பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு421

Untitled Document
அநுபல்லவி
  கன்ன பகவதியே!
     கருணைத் தடங்கடலே!
மன்னர் மகுடம்பூண்ட
     மதுரை மீனாட்சியே!
(மன்னித்)
சரணம்
ஆசைப் பேயாட்ட மெல்லாம்
     ஆடி அலுத்தே னம்மா!
காசைப் பணத்தை நிதம்
     கண்கண்ட தெய்வ மெனப்
பூசை புரிந்த தெல்லாம்
     பொய்யென் றுணர்ந்தே னம்மா!
தாசனாய்இன் றுனையே
     சரணம் புகுந்தே னம்மா!
(மன்னித்)
43. பாதாரவிந்தம் பணிந்தேன்

இராகம் - காம்போதி     தாளம் - ஆதி
பல்லவி
1827 பாதார விந்தம் பணிந்தேன் - கடைக்கண் நீ
     பாலிக்க வேண்டு மையா!
 

அநுபல்லவி

  சாதாரிபாடி வெற்றி
     தமிழசைக் கேயளித்த
நாதா! லீலாவி நோதா!
     நங்கை உமையாள் பங்கா!
(பாதார)

சரணம்

  புத்தகக் காடு முழுதும் - அலைந்தலைந்தென்
     பொழுதெலாம் போக்கி விட்டேன்,
சித்தம் மயங்கி உண்மை
     தெளியாது திகைப்புற்றேன்,
புத்தர்க் கருளும் ஈசா!
      பாபவி நாசா! உன்
(பாதார)