பக்கம் எண் :

கோமகன் கொலையுறு காதைபக்கம் : 169

 
  இருளிடை வான மறுகினில் நின்று  
  காதலற் காணுங் கழிபே ரவாவொடு 100
  பேதலித் தாங்கண் பெருமூச் செறியக்
காற்றெனுங் காதலன் கள்வழி மலர்மணம்
போற்றித் தன்னுடற் பூசி வந்தனன்;
கொழுநற் காணலுங் கூசி அன்னவள்
 
  எழிலி எனுந்துகி லெடுத்துப் போர்த்துத் 105
  தன்முகம் மறைத்துத் தயங்கி நின்றனள்;
வீசுகை கொண்டதை விலக்கின னாகப்
பேசுகை யின்றிப் பெண்மையின் நகர்ந்தனள்;
தூசு பற்றினன் தொடர்ந்திடுங் காதலன்
 
  மாசறு மேகலைக் காசுடன் முத்தும் 110
  வீசிச் சிதறி வீழ்ந்தன வானில்
வீழும் அவையே மின்னும் உடுவெனச்
சூழும் அவ்விடைச் சுடர்விட் டெரிந்தன;
எனவாங்கு
 
  கற்பனை வடித்துக் கவிதையும் முடித்து 115
  நிற்பவன் நெஞ்சில் நேரிழை உருவம்
பொற்புட னாடல் புரிவது கண்டனன்;
 
     
 

கோமகன் காம எழுச்சி

 
     
  இரவுங் குளிரும் எரிதழல் மூட்ட
வருமந் நிலவுவாரிநெய் யூற்ற
 
  வாடையுந் தென்றலும் மாறி மாறி 120
  நீடவை வீசலால் நெஞ்சினிற் கனன்று
சுடர்விட் டெரிந்தது சொலற்கருங் காமம்;
கோமகன் அடங்காக் காமுகன் ஆயினன்;
நிறையும் பண்பும் இருகரை யாகச்
 
  செறிபுனல் நிகர்க்கும் நெறிபடு காமம் 125
  உறுகரை கடந்தது முறைமையும் இகந்தது;  

---------------------------------------------------------------

  தூசு - ஆடை.