முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு | 75 |
Untitled Document
466 | | சின்னாள் சென்றிட ஓர் - அற்புதத் தீர்க்க தரிசிதோன்றி, எந்நா டும்அறியச் - சிங்க ஏறுபோ லேஎழுந்து; |
467 | | "விடுவீர் எப்பொருளும் - விடுவீர் விட்டுவந் தென்வழியைத் தொடர்வீர் தொடர்வீரே" - என்று சொல்முழக்கஞ் செய்தான். |
468 | | பூமியை ஆளுதற்குத் - தேவ புத்திரன் வந்துதித்தான்; க்ஷேமம் பிறக்குமென - யூதர் சிந்தை களித்திருந்தார். |
469 | | "ஈசன் நாமத்தை - அனுதினம் ஏத்திப் புகழவேண்டும்; தாச தாசனாய்ப் - பணிந்து தருமம் காக்க வேண்டும். |
470 | | உன்னுயி ரைப்போல - இந்த உலகில் உயிரையெல்லாம் மன்னும் அன்பொடுநீ - என்றும் மதித்து வாழவேண்டும். |
471 | | மேவும் எனதாட்சி - அந்த விண்ணுல காட்சியேயாம்; ஏவல் இடம்பொருளில் - எனக்கிங்கு எதும் மயக்கமில்லை." |
472 | | என்னும் இப் பொன்னுரைகள் - நாட்டில் எங்கும் எடுத்துரைத்தான்; மன்னுயிர் காத்திடவே - மண்ணில் வந்து பிறந்தமகன். |
473 | | ஏழை படும்பாட்டை - அவனும் எண்ணி எண்ணிநைவான்; ஏழையொ டேழையாக - உலகில் எங்கும் அலைந்திடுவான். | |
|
|