|
| விலைபெறு பட்டும் விரிமலர் இதழும் குலவிட அதன்மிசைக் கொற்றவன் என்ன எழில்பெற இருக்கும் பெருநிலக் கிழார்முன் தொழுதவண் வந்தோர் சொற்றனர் சிலசொல்; | |
| | |
| வந்தவர் செய்தி கூறல் | |
| | |
| `இசையும் கூத்தும் நசையுடன் பேணும் | 135 |
| வசையிலாப் பெரும, வாழ்கநின் உள்ளம்! தமிழகச் செல்வி, தண்டமிழ்ப் புலத்தி அமிழ்தெனும் இசையில் அளப்பருந் திறத்தி, தொண்டுளம் பூண்டவள், தோகை அவள்முகம் | |
| கண்டவர் தொழுதிடும் கருணை நிறைந்தவள், | 140 |
| புண்ணியத் திருவினள், பூங்கொடிப் பெயரினள், நண்ணிஇத் திருநகர் நயந்திடும் வகையால் பண்ணிசை பரப்பும் பணியினள் உரவோய்! ஈங்கவட் கூஉய் இன்னிசை கேட்டுப் | |
| பாங்கறிந் தவட்குப் பரிசிலும் நல்கிச் | 145 |
| சீரும் சிறப்பும் செய்வன செய்து போற்றுதல் நும்போல் பொருளுணர் மாந்தர் ஆற்றிடுங் கடன்'என ஆர்வலர் இசைத்திடப் | |
| | |
| பெருநிலக்கிழார் அழைப்பு | |
| | |
| பெருநிலக் கிழவரும் பெரிதுளம் மகிழ்ந்தே | |
| `அருளுளங் கொண்டவள் ஆற்றுநற் பணியைப் | 150 |
| பிறரும் வியந்து பேசிடக் கேட்டுளேன், நெருநல் மாலை நேரிழை அவளைக் கண்டுரை யாடக் கருதினேன், ஆயினும் தொண்டுளம் பூண்டஅத் தோகையைக் காண்கிலேன்; | |
| ஒல்லையிற் காண்குவென், உயரிசை கேட்குவென் | 155 |
| ஒல்லும் வகையான் உறுதுணை புரிகுவென்' என்றுளங் கனிய இசைத்தவர் ஒருநாள் | |
--------------------------------------------------------------- |
| புலத்தி - புலமைமிக்கவள், ஆர்வலர் - அன்பர், நெருநல் - நேற்று. | |
| | |