| | அறையை நோக்கிப் பதுங்கிப் பதுங்கி நடந்தான். இதனைக் கண்டு ஐயுற்ற துருவன், தவறுதலாக சண்டிலியின் அறையுட் புகுந்த கோமகனைக் கொலை செய்துவிட்டுச் சண்டிலியோடு ஓடி மறைந்தான். பெருநிலக்கிழாரிடம் விடைபெற்றுத் திரும்பிய பூங்கொடி, கோமகன் கொலையுண்டு கிடப்பதைக் கண்டு அஞ்சிப்பதறிக் கிழாரிடம் சென்றாள். கொலைச் செய்தியறிந்த ஊர்காவலர் இங்கு வந்து ஆய்ந்தனர். அப்பொழுது கிழாருடன் பூங்கொடி வர, அவளை ஐயுற்ற காவலர் சிறைப்படுத்தினர். செய்தியிதழின் வாயிலாக இதனையறிந்த துருவன் சண்டிலியோடு அறமன்றத்திற்கு வந்து, உண்மையைக் கூறி அவளை விடுவித்தான். | | | அருண்மொழியும் அடிகளும், பூங்கொடி சிறைப்பட்ட செய்தியறிந்து விரைந்துவந்து அவள் விடுதலை பெற்றதறிந்து மகிழ்ந்தனர். பூங்கொடி, ஒருவர்க்கொருவரை அறிமுகஞ்செய்தாள். கிழார் அருண்மொழி முகத்தை உற்றுநோக்கிக் கலங்க, அடிகளார் அதன் காரணம் வினவினார். அதற்கு அவர், `அருண்மொழி முகம் என் கடந்தகால நிகழ்ச்சிகளை நினைவூட்டியது', என்று சுவரில் மாட்டிய படமொன்றைக் காட்டினார். அருண்மொழி முகமும் அப்படத்திலுள்ள பெண் முகமும் ஒன்று போலிருந்தன. யாவரும் திகைத்தனர். `இவள் பெயர் என்ன?' என்று அருண்மொழி வினவினாள். பெருநிலக்கிழார் `நான் வாணிகத்தின் பொருட்டுக் காழகம் செல்லும் பொழுது கப்பலில் இவளைக் கண்டேன். எங்கள் விழிகள் கலந்தன. பின்பு காழகத்து இசையரங்கில் அவள் இசைகேட்டு மயங்கி அவளையை மணந்தேன். சில ஆண்டுகளில் பெண் மகவொன்றை ஈன்று உயிர்துறந்தாள். அத்துயரைக் குழந்தையின் முகம்பார்த்து மாற்றி வந்தேன். அம்மகளும் கட்டிளம் பருவத்தே காலன் வயப்பட்டனள். என் மனையாள் பெயர் ஏலங்குழலி' என்று விடைதந்தனர். இதுகேட்டு அலறிய அருண்மொழி, `அவள் என் உடன் பிறந்தவளே இளமையில் எங்களைப் பிரிந்தாள்' என்று முன்னைய வரலாறு உரைத்து, `இப்பூங்கொடியும் உங்கட்கு | | | |
|
|