|
| அடிகளார் வினவுதல் | |
| | |
| சிந்தனைக் கருத்தளாஅய்ச் செந்தமிழ்ப் பாட்டால் | 100 |
| பிந்திய மக்களைப் பேணலும் ஆகும்; ஏற்றுள நம்பணி எளிதினில் வெல்லும்; சாற்றிய மீனவன் தான்விடு சுவடியும் வேற்றிடன் புகாஅது விளைபயின் நல்கப் | |
| பூங்கொடி கையிற் புகுந்தது நல்லாய்! | 105 |
| ஈங்குன துளம்யாது?' என்றலும் உரைப்போள் | |
| | |
| அருண்மொழி விடை | |
| | |
| `பெரியீர்! நும்மொழி பேணுதல் ஒன்றே அறிவோம் யாங்கள், ஆதலின் என்மகள் நெறிமுறை பிறழா நேரிசைச் செல்வி | |
| கொடுமுடி தந்த கோமகள் எழிலி | 110 |
| என்பாள் உழைச்செலீஇ இசையின் நுணுக்கம் முன்போய்ப் பெறுகென மொழிந்துளேன், அவளும் அன்பால் இயைந்தனள்' என்னலும், பூங்கொடி | |
| | |
| எழிலியின் திறம் வினவுதல் | |
| | |
| `குறள்நெறி வழுவாக் கொற்றவ! எழிலி | |
| திறன்முழு தறியும் விழைவினேன்' என்றனள்; | 115 |
| `அழியாப் புகழ்மிகுத் தடங்கி வாழும் எழிலி திறமெலாம் இயம்புவென் யா'னென | |
| விழிமலர்ப் பூங்கொடிக்கு விளம்பினர் அவரே. | 118 |
--------------------------------------------------------------- |
| புகாஅது - புகாமல், செலீஇ - சென்று. | |
| | |