| | மகள் முறையே ஆவாள்' என்றனள். அனைவரும் மகிழ்ந்து, சிலநாள் அங்கு உறைந்து, நால்வரும் மணிநகர்க்குப் புறப்பட்டனர். வழியில் கோட்டை நகரில் இறங்கிக் கோனூர் வள்ளலைக் கண்டு மகிழ்ந்தனர். | | | கோனூர் வள்ளலின் மாளிகையில் மயில்வாகனரைக் காணும் பேறும் பெற்றனர். அவர் பதினான்கு ஆண்டு ஆய்ந்து எழுதிய யாழ்நூல் ஒன்றினைப் பூங்கொடிக்குத் தந்து, அதன் விளக்கமும் கூறினார். பின், மயில்வாகனர் அறிவுரைப்படி பூங்கொடி அயல்நாடுகள் பலவுஞ் சென்று, தமிழின் சிறப்பை உணர்த்தி, ஆங்காங்குள்ள அறிவியல் நூல்கள் பலவுங் கொண்டு தமிழகம் திரும்பினாள். புதுப்புது நூல்கள் படைத்தாள். தமிழ்மொழி குறித்து எதிர்ப்புரை பகர்வார் பலருடன் சொற்போர் புரிந்து தமிழுக்கு வெற்றித் தேடித் தந்தாள். | | | தமிழகத்தே மொழிப் பற்றுடையார் பலரும் கூடி, மாநாடு கூட்டி, மொழி காக்க அறப்போர் தொடுப்பதென்று முடிவு செய்தனர். அறப்போர் தொடங்கியது. அதனால் அருண்மொழி முதன்முதலாகப் பலரும் சிறை ஏகினர். பூங்கொடியும் பொங்கிய உணர்வால், பூரிப்புடன் சிறையகம் புகுந்தனள். சிறையில் அப்பெருமாட்டி நோய்வாய்ப்பட்டாள். நோயின் கொடுமை மிகுதிப்பட, மருத்துவமனைக்கு அவளை எடுத்துச் சென்றனர். அங்கும் நோய் தணிந்திலது. இதனைக்கண்ட அரசு விடுதலை ஆணைப் பிறப்பித்தது. அவ்வாணை வருமுன், பூங்கொடியின் உயிர் அவள் உடலிலிருந்து விடுதலை பெற்றது. | | | * * * * * | | | |
|
|