|
| | |
| கிழார்முன் பூங்கொடி | |
| | |
| அகத்தும் முகத்தும் ஆர்தரும் உவகை | 185 |
| மிகுத்தன ளாகி மேலுயர் பொழிலின் நாப்பண் நிறுவிய நலம்பல பழுநிய காப்பமை மாளிகை கண்டனள் புக்குக் கூப்பிய கையினள் வாழ்த்திய வாயினள் | |
| மூப்பினை அறிய முடியா முகத்தின் | 190 |
| பெருநிலக் கிழவர் முன்னர்க் குறுகினள்; | |
| | |
| பெருநிலக்கிழார் வேண்டல் | |
| | |
| பெறலரும் பொருளைப் பெற்றால் என்னப் பெருமகிழ் வெய்திப் பெரியவர் வாழ்த்திப் `பெண்மையின் உருவே! கண்ணின் மணியே! | |
| புண்ணிய மகளே! பூங்கொடி அன்னாய்! | 195 |
| பண்ணிசை நுகரும் பரிவுடன் அழைத்தனென், என்செவி குளிர என்னகம் மகிழ நின்னிசை வார்க்க நேரிழை ஒல்லுமோ? புதுமைச் சுவடியிற் பொதிந்துள உண்மைகள் | |
| முதுமை யுற்றேற்கு மொழிகதில் லம்ம!' | 200 |
| எனவாங்கு இரப்பார் போல இயம்பினராக, | |
| | |
| பூங்கொடி பாடுதல் | |
| | |
| `பரப்புதல் இசையைப் பணியெனக் கொண்டுளேன், புரப்பது கடனெனப் பூண்டுளீர் நீவிர், | |
| தனியள் எனக்குத் தந்தநும் ஆணை | 205 |
| இனிதெனக் கொள்வேன், இயலும் வகையான் தெரிந்தென கூறிச் செல்லுதல் என்கடன், பெருந்தனம் உடையீர் பிழைபொறுத் தருள்க' என்றவள் பணிந்துரை இயம்பி மீனவன் | |
--------------------------------------------------------------- |
| ஆர்தரும் - நிறையும், நாப்பண் - நடுவில், பழுநிய - முதிர்ந்த, புரப்பது - காப்பது. | |
| | |