பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு41

Untitled Document
248 சுற்றுப் பொருளெல்லாம் உற்றுநோக்கி -
     சுட்டும் மணிநேரம் கண்டறிவாய்! - அவை
பெற்ற முத்தே! இந்த உண்மை அறிவோர்க்குப்
     பின்னும் கடிகாரம் வேண்டுமாடி?

37. ஸைக்கிள்
249   தங்கையே, பார்! தங்கையே, பார்!
சைக்கிள் வண்டி இதுவே பார்!
250 சிங்கார மான வண்டி,
சீமையிலே செய்த வண்டி.
251 இரும்பாலே செய்த வண்டி
எங்கெங்கும் ஓடும் வண்டி.
252 மாடில்லை, குதிரை யில்லை.
மாயமதாய்ப் பறந்திடும், பார்!
253 தீயில்லை, புகையும் இல்லை.
தீவிரமாய்ச் சென்றிடும், பார்!
254 காலாலே மிதிப்பதனால்,
கடும்விசையில் போயிடும், பார்!
255 ஒன்றன் பின் ஒன்றாக
உருளும்பை தாக்களைப், பார்!
256 அக்காளும் தங்கையும் போல்
அவைபோகும் அழகைப் பார்!


38. ஆகாய விமானம்
257   கப்பல் என்றுமே - மெல்லக்
     கடலில் நீந்துவதாம்
தப்பித் தப்பியே - ரயிலும்
     தரையில் உருவதாம்.

258 வானமீ தெழுவேன் - அங்கே
     வட்டம் சுற்றிடுவேன்;
கானம் மலையெல்லாம் - யான் ஓர்
     கணத்தில் தாண்டிடுவேன்.