|
| விண்ணகத் திருப்பினும் மண்ணகத் திருப்பினும் | |
| கண்ணிய காமங் கதுவப் பட்டார் | 75 |
| கண்ணுறக் கொழிந்து கண்ணீர் பொழிந்து புண்ணுறல் யாண்டும் புதுவதன்று போலும்! என்னிற் பெரிதே இடர்ப்பா டுற்றனை! நின்னிற் பிரிந்தோன் நிகழ்த்திய துயரால் | |
| எண்ணிப் பொழிந்த கண்ணீர்த் துளிதாம் | 80 |
| விண்ணிற் சிதறும் வெண்மீன் கொல்லோ? நின்னை இகழ்ந்தனன் நீவிழை யொருவன், என்னை இகழ்ந்தனள் யான்விழை யொருத்தி, விழைந்தவர் தம்மை வேட்டுளங் கொளாஅது | |
| குழைந்து தளர்ந்திடக் கொடுந்துயர் படுத்துதல் | 85 |
| இழிந்தவர் செயலாம்' எனப்பல புலம்பித் | |
| | |
| திங்களிற் பூங்கொடி | |
| | |
| திங்களை நோக்கினன் நோக்கிய திங்களில் செங்கயல் மீன்விழி பொங்கெழிற் பூங்கொடி வஞ்சியின் முகமலர் வடிவினைக் கண்டனன்; | |
| நெஞ்சினில் விஞ்சிய நீள்படர் காமம் | 90 |
| பஞ்சினில் தீயெனப் பற்றிப் படர்ந்தது; உடுத்திரள் சூழ்தர உயர்பெரும் வானில் நடுப்பட நின்றொளி நல்கிடும் அம்புலி, படிப்பவர் சூழ்தரப் பண்ணிசை யரங்கிற் | |
| படைத்திடும் பூங்கொடி பான்மையிற் றெரிதரக் | 95 |
| கற்பனைப் பெருக்கில் மூழ்கிக் களித்தனன்; முற்படு காதல் நினைவே முகிழ்த்தது; | |
| | |
| கோமகன் கற்பனை | |
| | |
| கருமுகில் உடீஇய நிலவெனுங் காதலி | |
--------------------------------------------------------------- |
| கண்ணிய - கருதிய, உறக்கு - உறக்கம், உடீஇய - உடுத்த. | |
| | |