|
பூங்கொடி வேண்டுதல் |
| `அன்னாய்! சுவடியின் அரும்பொருள் அனைத்தும் | |
| என்னால் ஆய்தல் எவ்வணம் இயலும்? | 25 |
| இசையின் திறனும் இயலின் திறனும் நவையற உணர்ந்த நல்லோர் தாமே இதன்றிறம் முழுவதும் எளிதின் அறிகுவர்; அதனதன் வகைஎலாம் அறிந்தனை நீயே | |
| முதன்முதல் இதன்பொருள் மொழிக' என்றனள்; | 30 |
| | |
| எழிலியிடம் செல்க எனல் | |
| | |
| `உயிர்நிகர் மகளே ஒன்றுரை கேண்மோ! இயலிசைத் திறமெலாம் என்னினும் மிகவே கற்றாள் நிறைபுகழ் பெற்றாள் ஒருத்தி உற்றாள் கொடுமுடி ஊரினள் அம்மகள் | |
| அறிவின் உரனும் ஆய்வின் திறனும் | 35 |
| செறியும் இயல்பினள் செம்மை வாழ்வினள் நரைமூ தாட்டி நம்போற் பொதுப்பணி புரிவது தொழிலாப் பூண்டவள்; அவள்தான் எழிலி என்னும் ஏழிசைச் செல்வி | |
| அன்னவள் தன்பால் அணுகி இதன்பொருள் | 40 |
| பழுதற உணர்க! பைந்தமிழ் இசைமுறை கெழுதகும் அதன்பால் கிளத்துவள் அம்மகள்; என்பாற் கற்ற இன்னிசைத் திறனும், அன்பாற் கற்ற ஆய்முறைத் திறனும், | |
| உன்பால் அமைந்த உருக்குங் குரலும், | 45 |
| முன்பே முறுகி எழுநல் லார்வமும் உடையாய் ஆதலின் உறுபயன் ஒருதலை; தடையாய் வருவன உளவேல் தவிரும்; | |
--------------------------------------------------------------- |
| கொடுமுடி - ஊரின் பெயர், கெழுதகும் - பொருந்திய, கிளத்துவள் - சொல்லுவள், ஒருதலை - உறுதி. | |
| | |