15. இசைத்திறம் உணர எழுந்த காதை |
|
அடிகளார் ஆணை |
| பூங்கொடி யாகிய பொற்புடைச் செல்வி ஆங்கண் மீண்டதும் அருண்மொழிக் குரைப்போள் `மீனவன் திறமெலாம் விளம்பித் தமிழால் ஆன நல்லிசை யாண்டும் பரவிடச் | |
| சுவடியின் துணையால் தொண்டியற் றென்று | 5 |
| தவறிலா அடிகள் சாற்றினர்' என்றனள்; | |
| | |
| அருண்மொழியும் இசைதல் | |
| | |
| `ஆம்என் மகளே! அதூஉஞ் சாலும் தோமறு தமிழிசை துலங்குதல் வேண்டி மீண்டும் அப்பணி மேவுதல் வேண்டும்; | |
| பூண்டநல் லன்பரைப் பூரியர் கொலைசெய | 10 |
| ஈண்டிய துயரால் இசைத்தொழில் துறந்தோம்; இவ்வணம் நம்மனோர் இசைப்பணி வெறுத்திடின் செவ்விய அவ்விசை சீருறல் யாங்ஙனம்? துயரால் துறத்தல் தன்னல மாகும் | |
| அயரா உழைப்பால் அப்பணி புரிகுவம் | 15 |
| எண்ணி எண்ணி இம்முடி பேற்றேன்; அண்ணலும் அம்முடி பறைந்தன ராகலின் இன்னே அதனை இயற்றுதல் வேண்டும்; கொன்னே வாழ்நாள் குறைவது கண்டோம் | |
| விழுங்கி உறங்கிப் பிணியால் மூப்பால் | 20 |
| விழுந்து மாய்தல் வீணே யாதலின் புதுமைச் சுவடியின் பொருளெலாம் தெளிந்து போதல் நன்'றெனப் புகன்றனள் அருண்மொழி; | |
--------------------------------------------------------------- |
| அதூஉம் - அதுவும், சாலும் - பொருந்தும், பூரியர் - கயவர், கொன்னே - வீணாக. | |
| | |