1800 | | பாடிப் பரவு நெஞ்சே! - பக்தியொடு பாடிப் பரவு நெஞ்சே! | |
| | கண்ணிகள் | |
| | தேடும் அடியவர் சிந்தை மகிழ்ந்திட ஆடும் திருத்தில்லை அம்பல வாணனைப் | (பாடிப்) |
| | வாதாவூரர் சொன்ன வாசகம் தீட்டிய வேதப் பரியானை விடமுண்ட கண்டனைப் | (பாடிப்) |
| | பைந்தமிழ் கேட்டுப் பரிசு வழங்கிடும் கொந்தலர் கொன்றைக் குலவு சடையானைப் | (பாடிப்) |
| | வேலையில் கல்தூண் மிதந்திடப் பாடிய சீலனைக் காத்த சிவலோக நாதனைப் | (பாடிப்) |
| | இந்திரற் குற்ற இடரை ஒழித்தானை சுந்தரர் தூதனைச் சோதி சொருபனைப் | (பாடிப்) |