பக்கம் எண் :

கோமகன் கொலையுறு காதைபக்கம் : 167

 
  இருட்பகை ஓட்டும் எண்ணரும் விண்மீன்
செருப்புலம் நோக்கிப் புறப்படும் மறவர்
 
  திறப்பட அணியணி வகுத்திடல் மான 50
  முறைப்படுத் தியக்கும் முதல்வன் போலவும்
ஒளியும் அளியும் உருவும் நிறைமதி
வெளிபடர் விண்ணக மறுகினில் போந்தது;
 
     
 

நிலவின் செயல்

 
     
  பாரி லின்பம் பயந்தவோர் பொருளே  
  மாறித் துன்பம் வழங்கலுங் கூடும் 55
  பரிசினை விளக்கும் பான்மைய தாகித்
திரியும் மதியம், விரிமலர்ப் பாயற்
கவவுக் கையர் காதலர் தமக்குத்
திவவுக் கோல்யாழ் தெளிநரம் பிசைபோல்
 
  தவமகிழ் வூட்டத் தண்ணொளி வீசிப் 60
  பிரிந்தவர் தம்மைப் பெருந்துயர்க் கடலுள்
வருந்திடச் செய்து வாயுலைக் குருகின்
வெய்துயிர்ப் பெறிய வெந்தழல் சிந்திக்
கைவிரித் தெங்குங் கலையெழில் வழங்கி
 
  மண்ணகம் நோக்கும் வளர்முகங் காட்டி 65
  விண்ணகப் பரப்பில் மெல்லென நகர்ந்தது;  
     
 

கோமகன் புலம்பல்

 
     
  பாயலில் நெளியும் படுதுயர்க் கோமகன்
காயும் நிலவைக் கண்ணிமைப் பிலனாய்
நோக்குழி நோக்குழி நெட்டுயிர்த் ததனை
 
  வீக்கிய துயரோன் விளித்து `வானச் 70
  சேக்கையில் என்போற் சிந்தை குலைந்து
நீக்கிய துயிலொடு நிலைதடு மாறிப்
போக்கொழிந் தனைகொல்? புகலுதி திருமதி!
 

---------------------------------------------------------------

  செருப்புலம் - போர்க்களம், அளி - கருணை, கவவு - தழுவிய, திவவு - நரம்புக்கட்டு, காயும் - கோபிக்கின்ற, ஒளிவிடுகின்ற.