|
| பொங்கிய வெள்ளம் புகாவழிப் புகுந்தது; `தங்கிடன் புகுவேன் தையலை நகுவேன் எங்கவள் தப்புவள்? என்மனம் ஒப்புவள் | |
| ஆசை பகர்வேன் அவள்நலம் நுகர்வேன் | 130 |
| ஏசிய அவளினி என்கை தவறாள்' எனமனத் தெண்ணி எழுந்து நடந்தனன்; | |
| | |
| நள்ளிரவில் கோமகன் | |
| | |
| நள்ளிராப் பொழுதிற் கள்ளனை நிகர்ப்போன்; மெல்லென நடந்து நல்லவள் வதியிடன் | |
| மனத்துணி வுடனே மயங்கினன் செல்வோன் | 135 |
| தனைத்தெரி யாவகை தயங்கித் தயங்கிப் புறமும் அகமும் புழுங்கி வியர்க்க உடலும் உளமும் ஒருங்குடன் நடுங்க நெஞ்சினில் துடிப்பும் நெட்டுயிர்ப் பொலியும் | |
| விஞ்சும் முறையில் வெடவெடத் தேகினன்; | 140 |
| | |
| துருவன் தொடர்தல் | |
| | |
| ஒதுங்கியும் பதுங்கியுஞ் செல்லுமோ ருருவம் அரவப் படாஅவகை அடியெடுத் தேகினும் துருவப் பெயரோன் துயிலா விழியில் தெள்ளிதிற் றெரிதரத் துள்ளி எழுந்தவன் | |
| கள்ளச் செயலோன் கட்படா வகையில் | 145 |
| மெல்லத் தொடர்ந்தனன் மேவிய இருளில்; | |
| | |
| கோமகன் ஓர் அறையுட் புகுதல் | |
| | |
| பழிசெய அஞ்சாக் கழிமிகு காம வழியினிற் செல்வோன், வருவதும் ஓரான் ஆண்டோர் அறையின் அடைகத வொன்றைத் | |
| தீண்டினன் கதவம் திறந்தது கண்டோன் | 150 |
| `என்வர வறிந்தே இடுதாழ் இட்டிலள், | |
--------------------------------------------------------------- |
| அரவம் - ஓசை, படாஅவகை - படாமல். | |
| | |