ஏமகானன் பாராட்டுரை |
|
| திசைதொறும் சென்று தன்புகழ் நிறீஇ விருதுபல கொண்டு வெற்றிக் களிப்பொடு வருவோன் ஒருவன் வடபுலத் திசைவலான் | |
| ஏம கானன் எனும்பெயர் பூண்டோன் | 105 |
| தோமறு மீனவன் தொண்டும், தமிழிசைப் புலமையும், அவன்பெரும் புகழும் செவிமடுத்துக் கலைமலி காளையின் கண்முன் தோன்றி `உரவோய்! இளமையில் ஒருதனி நின்றே | |
| இரவாப் பகலாத் திறமுடன் ஆற்றும் | 110 |
| நின்னிசைப் பணிக்கு நெடிதுவந் தனனே, என்னிசைப் பயிற்சியும் எளிதாய் நினக்கு வருமா றுரைக்க மனங்கொண் டுன்பால் வருதல் உற்றேன்; வடபுலத் திசையும் | |
| ஒருங்குடன் சேரின் ஒளிரும் நின்புகழ்; | 115 |
| அருங்குணம் ஆன்றோய்! விரும்புதி யோ'என, | |
| | |
| மீனவன் ஏளனம் | |
| | |
| வயிறுபுண் ணாக வாய்விட்டுச் சிரித்துக் `குயிலின் குரலொடு கோழியின் குரலும் இணையின் என்னாம்? இந்நாள் வரையும் | |
| துணைவிழி மூடித் தூங்கிய மாந்தர் | 120 |
| கண்விழித் தெழுந்து கருத்துடன் தமிழிசைப் பண்தொடுத் திசைக்கப் பயிலுங் காலை மீட்டும் மற்றோர் இசைபுக விழையின் காட்டும் ஆர்வம் கருகிச் சாகும்; | |
| அரும்பிய ஆர்வம் அணிமல ராகி | 125 |
| விரிந்து நறுமணம் வீசுதல் ஒன்றே என்குறிக் கோள்'என எடுத்துரைத் தனனே; | |
--------------------------------------------------------------- |
| விருது - பட்டம், பரிசு; செவிமடுத்து - கேட்டு, உரவோய் - அறிஞ! | |
| | |