பக்கம் எண் :

பக்கம் :240பூங்கொடி

  மணிமே கலையும் மார்பில் மணியும் 105
  அணிமிகு செவியில் அரியகுண் டலமும்
அணியும் ஒருத்தி ஆயிடை நின்றவள்;
 
 

தமிழணங்கின் உணர்ச்சிமொழி

     
  `என்னுயிர் மகளே! பொன்னிகர் மகளே!
நின்னலங் கருதிலை, என்னலங் கருதினை;
 
  உண்டுஞ் சுவைத்தும் உயிர்வாழ் உலகில் 110
  தொண்டுகள் புரிந்தே துவண்டனை நாளும்;
பெருத்த உடலினைப் பேணுவா ரிடையே
கருத்தினை வளர்த்தாய்! பொறுப்பினை வளர்த்தாய்!
உணவினை வேண்டி உழல்வா ரிடையே
 
  உணர்வினை ஊட்டி ஊட்டி வளர்த்தனை;
என்மகார் தாமே ஒன்னா ராயினர்;
நின்னால் எனக்கு நீணிலத் துரிமை
இன்னே வாய்க்குமென் றெண்ணி யிருந்தேன்;
கொன்னே கழிவதோ மின்னே' என்றனள்;
115
  தன்னே ரில்லாத் தையல் பூங்கொடி,
அன்னா யெனுஞ்சொல் அரைகுறை யாகச்
சொல்லா முன்னர்த் துணைவிழி கசிந்தது;
நல்லாள் விழிமலர் நனைந்தது குவிந்தது;
120
     
 

விடுதலை விடுதலை

 
     
  விடுதலை ஆணைத் திருமுகம் ஏந்தி  
  நெடுமகன் ஒருவன் நின்றனன் ஆங்கண்;
மருத்துவர் ஆங்கே மனமுவந் தோடி
ஒருத்தியின் முகத்தை உற்று நோக்கினர்;
விடுதலை விடுதலை விடுதலை என்றனர்;
உடலெனுஞ் சிறையுள் ஒடுங்கிக் கிடந்து
125
  படுமுயிர் சென்றது விடுதலை பெற்றே! 130
 

காதைகள் 31
வரிகள் 5243

 

---------------------------------------------------------------

  மகார் - மக்கள்.