|
| உளறித் திரியுமவ் வுலுத்தன் தலைதனைக் கொய்தமை வேன்'எனக் கூறி முடிக்கக் கைதவன் ஏம கானன் கயவனும் | |
| `நிற்பகை கொண்டோர் நெடுநாட் பிழையார் | 185 |
| சொற்பகை கொள்ளத் துணிந்தனன்; நின்னைச் சிங்கத் தேவனெனச் செப்பக் கேட்டுளேன்; தங்கத் தேவ! தயங்கேல் வினைமுடி' எனமுடி போட்டவன் ஏகினன்; இப்பால் | |
| | |
| மீனவன், பகைக்கு இரையாதல் | |
| | |
| ஊர்தொறும் ஊர்தொறும் உழைத்துவரு மீனவன் | 190 |
| போர்மிகப் பெற்றனன்; பின்பொரு நகரில் காரிருள் இரவிடைக் கண்ணயர்ந் திருந்துழி, சூரியுட் கையினர் துணிமறை முகத்தினர் ஈரிரு மாக்கள் இருள்நிறை மனத்தினர் | |
| மானவன் மீனவன் மார்பிடை அந்தோ! | 195 |
| ஈனவர் செயலினை எவ்வணம் இயம்புவல்! குருதிக் காட்டிற் குப்புறக் கிடந்தவன் பெறலருஞ் சுவடியைப் பேணிக் கலைமகள் நிலையஞ் சேர்க்கப் பணித்தபின் நெட்டுயிர் | |
| கலைமலி தமிழுக் காக்கிக் களித்தனன்; | 200 |
| | |
| அடிகள் இசை பரப்பப் பணித்தல் | |
| | |
| அப்பெருஞ் சுவடி! ஆயிழை நல்லாய்! தப்பரும் வீரன் தன்கையில் வாளென நின்பால் உற்றது, நீஇதைப் பரப்பி அன்பால் வெல்'கென அடிகள் நவில் | |
| நன்றெனப் புகன்று நங்கைஏ கினளே. | 205 |
--------------------------------------------------------------- |
| கைதவன் - கயவன், சூரி - கைக்கத்தி, தப்பரும் - குறிதவறாத. | |
| | |