|
| எஞ்சா துரைத்தனள்; இசைத்தவை கேட்டோன் | |
| நெஞ்சால் மகிழ்ந்து நேரிசைச் செல்வியைக் | 25 |
| | |
| துருவன் பூங்கொடியைக் காண விழைதல் | |
| | |
| காண்டல் விருப்பொடு காரிகை நோக்கி `யாண்டுளாள் அம்மகள்? யானவள் பணிக்கு நன்றியும் வணக்கமும் நவிலுதல் வேண்டும்' என்றவற் கம்மகள் இயம்புவோள் `அன்ப! | |
| | |
| சண்டிலி மறுமொழி | |
| | |
| பழுதறு கலைக்கே பொழுதெலாம் ஆக்கிக் | 30 |
| கழிபே ருவகை காணும் பெரியர் இருநிதிக் கிழவர் பெருநிலக் கிழார்பால் சுரிகுழற் பூங்கொடி சொல்லுரை யாட ஏகியோள் இன்னும் ஏனோ மீண்டிலள்! | |
| பாயிருள் நீங்கப் பகலவன் தோன்றிக் | 35 |
| காய்கதிர் வீசுங் கலைப் பொழுதத்துக் காண்குதும் இனிநீ கண்படை கொள்கெனச் சேண்படு நகர்வரூஉம் செழுநிதித் துருவன் பாங்க ரமைந்தவோர் பாயல் விரித்த | |
| ஓங்குபே ரறையகத் தொருபா லணைந்தனன்; | 40 |
| | |
| நிலவின் தோற்றம் | |
| | |
| வானகப் பள்ளியில் மாணவக் குழுவென மீனினம் ஆங்காங்கு மிடைந்து விளங்கிடப் பொருட்டிறந் தெருட்டும் ஆசான் போலவும் அருட்டிறம் வேண்டி அவரவர் குறையை | |
| விரித்துரை செய்வான் வியனகர் வாயிலில் | 45 |
| குழுமுங் குடியென உடுவினம் அணிசெயத் தொழுதகும் அரசன் தோற்றம் போலவும் | |
--------------------------------------------------------------- |
| பாயிருள் - பரவிய இருள், பொருட்டிறம் - பொருள்திறம், அருட்டிறம் - அருள்திறம். | |
| | |