பக்கம் எண் :

பக்கம் :172பூங்கொடி

 
  மரமென மண்ணென மதித்தனை கொல்லோ?
அரிவை யிகழ்ந்தனை! அறிவை யிகழ்ந்தனை!
 
  தெரிவை விரைவினில் தெரிவை திறமெலாம் 180
  இன்னே ஏகுதி இவ்வுழை யகன்றே
கொன்னே வளர்ந்தனை கொடியோய்' என்று
மின்னேர் இடையாள் வெகுண்டுரை கூறக்
 
     
 

கோமகன் காமவுரை

 
     
  `கண்டன மொழியாய்! காயும் விழியாய்!  
  சண்டிலி நின்பாற் சாற்றுவ துடையேன் 185
  கொண்டுள காதல் விண்டுளேன் அறிவாய்,
ஒண்டொடி மறுப்பின் உயிர்பெரி தன்றே!
நொடிநொடி யாக மடிவது தாளேன்,
விடியுமுன் காதல் விருந்துண் டமைவேன்,
 
  எத்துணைத் தடுப்பினும் இனிப்பொறேன் நெஞ்சில் 190
  அத்துணை உணர்ச்சி அழலாய் எரித்ததே;
உறுபசி கொண்டோன் உண்டியின் ஒப்புதல்
பெறுவதும் உண்டோ? பெரும்பசி கொண்டேன்;
உண்டியும் அருகி லுறுவது கண்டேன்
 
  உண்பது தடுப்பார் ஒருவரும் ஈங்கிலை' 195
  என்றுரை கோமகன் இழிமொழி கேட்டுத்  
     
 

துருவன் கோமகனைத் தாக்குதல்

 
     
  தன்றுணை யாகிய சண்டிலி கற்பினைச்
சென்றுண முனைந்தனன் என்றுளம் அயிர்த்துக்
கன்றிய நெஞ்சினன் கனல்படு கண்ணினன்
 
  துன்றி எழுந்தனன் துருவன், புலியெனப் 200
  பாய்ந்தனன் அவன்மேற் சாய்ந்தனன் கோமகன்;
காய்ந்திரு கைகொடு காமுகன் முகத்தில்
முழுவலி யாலவன் மோதினன் தாக்கினன்;
 

---------------------------------------------------------------

  தெரிவை - தெரிவாய், தெரிவை - பெண், கண்டன - கண்டிக்கும், கற்கண்டு போலும், காயும் - கோபிக்கின்ற, ஒளிவிடும்.